வடக்கு, கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தி சமஷ்டி தீர்வுக்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும் -தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை

menon-narayan.jpg வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களை துரிதகதியில் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றி இயல்பு நிலையை உருவாக்கவேண்டும், இனநெருக்கடித் தீர்வுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும், இராணுவ முற்றுகையிலிருந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களை மீட்க வேண்டும், இதற்கான நடவடிக்கைகளை சமாந்தரமாக முன்னெடுக்க இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருடன் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை வலியுறுத்திக் கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli.
    palli.

    தேசநிர்வாகத்திடம் ஒரு கேள்வி??
    புலியை அரசு வென்றதா?
    அல்லது தமிழரை சிங்களர் வென்றனரா?
    அல்லது தர்மத்தை அதர்மம் வென்றதா?
    அல்லது அதர்மத்தை தர்மம் வென்றதா?
    அல்லாது போனால் சர்வதேசத்தின் செஸ் ஆட்டம் எமது நாட்டில் களம் அமைத்ததா?
    சரி அப்படியாயின் அரசின் வெற்றியில் அரசின் பங்கு என்ன? சர்வதேசத்தின் பங்கு என்ன? இது நியாயமான போராட்டமா?
    நிதர்சனமான வெற்றியா??
    புலிகளுக்கு தற்கால தோல்வியா? அல்லது
    தமிழர்க்கு நிலந்தர சோகமா???

    Reply
  • மாயா
    மாயா

    பல்லி, தமிழர் விடுதலைக்காக போராடப் போய் , தமிழரிடமே தமிழர் விடுதலை பெற போராட வேண்டியதாயிற்று? கடைசியில் தமிழர்களால் தமிழர் உயிர் விடுதலை பெற்றதுதான் நடந்தது. சிங்களவனிடம் தீர்வு கேட்டு போராடிய தமிழனுக்கு சிங்களவனே விடுதலை வாங்கி தீர்வு தரப் போகும் நிலையில் தமிழர்கள்?

    உலகத்துக்கே அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்ளும் மூடர்கள், இன்றும் ஏசு போல் தலைவர் உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கிறார்கள்.

    ஒரு மனிதனால் அமைதியையும் கொண்டு வர முடியும் = மகாத்தமா காந்தி
    ஒரு மனிதனால் அழிவையும் கொண்டு வர முடியும் = வே. பிரபாகரன்
    என்பதை இப்போது உணர முடிகிறது.

    வெகு நாட்களுக்குப் பிறகு நாட்டில் வேதனைச் சத்தங்கள் குறைந்துள்ளன.

    Reply
  • rohan
    rohan

    மாயா//வெகு நாட்களுக்குப் பிறகு நாட்டில் வேதனைச் சத்தங்கள் குறைந்துள்ளன.//

    அப்படியா?

    1997இல் ஒரு இடைத்தங்கல் முகாமில் 2 மாதம் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட எனது ஊர்ப் பையன் அடுத்த ஒரு வருடமாக உண்வுத் தட்டைக் கையில் எடுத்து ஆட்டி ஆட்டித் தான் சாபிடுவார். இலையான் வராமல் இருக்க அவர் முகாமில் செய்த முயற்சி.

    வேதனைச் சத்தங்கள் குறையவில்லை -நாம் தான் கேட்க மறுக்கிறோம். குடும்ப உறுப்பினர்களை இழந்து முகாம்களுக்கு வந்து சேர்ந்த்திருக்கும் பரிதாபநிலைமகள் பற்றிய செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனதசங்கரி கூட புலியிடம் இருந்த காலத்தை விட நம்மவர் அதிகம் சிரமப் பட்டதை வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இளம் ஆண்களும் பெண்களும் படுவதாகக் கூறப்படும் சிரமங்கள் பற்றிய விபரங்களை நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளில் உணமையின் பாதிப்பு வந்துவிடக் கூடாது அன்று நீங்கள் அடம் பிடிக்கலாம்.

    சிறுவ்னாக இருந்த போதே நான்நம்ப மறுத்த சித்திரகுப்தன் உணமையில் இருக்கிறான் என்று நான் பிரார்திக்கிறேன்.

    Reply
  • X and Y
    X and Y

    Dear every Commenter,
    It is very important to discus about our(Diaspora) future course. Please comment your political wish what should be done in Sri Lanka that you can feel and live as a proud citizen in Sri Lanka.Thank You.

    Reply