வடக்கு மாகாணத்தில் இருந்து 1990ம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு தற்பொழுது புத்தளம் மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் உள்ள முஸ்லீம் மக்களின் மீள்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்தநிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பானது இன்று (21.05.2009) ஆரம்பிக்கப்பட்டு நாளையும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட வேலைகள் முந்தல் பிரதேச செயலர் எம் ஆர் எம் அலி தலைமையில் குறித்த பிரதேசசபையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஏனைய பிரதேச சபைகளில் உள்ளவர்களும் கணக்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Thanga. Mukunthan
நியாயமாக எப்பவோ செய்திருக்க வேண்டியது! காலங்கடந்த நிலையில் அவர்களுக்குரிய அனைத்தையும் உடனடியாகச் செய்ய வேண்டும். அதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.