தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக வியட்னாம் அரசுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை ஒழிப்பதில் கடந்த சில வருடங்களாக வழங்கிய உதவிகளுக்கும், ஒத்துழைப்புக்கும் வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி தமது தனிப்பட்ட நன்றிகளையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளாரென்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, வியட்னாம் பிரதமர் குயென் டான் டங்குடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, நாட்டில் பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்வதில் அரசாங்கம் வெற்றி கண்டமை தொடர்பில் வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பும் வகையில், அரசாங்கத்தின் மீள்கட்டுமான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்ததில் வழங்கிய தலைமைத்துவத்திற்காக வியட்னாம் பிரதமர் தமது பாராட்டுதல்களை ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார். அத்துடன், தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளினதும் நீண்டநாள் நட்புறவு குறித்தும் கருத்துத் தெரிவித்த வியட்னாம் பிரதமர், எதிர்வரும் வருடங்களில் இது மேலும் வலுவடையுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை – வியட்னாம் ஆணைக்குழுவை விரைவில் கூட்ட வேண்டுமென்றும் அவர் பிரேரித்துள்ளார். அவரின் இந்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதுடன், காலக்கிரமத்தில் தாம் அந்நாட்டுக்கு விஜயம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வியட்னாம் வெளிவிவகார அமைச்சருடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அறிவுறுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
thevi
மகிந்தவின் பாராளுமன்ற பேச்சு தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் உரிமையையும் வழங்க தயாரில்லை என்பதையே காட்டுகிறது. எவ்வாறு புலிகள் தமிழ் மக்களுள் இருந்த தலைமைகளை அழித்துக் காட்டினார்களோ அதே வழியில் மகிந்த அரசு எஞ்சியுள்ள தலைவர்களை, மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களை கொன்றொழிக்க போகின்றது. ஆனந்தசங்கரி, டக்ளஸ், சம்மந்தன் இவர்களே அரசின் அடுத்த இலக்கு. தமிழினம் என்ன செய்யப் போகின்றது?
rohan
மன்னிக்கவும் தேவி.
“மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களை கொன்றொழிக்க போகின்றது.” என்று சொல்லிவிட்டு,
“ஆனந்தசங்கரி, டக்ளஸ், சம்மந்தன் இவர்களே அரசின் அடுத்த இலக்கு” என்றும் சொல்லியுள்ளீர்கள்.
கருணாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதைக் கண்டுள்ளீர்கள்.
“தமிழினம் என்ன செய்யப் போகின்றது?” என்பது பதில் தெரியாக் கேள்வி.
தமிழர்களுக்குப் புலிகள் தான் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தனர். இப்போது வெறும் பலவீனர்களும் சில வீணர்களும் தன் மிச்சமாயிருக்கிறோம்.
msri
மகிந்த அரசால்> டக்கிளசு -ஆனந்தசங்கரி போன்றவர்களுக்கு ஒரு பொல்லாப்பும் வராது! அவர்கள் மகிந்தாவின் சேவகர்கள் ஆச்சே!
thevi
“கருணாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதைக் கண்டுள்ளீர்கள்”
கருணா தற்போது கழுவுற நீரில் நழுவுகிற மீன். அவருக்கு இப்போதைக்கு ஆபத்து எதுவும் இல்லை. நாங்கள் அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களை உரத்துக் கூறினால் எம்மை மகிந்தா இல்லாதொழிப்பார் என்பது உள்வீட்டு செய்தி. தமிழ் இனம் குறித்து அக்கறை இருப்பவர்கள் யதார்த்தமான அணுகுமுறைகளை கையாண்டு ஒரு அரசியல் தீர்வை அடைந்து விட முயற்சிக்க வேண்டும். கூட்டமைப்பும் மக்களுக்காக இனிமேுலாவது செயற்பட வேண்டும். ஆமலும் புலத்தில் நடைபெறும் கூக்குரல்களால் இலங்கையில் முகாங்களில் சிக்கியுள்ள இளவயதினருக்கு களையெடுப்பு அதிகம் நடக்க வாய்ப்பிருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு இடத்தில் செய்யப்படுவதன் பலன் இன்னொரு இடத்தில் விளைச்சலாகின்றது. இதுவே அரசியல். “புலன்” பெயர்ந்தவர்கள் இனியாவது சிந்திக்க மாட்டார்களா?