ராஜீவ் காந்தியின் 18ஆவது நினைவு தினம் : சோனியா மலரஞ்சலி

rajeeve_.pngமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆந் திகதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இன்று அவரது 18ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

டில்லியில் ராஜீவ் சமாதி அமைந்துள்ள ‘வீர்பூமி’யில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதரா, இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணி, புதிய எம்.பி.க்கள் ஆகியோரும் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ராஜீவ் மறைந்து 18 ஆண்டுகளைக் குறிப்பிடும் வகையில் 18 குழந்தைகள் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Kulan
    Kulan

    உமது இறந்த 18ம் ஆண்டைக் கொண்டாடுவதற்கு ராசபக்சதை அணுகி இவ்வளவு தமிழ் உயிரெடுப்புக்களைச் செத்திருக்கிறா உம்மனைவி. ஏன் அவர்களின் மனங்கள் வெளிறி இருக்கின்றன? என்தேசத்தில் ஒருவிதவைக்காக எத்தனை விதவைகள் ஐபிகே காலத்திலும் வன்னிப்போரிலும் உருவாக்கப்பட்டார்கள். இத்துடனாவது உம் மனைவியின் இரத்த தாகம் அடங்குமா?

    Reply
  • மாயா
    மாயா

    பிரபாகரனது சாவுக்கு சோனியாவின் சாபம் மட்டும் காரணமல்ல, எத்தனையோ தாய்மாரின் சாபமும் காரணம். எத்தனையோ ஆயிரம் மக்களின் சாபமும் காரணம். (இதில் தமிழ் சிங்கள முஸ்லீம் இந்திய மக்கள் அடக்கம்)

    இறுதியில் பிரபாகரனை நம்பி வந்த மக்களையே கொன்று குவித்ததைப் பார்த்து இதயத்துள் புலம்பிய தாய்மாரின் மெளனமான சாபம் காரணம். பிரபாகரனை நம்பி வந்த குழந்தைகளை முன்னரங்குகளுக்கு அனுப்பிக் கொன்ற அந்த குழந்தைகளின், ஆவிகளின் சாபம்.

    Reply
  • rohan
    rohan

    ரொம்பச் சரி மாயா.

    இப்போது போயிருக்கும் தமிழ் இரத்தம் யார கைகளில்?

    ஏதோ விதத்தில் ஆவிகள் பழி வாங்கும் என்றால யார் சிக்கப் போகிறாகள்?

    Reply
  • msri
    msri

    குலன்> இனிமேலும் இந்திய மேலாதிக்கத்தின் இரத்த்ததாகம் அடங்காது! அதன் கோரப்பற்களுக்குள் இலங்கை அகப்பட்டுள்னது!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ராஜீவ் காந்தி விருது ஜனாதிபதி மகிந்தவுக்கு வழங்கப்பட உள்ளது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுதியிருக்காவிட்டால், இன்னும் பிள்ளைகளை இழக்கும் பெற்றோரும், கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த கணவனுமாக பட்டியல் நீண்டு கொண்டே சென்றிருக்கும்.

    Reply