அது பிரபாகரனே அல்ல-பாரதிராஜா

bharathiraja.jpgபிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள வீடியோ நம்பும்படி இல்லை என்றும், அவர் நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தனது அலுவலகத்தி் மீது நடந்த தாக்குதல் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து புகார் தந்த பின் நிருபர்களிடம் பேசிய அவர்,

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை ராணுவம் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆனால், அது பிரபாகரனின் படத்தை போல இல்லை. பிரபாகரன் சாகவில்லை. அவர் நலமோடு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவரை நான் நேரில் பார்த்துள்ளேன். டிவியில் வெளியான படத்துக்கும், பிரபாகரனின் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அட பாரதிராஜாவிற்கு அடுத்த படத்திற்கு கதைக்கரு கிடைத்து விட்டது. இதை வைத்தே பாரதிராஜா தனது அடுத்த படத்தை இயக்கலாமே. இலவசமாக நடித்துக் கொடுக்கவும் நெடுமாறன், சீமான், அமீர், இராமதாஸ் என்று பலர் இருக்கின்றார்கள்.

    Reply
  • Enaas
    Enaas

    எல்லோரும் பெரிய ஆழாக பார்கினம்….!!! என்ன தம்பியும் அரசியல் வரும் ஆசை போல….!!!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முன்பு இலங்கை அரசு பிரபாகரனைக் கொன்று விட்டதாக ஆதாரத்தைக் காட்டாமல் செய்தி சொன்ன போதுதான், பத்மநாதன்(கே.பி) பிரபாகரன் சாகவில்லை உயிருடனேயே இருக்கின்றார் என்று அறிக்கை விட்டார். ஆனால் பின்பு உண்மையிலேயே பிரபாகரன் இறந்ததை ஆதாரத்துடன் ஒளிப்பதிவாகவும் புகைப்படமாகவும் வெளியிட்ட பின் பத்மநாதன் வாயே திறக்கவில்லை.(இதை பிபிசி தமிழோசையும் இன்று(20.05.09)சுட்டிக் காட்டியது) முன்பு பத்மநாதன்(கே.பி) விட்ட அறிக்கையை வைவச்சுத் தான் நெடுமாறன், பாரதிராஜா போன்றவர்கள் இப்போதும் பிலிம் காட்டுகினம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பத்மநாதன் உண்மையாக தலைவர் செத்துட்டாரா என்று உறுதிப்படுத்த விட்டு வீசிய முட்டை அது? ஆனால் அது கூள் முட்டையில்லை, அவிச்ச முட்டை. ஆனால் பாவம் தலைவருக்கு அஞ்சலி கூட பண்ண விடாம பண்ணினதுதான் கொடுமை.

    தீபன் போன்றவர்கள் செத்த போது இருந்த அமைதி, இனி தொடரும் போல இருக்கு. இல்லை , தலைவர் நலமென்றால்? அடுத்த மாவீரர் தினம் வரை காத்திருப்போம். மகிந்த யதார்த்தவாதி என்று மறுபடியும் வந்து சொல்லாமலா இருப்பார்?

    Reply
  • Subramaniam Ravichandran
    Subramaniam Ravichandran

    பின்னர் கிட்டுவை கிரனைட் வீசி புலியை சேர்ந்தவர்களே கொல்ல முயன்ற போது காலை இழக்க நேரிட்டது என்று பலரும் ஒரு நம்ப முடியாத கதையை சொன்னார்கள் .இது பின்னர் மாத்தையாதான் செய்ததாக சிலர் சொன்னார்கள். இப்போது அரசாங்கம் கொல்லப்பட்ட சார்லஸ் அந்தோனி என்று பிரசுரித்த படம் கிட்டு மாதிரி இருக்கிறான் என்று பலரும் சொல்வதை தயவு செய்து நம்பவேண்டாம். பிரபாகரன் நிழலை கூட இராணுவம் நெருங்க முடியாது -நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்

    Reply
  • rony
    rony

    பாக்கியராஜை வைத்துப் படம் எடுக்க பாரதிராஜா முடிவெடுத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் மேக்கப்பை கலைக்காமல் பாக்கியராஜைக் காட்டி இவர்தான் உண்மையான பிரபாகரன் என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவும் கூடும். ஆனால் இலங்கை மக்களை ஏமாற்ற முடியாதென்பதை மட்டும் இவர் மறந்து விடக்கூடாது. தவறினால் பிரபாவின் ஆவி இவரை சும்மாவிடாது. பிச்சுக் குதறிடுமில்லே…..

    Reply