இந்த நாட்டில் இதன்பின்னரும் தமிழ் முஸ்லிம் பேகர் மலே என்பவர்கள் சிறுபான்மையினர் அல்லர். அனைவரும் இநநாட்டின் பிரஜைகளே. சிறுபான்மை என்ற சொல்லை மூன்று வருடங்களுக்கு முன்னரே எமது அகராதியிலிருந்து நீக்கியுள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நாடு முன்னுதாரணமான ஒரு சிரேஷ்ட நாடாகும். எங்களுடைய சிரேஷ்ட மன்னர்களான துட்டகைமுனு போன்றவர்களால் பேனப்பட்டு வந்த சிறந்த நற்பண்புகளபை பின்பற்றி சரணடைந்த அல்லது உயிரிழந்த எதிரியையும் நாம் கௌரவிக்க வேண்டும.; இது அரசாங்கத்திடம் மாத்திரமின்றி இந்நாட்டு மக்கள் மத்தியிலும் காணப்படும் ஒரு சிறந்த நற்பன்பாகும்.
எமது நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வர வேண்டும் என அழைப்பு விடுகிறேன். பல உலக நாடுகளில் வசிக்கும் எமது வைத்தியர்கள் பொரியியலாளர்கள் மற்றும் கணக்காளர்கள் போன்ற புத்தி ஜீவிகள் நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த மக்களுக்கு நாட்டின் ஏயை பகுதிகளைச் சார்ந்தவர்களுக்குப் போன்று ஜனநாயக உரிமையை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். எனினும் அது வெளிநாடுகளால் முன்வைக்கப்படும் தீர்வல்ல. ஒவ்வொரு நாடும் முன் வைக்கும் தீர்வுத் திட்டத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் இல்லை. எனவே எங்களுடையதான ஒரு தீர்வுத் திட்டத்தையே நாம் வழங்கவேண்டியுள்ளது.
அது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்ககொள்ளக் கூடிய நியாயமான தீர்வுத் திட்டமாக இருக்கவேண்டும். இதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பேயன்றி தடைகளை நாம் எதிர்பார்க்கவில்லை. எங்களால் முன்வைக்கப்படும் தீர்வு உலகுக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.
இப்போது இந்த நாட்டில இரண்டு சாதியினரே உள்ளனர். ஒரு சாரார் நாட்டுப் பற்றுடையவர்கள் மற்றவர்கள் நாட்டுப்பற்றற்றவர்கள் ஆவர். குறைந்த எண்ணிக்கையிலான ஒரு சாராரே நாட்டுப் பற்றில்லாதவர்களாக உள்ளனர். இன்று நாம் கண்டுள்ள வெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி மட்டுமல்ல தேசியக்கொடியின் கீழ் ஒன்று கூடிய அனைவரினதும் வெற்றியாகும்.
rohan
அகராதியிலிருந்து நீக்கப் படுவது எப்படி? தமிழர்கள் ஒரு தனி இனம் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் பெரும்பான்மை ஆகவோ சிங்கள மக்கள் தொகைக்கு ச்ம்மாக்வோ வரப் போவதில்லை.
அகராதியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் அவர்களை நாட்டிலிருந்தே நீக்க வேண்டும். அப்படி ஒரு வேலை செய்வதில் உங்களுக்கு இருக்கும் வல்லமையில் தமிழருக்கு ஒரு சந்தேகமும் இருக்காது.
நண்பன்
அவர்கள் எந்த இனமாகவும் இருக்கலாம் ஆனால் இனி அவர்கள் இலங்கையர்கள்.
இதை ஜேவீபீ சோமவன்ச கூட கூறியிருக்கிறார். இதை அப்பவே செய்திருந்தால் எத்தனை உயிர்கள் இன்று எம்மோடு இருந்திருக்கும்?