வன்னி மக்களுக்கு ஜப்பான் 50 மில்லியன் ரூபா நிதியுதவி

japan0001.jpgபடையினரால் மீட்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்கு உதவும் வகையில் ஜப்பான் அரசாங்கம் 50 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. ஜப்பான அரசாங்கப் பிரதிநிதி குனியோ தகாஷி நிதியுதவித் தொகையை ஜனாதிபதியின் விசேட ஆலோசகரான பஸில் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

வழங்கப்பட்ட உதவிப் பொருட்களில் 560 கூடாரங்கள்,  10000 பாய்கள்,  4000 பிளாஸ்டிக் விரிப்புகள்,  30000 ஜெரி கொள்களன்கள்,1000 நுளம்பு வலைகள் அடங்குகின்றன. இதேவேளை ஜப்பான் உணவுப் பொருட்களையும் உதவியாக வழங்க உள்ளது. அதன்படி 6255 மெட்றிக் தொன் அரிசி 132 மெட்றிக் தொன் டின் மீன் ஆகியன விரைவில் கொழும்பு வந்து சேரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *