”எமது தலைவர் எமது இனத்தின் தேசியத் தலைவர் எமது இனத்தின் மகாபுருசர் வீரமரணம் அடைந்துவிட்டார்!” எஸ் பத்மநாதன் த.வி.பு

Pirabakaran_VPoddu_AmmanSoosai_Colஎமது தலைவர் எமது இனத்தின் தேசியத் தலைவர் எமது இனத்தின் மகாபுருசர் கடந்த 17ம் திகதி இலங்கை இராணுவத்துடன் நடந்த நேரடி யுத்தத்தில் வீரமரணமடைந்த செய்தி எனக்குத் தெரிந்த நண்பர்களுடாக உறுதி செய்யப்பட்டது. தலைவர் வீரமரணமடைந்துவிட்டார்.

அந்த மகாபாரத்த்தில் கூறப்படும் கண்ணின் பாத்திரம் போல எனது தலைவன் தனது இரு வெற்றிப் புதல்வர்களை போர்முனைக்கு அனுப்பினார். வெற்றிப் புதல்வர்கள் என் தலைவனின் மடியில் வந்து வீழ்ந்தார்கள். சிங்கள இராணுவத்தின் குண்டடிபட்டு. இருந்தும் மனம் தளராத தான் முன்வைத்த தனது விடுதலைப் போராட்டத்திற்கு எமது மக்களின் விடிவை நோக்கி எமது மக்களின் சுதந்திரத்தை நோக்கி தான் எடுத்த பயணத்தை தொடர்ந்து சிங்கள இராணுவத்துடன் போராடி சண்டையில் வீரமரணம் அடைந்தது எம்மினம் மிகவும் கவலையுற்ற இந்த நேரத்தில் வீர மகா புருசரை தமிழினம் கண்டது ஒருவகையில் எமது இனத்திற்குப் பெருமைதான். அவருடைய மனைவி இறுதி மகன் பாலா இவர்களுடைய இவர்கள் பற்றிய செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

என்னைப்பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல்களின்படி தளபதிகள் பொட்டம்மான் சூசை போன்றவர்களும் தலைவனின் பாதையில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார்கள்.

செல்வராஜா பத்மநாதன் பிபிசி தமிழோசைக்கு இன்று (மே 24 2009)வழங்கிய செவ்வி

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதை தமிழழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்லத்துரை பத்மநாதன் இன்று அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் நேரடி மோதலில் கொல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

ஆனால் வே பிரபாகரன் மற்றும் தலைவர்கள் போராளிகள் குடும்ப அங்கத்தவர்கள் சரணடைந்த பின்னரே மரண தண்டனை வழங்கும் பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள் அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டு உள்ளனர்!!! த ஜெயபாலன்

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உடலைத் தகனம் செய்ததாக அறிவித்த பின்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் நலமாகவே உள்ளார் என்று நிச்சயமாகத் தெரிவித்து இருந்த சர்வதேச இணைப்பாளர் இன்று இதனை உறுதிப்படுத்த முன்வந்தமையின் பின்னணி தெரியவரவில்லை. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே புலிகளின் (முன்னாள்) தலைவர் பிரபாகரன்!

 செல்வராசா பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

24 வைகாசி 2009

தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்

தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.

கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு  எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.

அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.

தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.

போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெறியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.

தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

செல்வராசா பத்மநாதன்
அனைத்துலக வெளியுறவுச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்

முன்னைய செய்தி: பிரபாகரன் – பொட்டு அம்மான் – சூசை : புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கடைசியாக இடம்பெற்ற நேருக்கு நேரான மோதலில் இவர்கள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றது.

மூன்றாம் தரப்பிடம் சரணடைய விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் பலனளிக்காத நிலையில் கடைசியாக நடைபெற்ற மோதலில் இவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இவர்களுடைய உடலங்கள் இன்று மாலை கொழும்பிற்கு எடுத்துவரப்பட உள்ளதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 Comments

  • மாயா
    மாயா

    இறந்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    இத்தோடு மிகுதி மக்கள் பாதுகாப்பாக வாழ இனியாவது இறைவனது அருள் பாலிக்க வேண்டும்.

    Reply
  • ashroffali
    ashroffali

    தமிழ் மக்களின் விடுதலையை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் பிரபாகரன் எனும் தனி நபரின் தலைமைத்துவ மற்றும் அதிகார வெறி காரணமாக பாசிசப் போராட்டமாக பயங்கரவாதமாக மாற்றம் பெற்றது. எந்த மக்களின் விடுதலைக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதே மக்களின் கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தையும் உரிமைகளையும் பறித்ததும் இந்தப் போராட்டம் தான். அதன் காரணமாக தமிழ் மக்கள் அனுபவித்த சொல்லொணாத்துன்பங்கள் கண்ணீரை வரவழைக்குமளவுக்குக் கொடியவை. வரலாற்றின் நெடுகிலும் அதனை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

    அது மட்டுமன்றி சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய இலங்கையின் ஒட்டுமொத்த மக்களும் மட்டுமன்றி இலங்கையின் அயல் நாடுகள் பலவும் பிரபாகரனின் பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக பாதிக்ப்பட்டன. பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டிருந்தன.

    இவ்வாறான நிலையிலேயே பிரபாகரனின் மரணம் சம்பவித்துள்ளது. அதன் மூலம் இலங்கையின் நீண்ட கால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளது.

    சமாதானச் செயற்பாடுகள் மூலமாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எத்தனையோ வழிகள் மற்றும் சந்தர்ப்பங்களைத் தட்டிக் கழித்து விட்டு பாசிச வழி சென்று அதிகாரத்தை அடைந்து கொள்ள முயற்சித்தமையே இவ்வளவு துன்பங்களுக்கும் காரணம். பிரபாகரனின் முடிவு இப்படியாக ஏற்படவும் காரணம். கடைசியில் இதற்காகவா இவ்வளவு இழப்புகள் எனும் போது மனம் கனக்கின்றது. ஒரு நெடிய பெருமூச்சொன்று தான் கிளம்புகின்றது.

    என்னதான் இருந்தாலும் பிரபாகரன் இப்போதைக்கு மரணமடைந்து விட்டார். நான் ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் மரணித்த ஒரு மனிதனுடன் பகைமை பாராட்ட முடியாது. மரணித்தவர்களின் நல்ல விடயங்கள் பற்றி மட்டுமே பேசும்படி எனது மார்க்கம் போதித்துள்ளது. அந்த வகையில் இனி நான் புலிகள் இயக்கத்தின் தலைவர் பற்றி விமர்சனம் செய்ய மாட்டேன்.

    இனி வரும் காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்று பட்டு எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான காலம் கனிந்துள்ளது. அந்தப் பொன்னான வாய்ப்பு கைநழுவிப் போகவிடாமல் பயன்படுத்திக் கொள்வது எமது அரசியல் தலைமைகளின் கெட்டிக்காரத்தனமாகும்.அந்தப் பயணத்தில் இதுவரையான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமும் வேண்டுகோளுமாகும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பிரபாகரன் – பொட்டு அம்மான் மற்றும் சூசை அம்பியூலன்ஸ் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக களச் செய்திகளாக தெரிவிக்கின்றன.

    Reply
  • X and Y
    X and Y

    Who installed the killing culture in the Tamil politics was no longer alive. Weapons are defeated by weapons. What is next?

    Reply
  • thurai
    thurai

    இறந்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    இது சிங்களவரால் பய்ங்கரவாதத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியே. தமிழரின் உருமைகளிற்கான் போராட்டத்திற்கல்ல். இந்த இழப்புகள் தமிழரிற்கு என்ன சொல்லி நிற்கின்றன என்பதை முதலில் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இந்தநேரத்தில்… தமிழ்மக்களின் விடுதலைக்காக போரிட்ட தோழர் பத்மநாபா தோழர் சிறீசபாரட்ணம் எண்ணுக்கணக்கான போராளிகள் அறிவாளிகள் நாட்டைவிட்டு விரட்டி அடித்த இந்த ஜனநாயகமறுத்தோடிகள் அஜரகவாதிகள் மறைந்துவிட்டார்கள். உண்மையை மறைத்தவர்கள்-பொய் முகங்களுடன் மறைந்து விட்டார்கள். ஆயுதங்களை மறப்போம்! அறிவை ஆயுதங்களாக கொள்வோம்!! ஐக்கியத்தை பேணிப்பாதுகாப்போம்!!!.

    Reply
  • Nic
    Nic

    Captin V. Prabakaran is a natural born leader, it is a fact and acknowledged by the international communities. His leadership is irreplaceable and a place in srilanka’s history is inevitable.

    If this report found true, he is an unimaginable loses to the Eelam people, who he loved and fought for and scarified his life.

    Reply
  • padamman
    padamman

    இன்றுடன் மக்களை பிடித்த பயங்கரவாதம் முடிவுற்ரது எனலாம் இனிமேல் பாதிக்ககட்ட மக்களுக்கு என்ன? செய்யலாம் என்று சிந்தித்து செயல்படவேண்டும்.

    Reply
  • palli.
    palli.

    இறந்த எம் உறவுகள்.போராளிகள் அனைவர்க்கும் பல்லியின் குடும்பம் சார்ந்த வண்க்கங்களும் அனுதாபங்களும்.

    எனிமேலாவது மனிதனை மனிதன் அழிப்பதை நிறுத்தி ஜனனாயகமாக மனிதர்களை நிவகிக்க முற்படுவோம். அதற்கான மனிதர்களை தேடுவோம். அப்படியற்ற மனிதர்களையோ அமைப்புக்களையோ இந்த உலகுக்கு சுட்டி காட்டுவோம். நண்பர்களே இனிமேலாவது தவறான தலமை துதி பாடாமல் தகுதியான மனிதரை இனம் கண்டு எம்மக்கள் வாழ எம்மால் முடிந்ததை செய்வோம். மக்களை மனசார நினைத்து விட்டாலே தவறான எந்த தலமையையும் விமர்சிக்கும் மனம் தானாகவே வந்து விடும். என்னொரு பிரபாகரன் உருவாகாமல் இருக்கவும் எம்மக்கள் சுகந்திர காற்றை சுவாசிக்கவும் கருத்து முரன்பாடுகள் இருப்பினும் அதை கடந்து ஒன்றாய் செயல்படுவோம்
    நட்புடன் பல்லி.

    Reply
  • Raj
    Raj

    எவ்வளவோ திட்டவேண்டுமென உட்காருவேன் ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுக்கும். நான் மிகச்சிறியவன் இருந்தபோதிலும் 1985ம் ஆண்டிலேயே இந்த போராட்டத்தினது முடிவை ஆருடம் சொல்லி எத்தனையோ நண்பர்களை நல்வழிப்படுத்த முயன்று தோற்றுப்போய் நானும் நாட்டை விட்டு வெளியேறினேன். ஆனால் இன்று இவர்களை எப்படி அழைப்பது என்றே தடுமாறுகின்றேன். இவர்கள் செய்த இந்த 30 வருட கைங்கரியங்களை எண்ணி ஆத்திரம் கண்ணை மறைத்தாலும் தமிழன் என்ற வகையில் மனது கனக்கிறது. இது ஆயுதம் தூக்க முனையும் ஒவ்வொருவனுக்கும் பாடமாக அமைவதுடன் புலன்பெயர் உணர்ச்சியாளர்கள் உணர்ந்து ஒதுங்கினாலே போதும் எம்மினத்தை படைத்து இந்தப் படிப்பினையைத்தந்த அந்த தெய்வத்துக்குத் தெரியும் எம்மை வாழ்விக்க- நன்றி!

    Reply
  • thurai
    thurai

    //இது ஆயுதம் தூக்க முனையும் ஒவ்வொருவனுக்கும் பாடமாக அமைவதுடன் புலன்பெயர் உணர்ச்சியாளர்கள் உணர்ந்து ஒதுங்கினாலே போதும் எம்மினத்தை படைத்து இந்தப் படிப்பினையைத்தந்த அந்த தெய்வத்துக்குத் தெரியும் எம்மை வாழ்விக்க- நன்றி!//

    முக்கிய கருத்து.

    துரை

    Reply
  • palli.
    palli.

    //இன்றுடன் மக்களை பிடித்த பயங்கரவாதம் முடிவுற்ரது //
    இதில் பல்லிக்கு உடன்பாடு இல்லை.
    பெரிய கொடூரமான மிறுகம்தான் அழிந்துவிட்டது என செய்தி. ஆனால் எத்தனையோ சின்னமிருகங்கள் இந்த பெரிய மிருகத்தின் அழிவை எதிர்பார்த்து நாக்கை தொங்கபோட்டு திரிகிறார்கள். அதுக்கு இன்று வவுனியா முகாமில் செயல்படும் சில அமைப்புகள் எடுத்து காட்டு. தாம் விரும்பும் பிள்ளையை (தனது கிறுக்க்கு தனத்தை அரங்கேற்ற) விரல் சுண்டி அழைத்து செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறதே. ஆக புலி மட்டுமே எமக்கு எமன் அல்ல தோழமை போர்த்த பல புலிகள் இன்று அப்பாவி மக்கள் மத்தியில்.

    Reply
  • thurai
    thurai

    //Captin V. Prabakaran is a natural born leader, it is a fact and acknowledged by the international communities. His leadership is irreplaceable and a place in srilanka’s history is inevitable.//

    Like Hitler in Germany.

    thurai

    Reply
  • palli.
    palli.

    ////இது ஆயுதம் தூக்க முனையும் ஒவ்வொருவனுக்கும் பாடமாக அமைவதுடன் புலன்பெயர் உணர்ச்சியாளர்கள் உணர்ந்து ஒதுங்கினாலே போதும் எம்மினத்தை படைத்து இந்தப் படிப்பினையைத்தந்த அந்த தெய்வத்துக்குத் தெரியும் எம்மை வாழ்விக்க- நன்றி!//

    முக்கிய கருத்து துரை//
    அத்துடன் இந்த புலம் பெயர் புரட்ச்சியாளர்கள் புலி அமைதியாகி விட்டது என ஒதுங்கி கொள்ளாமல் இந்த தேவையற்ற சதிராட்டங்களை நிறுத்தி யூத மக்கள் போல் எம்மக்களும் ஒரு அமைதியான அத்திய அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்க்கையை ஆரம்பிக்க கருத்து முரன்பாடில்லாமல் செயல்பட வர வேண்டும்.

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    போரில் உயிர் துறந்த அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

    கடந்த காலத்தை பாடமாகக் கொண்டு, இனி ஒரு அழிவு ஏற்படாதிருக்க , அனைத்து மக்களும் இனியாவது ஒரு சமாதானமான சூழலை உருவாக்க பாடுபட வேண்டும்.

    தேசத் தலைவர்கள் முதல் அனைத்து மக்களும் சமாதனமான ஒரு தேசமாக இலங்கை உருவாக மனதார எண்ண வேண்டும். இந்த போருக்குள் அகப்பட்டு அனைத்து இன மக்களும் சொல்லொணா துயரத்தை அனுபவித்துள்ளனர்.

    போர் என்பதன் முடிவு வெற்றி, தோல்வியாக எண்ண முடியாது. ஒருவர் அழ மற்றொருவர் மகிழ்வது வெற்றியாகாது. அன்றும், இன்றும் மோதல்களில் படை வீரர்களாகவோ அல்லது போராளிகளாகவோ இறக்கும் போதெல்லாம் ஒரு சாரார் அழ மற்றொரு சாரார் மகிழ்ந்தே வந்துள்ளனர்.

    அனைவரும் மகிழும் தேசம் என்று உருவாகிறதோ அதுவே அந்த தேசத்தின் வெற்றியாகும்.அதுவே அந்த மக்கள் பெற்ற வெற்றியாகும்.

    அதற்காக அனைவரும் மனதார பிராத்தனை செய்வோம்.

    அதுவே இன்றைய தேவை.

    Reply
  • ashroffali
    ashroffali

    //அனைவரும் மகிழும் தேசம் என்று உருவாகிறதோ அதுவே அந்த தேசத்தின் வெற்றியாகும்.அதுவே அந்த மக்கள் பெற்ற வெற்றியாகும்//

    உங்கள் கருத்துடன் முற்றுமுழுதாக உடன்படுகின்றேன் அஜீவன். என் கருத்தும் அதுதான்.

    Reply
  • palli.
    palli.

    அஜீவன் இதுதான் என்றுமே பல்லியின் கனவு இதுக்காக யாருடனும் சேர்ந்து செயல்பட கருத்து பாடுன்றி செயல்பட பல்லி தயார்.

    இந்த நேரத்தில் அழிந்த புலியை விமர்சிப்பதை விட (எதிரியாயினும் இறந்த பின் மரியாதை செலுத்தும்படிதான் இந்து மதமும் சொல்கிறது)வாழ தவிக்கும் தமிழ் மக்களை வாழ வைக்க சிறிதேனும் உதவுவோம்.

    Reply
  • tax
    tax

    எல்லோருக்கும் சந்தோசப்படுவது போல் எதுவும் நடக்கவில்லை. புலித்தலைமை இன்னமும் உயிருடன் உள்ளது. நம்புவதற்கு கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும் அஸ்ரப் அலிக்கு.

    Reply
  • BC
    BC

    Tax , ஒரு ஆய்வு கட்டுரை ஒன்று எழுதுங்கோ.

    Reply
  • thurai
    thurai

    //எல்லோருக்கும் சந்தோசப்படுவது போல் எதுவும் நடக்கவில்லை. புலித்தலைமை இன்னமும் உயிருடன் உள்ளது. நம்புவதற்கு கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும் அஸ்ரப் அலிக்கு.//

    ஈழத்தமிழரிற்கு உதவாத புலித்தலைமயும் ஆதரவாளர்ழும் தொடர்ந்தும் இருப்பார்கள் இதுவே உண்மை.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //எல்லோருக்கும் சந்தோசப்படுவது போல் எதுவும் நடக்கவில்லை. புலித்தலைமை இன்னமும் உயிருடன் உள்ளது. நம்புவதற்கு கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும் அஸ்ரப் அலிக்கு.- Tax //

    அப்படியா, அப்ப உதை மனநோயாளர்களாகி தூதுவராலயங்களை அடித்து நொருக்குபவர்களுக்கும் வீதி மறிப்பிலீடுபடுபவர்களுக்கும் தெரிவித்து அவர்களுக்கு கொஞ்சம் தெளிய வைக்கலாமே??

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    ashroffali
    இன்றைய நிலையில் , அதாவது விடுதலைப் புலிகளின் தலைவரும் சக தளபதிகளும் போராளிகளும் சாவடைந்துள்ள நிலையில் , அவர்களுக்கான மரியாதையை அரசு செய்ய வேண்டும் என்பதையும் , இலங்கை முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் அச்சமின்றி இருக்கும் நிலைக்கு அரசாங்கம் முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வழி மக்களுக்கு தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

    1983 கறுப்பு ஜுலை போன்ற நிகழ்வுகள் இடம் பெறலாகாது என்பதே இந்த வேண்டுதலின் நோக்கம். தமிழ் மக்கள் சற்று அச்சத்துடனே இருப்பதை தொலைபேசி வழி பேசும் போது உணர முடிகிறது. அதை இல்லாமல் ஆக்கும் பொறுப்பு அரசு சார்ந்தது.

    “வாழ தவிக்கும் தமிழ் மக்களை வாழ வைக்க சிறிதேனும் உதவுவோம்” என பல்லி சொல்வதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அன்றும் – இன்றும் – நாளையும் அவர்கள் நம் தேசத்து மக்கள் என்பதை அனைவரும் பாகுபாடின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    அன்றும் – இன்றும் சாவடைந்த அனைவரும் நம் உறவுகள். அவர்களை நாம் தொடர்ந்தும் நேசிப்போம். அதன் மூலம் நம் உள்ளங்கள் ஒன்றுபடும். இன்னும் இழப்பதற்கு எதுவுமில்லை. இனி இழப்புகள் வேண்டாம்.

    இடைத் தங்கல் முகாம்களில் உள்ள உறவுகளது நம்பிக்கையையும் உருவாக்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

    அனைத்து மதங்களும் நேசிக்கவே கற்பிக்கின்றன. அந்த நேசம் அவனது உரிமை கிடைக்கும் போது தானாகவே உருவாகும்.

    அனைவரது உரிமைகளும் கிடைக்கப் பெற்று வாழ வழி அமைய வேண்டும். அதுவே நமது இதய பிராத்தனையாக வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலித்தலைமைகள் பல தவறுகளை விட்டு மக்கள் அழிவுகளுக்கு காரணமானவர்கள் என்ற உண்மைகள் ஒரு புறம் உறுத்திக் கொண்டிருந்தாலும், அவர்களின் அழிவில் சந்தோசப்படும் நிலையில் நானும் இல்லை. உயிர்கள் எனும் போது ஒவ்வொரு உயிர்களும் விலைமதிப்பானவை. இந்தக் கொடிய போரில் உயிரிழந்த பல்லின மக்களுக்கும் எனது அஞ்சலிகள்.

    Reply
  • ss ganendran
    ss ganendran

    ஒரு மனிதனின் இறப்பின் பின்னர் அவரை புகழாவிட்டாலும் இகழாமல் இருப்பதே சிறந்தது.
    புலிகளின் கொள்கைகளுக்கு நானும் எதிரானவனே இருப்பினும் எவரது இறப்பிலும் மகிழச்சிகொள்ளக்கூடாது.

    இறந்த்த அனைவருக்கும் எனது அனுதாபங்கள்

    Reply
  • Ravana
    Ravana

    புலிகள் ஏராளமாகத் தவறிழைத்ததிருக்கிறார்கள் என்பது உண்மை. அதேயளவுக்கும் அதற்கும் மேலாகவும் ஏனைய இயக்கங்களும் தவறிழைத்துள்ளன என்ற உண்மையை நாம் ஒரு போதும் சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. புலிகளின் தவறுகளுக்குள் இந்த ஏனைய இயக்கங்களின் தவறுகளும் புலன் பெயர்ந்த புலி எதிர்ப்பாளர்களுடைய தவறுகளும் மறைக்கப்பட்டு விடுகின்றன.

    தமிழ் மக்களுடைய அல்லது இலங்கையின் சிறுபான்மை மக்களுடைய அரசியல் உரிமைக்கான போராட்டத்தை தனியே புலிகளுக்குள் குறுக்கிப் பார்த்ததன் விளைவே புலன் பெயர் சனநாயகவாதிகள் இடதுகள் அனைவரினதும் தவறாகும்.

    இந்த யுத்தத்தை பயங்கரவாத்திற்கெதிரான யுத்தமாகப் பார்த்து மயங்குபவர்களுக்கு வரலாற்றலிருந்து பதில் கிடைக்க அதிக நாட்கள் எடுக்கப் போவதில்லை.

    ஏனைய சிறுபான்மையினங்களுக்கும் எதிராக பேரினவாதம் தனது கரங்களை அகல விரிக்க அதிக நாட்கள் எடுக்கப் போவதில்லை. புலியில் உள்ள கோபத்தால் யதார்த்தத்தையும் வரலாற்றையும் புரிந்து கொள்ளமறுப்பதன் விழைவை நாங்கள் சந்திக்க அதிக நாட்கள் எடுக்கப் போவதில்லை.

    Reply
  • Gee
    Gee

    கணேந்திரன்//ஒரு மனிதனின் இறப்பின் பின்னர் அவரை புகழாவிட்டாலும் இகழாமல் இருப்பதே சிறந்தது.புலிகளின் கொள்கைகளுக்கு நானும் எதிரானவனே இருப்பினும் எவரது இறப்பிலும் மகிழச்சிகொள்ளக்கூடாது.

    இறந்த்த அனைவருக்கும் எனது அனுதாபங்கள்//

    மிகவும் உண்மையான கருத்து. மேலே பலரும் இதையே வலியுறுத்தியுள்ளனர்.
    இச்செய்தி உண்மையாயிருப்பின் இறந்த அனைவருக்கும் எனது அனுதாபங்கள்..

    பல்லி //இந்த நேரத்தில் அழிந்த புலியை விமர்சிப்பதை விட (எதிரியாயினும் இறந்த பின் மரியாதை செலுத்தும்படிதான் இந்து மதமும் சொல்கிறது)வாழ தவிக்கும் தமிழ் மக்களை வாழ வைக்க சிறிதேனும் உதவுவோம்.//

    Reply
  • palli.
    palli.

    அஸ்ரப் அலியும் பல்லியும் மிகவும் கீரியும் பாம்பும் போல் அரசியல் பின்னோட்டம் விட்டவர்கள். அதுக்கு முன்னய காலத்து பின்னோட்டம் சான்று. இருப்பினும் எமது கருத்துக்கள் அனைத்துமே மக்கள்நலன் சார்ந்து அதுக்கு எதிராக செயல் படுபவர்கள் மீதுதனே தவிர எந்த உயிர் மீது அல்ல. ஏன் பார்த்திபன் துரை இப்படி பலர் புலியின் செயல்பாட்டை விமர்சித்தவர்கள்தான். ஆனால் இன்று அனைவரும் தற்போது நடக்கும் அழிவில் மகிழ்ச்சி கொள்ளவில்லை. புலி தலமை செயல் இழக்க வேண்டும் என்பதே எம் கருத்துக்கள். ஆனால் அவர்கள் சரனைடைய சந்தர்ப்பம் கிடைத்தால் அதையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்(துன்பவியல் சம்பவங்கள் நடக்கா விட்டால்) அகவே நண்பர்களே எமது பின்னோட்டம் பிணத்தின் மேல் ஏறி உயரம் பார்ப்பதை விட அவர்களுக்காக அழ முடியாவிட்டாலும் ஒரு சிலரது எம்மை கடுப்பேத்த எழ்தும் கருத்துக்காக நாமும் அப்படி அனாகரிகமாக எழுத வேண்டாமே. எமக்கான கடமை வாழ நினைக்கும் தமிழருக்காய் மன சுத்தியுடன் தொடரட்டும். இதை எழ்துவதால்பல்லி புலியா என சந்தேகம் வேண்டாம். பல்லி தமிழனாய் இருக்கவே என்றும் நினைக்கிறது. ஆகவே இறந்த அனைவர்க்கும் அனுதாபமும் இருக்கும் மக்களுக்கு ஆக்கபூர்வமான செயல்பாடுமே எமக்கு இன்றய தேவை.

    Reply
  • LORD OF THE RING
    LORD OF THE RING

    THE ORDER OF THE KING WAS DEAD, BUT YOU, Mr.PRABAKARAN, MADE “THE ORDER OF THE KING IS DEAD?”.

    Reply
  • msri
    msri

    சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக தலைவணங்காது> சரணடையாது> விட்டுக்கொடுக்காத தமிழ்ததேசியப் போரை தங்கள் இறுதி மூச்சுவரை நடாத்தியவர்கள்! வி.புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும்! துரோகிகளாக மாறாது> வீரச்சாவடைந்த வி.புலிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும்> தலைவணங்கி அஞசலி செலுத்துகின்றேன்! புலிகளின் தவறுகளில் இருந்து>பாடம் கற்று சரியான் பாதையை நோக்குவோம்! பிரபாகரனின் தவறுகளில் இருந்து பாட்ம் கற்கும் பல பிரபாகரன்கள் தோன்றத்தான் போகின்றார்கள்!

    Reply
  • murugan
    murugan

    இவர்களின் மரணங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க முடியவில்லை. இவர்கள் என்ன எங்களுடன் தேசம் நெற்றில் பின்னூட்டம் விட்டு கருத்து சண்டை பிடித்துக் கொண்டிருந்தவர்களா? ஒரு இனத்தையே கருவறுத்து மீண்டும் தளிர்க்க விடாமல் பண்ணியவர்கள்.

    இவர்களின் மரணங்களில் இருந்து தமிழ் சமூகம் புதிய பாதையில் சிந்தித்து நடைபோட வேண்டும்.

    Reply
  • meerabharathy
    meerabharathy

    “புலித்தலைமைகள் பல தவறுகளை விட்டு மக்கள் அழிவுகளுக்கு காரணமானவர்கள் என்ற உண்மைகள் ஒரு புறம் உறுத்திக் கொண்டிருந்தாலும்இ அவர்களின் அழிவில் சந்தோசப்படும் நிலையில் நானும் இல்லை. உயிர்கள் எனும் போது ஒவ்வொரு உயிர்களும் விலைமதிப்பானவை. இந்தக் கொடிய போரில் உயிரிழந்த பல்லின மக்களுக்கும் எனது அஞ்சலிகள்.”

    மேலும் ஒரு விடுதலைப் போராட்டம் இவ்வளவு மனித இழப்புகளின் பின்பும் இப்படிப்போய்விட்டது என்பது மிகவும் கவலை தரும் விடயமே!!!

    Reply
  • Anonymous
    Anonymous

    இது பயங்கரவாதத்திற்கு கிடைத்த தோல்வியே ஒழிய விடுதலைப்போராட்டத்திற்கான தோல்வியல்ல. உரிமைகள் மறுக்கப்படும் போது எல்லோருமாய் போராடுவோம்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //.அப்படியா, அப்ப உதை மனநோயாளர்களாகி தூதுவராலயங்களை அடித்து நொருக்குபவர்களுக்கும் வீதி மறிப்பிலீடுபடுபவர்களுக்கும் தெரிவித்து அவர்களுக்கு கொஞ்சம் தெளிய வைக்கலாமே??…//

    More than 1,000 Sri Lankans protested outside the British High Commission. Some protesters threw stones and burnt an effigy of UK Foreign Secretary David Miliband. A High Commission spokesman said it was “an outrage” that the Sri Lankan authorities let the demonstration become so violent.

    Reply
  • tax
    tax

    111 தடவை கொல்லப்பட்ட பிரபாகரன் இன்னமும் கொல்லப்படவில்லை….பிரபா மரணத்தை தாண்டிவிட்டார். இருந்தாலும் ஊராவீட்டு பிள்ளையளை கொல்லக்கொடுப்பதான எல்லோரின் விமர்சனத்தையும் தாண்டி விட்டார். பிரபாகரன் தனது மகனை இந்த போரில் போராடி வீரமரணமடைந்துள்ளார். அதேபோல் பொட்டரின் ஒரு மகனும் சில தினங்களுக்கு முன்னர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

    Reply
  • accu
    accu

    இவர்களின் அழிவுக்கு சந்தோசப்பட விரும்பவில்லை. ஆனால் அனுதாபம் தெரிவிக்க மனம் இடங்கொடுக்குதில்லை. எத்தனை காலமாக எவ்வளவு உயிர்களை ஈவிரக்கமில்லாமல் பறித்தவர்கள், எத்தனை கொடுமையான சித்திரவதைகளை செய்தவர்கள், ஒட்டுமொத்த தமிழினத்தையே 25 வருடங்களுக்கு மேலாக தம் கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பதற்க்கு இயலாதவர்களாக்கி வீரியமற்ற ஒரு இனமாக்கியவர்கள், இவை எல்லாத்துக்கும் மேலாக பலவந்தமாக வன்னிப்பெருநிலத்தை பிடித்து அப்பாவியான அந்த மக்களை தங்கள் உயிர்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்துக்காக சின்னாபின்னப் படுத்திவிட்டு தம் உயிர் போகும் கடைசிநிமிடம் மட்டும் தமிழ் மக்களுக்காக எதையுமே செய்யாத இவர்களை இவர்களின் அழிவுக்கு பிறகும் தமிழினம் மன்னிக்கக்கூடாது.

    Reply
  • X and Y
    X and Y

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
    பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.

    கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்குபவர்களும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்…………..

    Reply
  • indiani
    indiani

    இறந்த எம் உறவுகள்.போராளிகள் அனைவர்க்கும் வண்க்கங்களும் அனுதாபங்களும்.

    Reply
  • Kulan
    Kulan

    நாம் புலியையும் புலித்தமையையும் விமர்சித்தோம் எழுதினோம். அது நாம் எம்மக்களின்பால் கொண்ட அன்பும் மதிப்புமே. மனிதப் படுகொலைகளைக் கண்டித்தது போன்றே பிராகரனினதும் மகனினதும் மற்ற அனைவரினதும் கொலைகளைக் கண்டிக்கிறோம். உயிர்நீர்த்த என்தமிழ் இனத்தினருக்கு புலிகள் உட்பட என் அனுதாபங்களும் கண்ணீரஞ்சலிகளும்.

    Reply
  • Kulan
    Kulan

    நாம் இன்னுமொரு விடயத்தில் மிக அவதானமாக இருக்கவேண்டும். புலித்தலைமையை உடைத்தினூடாக வெற்றி பெற்றதாக அரசாங்கம் கருதினால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் கிடையாது. ஈராக்கைப்போல் குளவிக்கூட்டைக்கலைத்து விட்டதுபோல் ஆகிவிடும். இன்று புலிகளிடம் பயிற்சிபெற்ற பல இளைஞர்கள் நாட்டில் துப்பாக்கிகளுடன் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பசி ஏற்படும் போது அவர்களுக்குத் தெரிந்த இலகுவான முறையில் உணவு தேட முயல்வார்கள். இயங்கங்கள் சின்னாபின்னமாகக்கப்பட்டதினால் ஏற்பட்ட விளைவுகளை நாம் கண்டிருக்கிறோம். அரசு வெற்றி கொண்டாடுவது போன்ற முட்டாள் செயல்களை விட்டுவிட்டு சரியான அரசியல் தீர்வை முன்வைப்பதினூடாக மட்டுமே ஒரு நிரந்தர சமாதானத்தை இலங்கை எட்டமுடியும். அன்றேல் இன்னுமொரு புதிய சோமாலியா உருவாகும். ஒரு அப்பிள் பழத்துக்காக உயிரைக் குடிக்கும் நிலை வரும். சரியான திருப்திகரமான் தீர்வொன்றை தமிழர்க்கு முன் வைப்பதுடன் ஆயுதங்களை உடன்களையப்பட வேண்டும்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எதிரியோடு போரிட்டு மடிபவனே வீரனுக்கு அழகு.வீரனாக தகுதி படைத்தவன். இனவிடுதலைக்கான போராட்டத்தில் தன்இனத்தை வழிநடத்தி எதிரியை இனங்கண்டு தோற்கடிக்க முயற்சிப்பவனே அந்த இனத்தின் தலைவனும் ஆகிறான்.

    ஒரு இனப்போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி எதிரிஉட்புகவைப்பவனும் மக்களை அவலத்தை ஏற்படுத்துபவனும் அந்தமக்கள் அடிப்படைவசதிகளை ஏற்படுத்திகொள்ள முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறி அகதிஅந்தஸ்தில் வாழவழிசெய்து விடுவதும் ஒரு காலமும் போராட்டம் ஆகாது.
    மக்கள் எவ்வளவுக்கு அடிவாங்குகிறார்களோ அவ்வளவிற்கு போராட்டதிற்கு போராளி கள் வருவார்கள் என்பது பிரபாகரன் கொள்கையாக இருந்தது.இந்த கொள்கை தான் இன்று இறந்தது.

    கோடிக்கணக்கான பணங்கள் மக்களுக்கு ஒரு கீரைபாத்தியை கூட போட்டுக்கொடுக்க முடியவில்லை மாறாக கீரைப்பாத்தியையும் பறித்து போனர்கள்.போட்டவர்களையும் இழுத்துப்போனார்கள்.அதுதான் இன்று இறந்தது.

    பேரினவாதத்தின் அரசுதான் சிறுபான்மைஇனத்திற்கு பகைமையாக இருக்கமுடியுமே ஒழிய அந்தமக்கள் ஒருகாலமும் பகைமையாக இருக்கமுடியாது.இப்படியான வறட்டுகொள்கைகள் தான் இன்று இறந்தது.

    இப்படியான அனுபவங்களை கற்றுதேர்ந்து ஒரு தமிழ்மக்களுக்கு உரிய அரசியல் தலைமையை வகுப்போம். மதவெறியையும் இனவெறியையும் வென்று ஒருஐக்கிய இலங்கைக்காக பாடுபடுவோம்.

    இதுவே எம்மினத்திற்கு நாம் செய்யும் கடமையாகும்.

    Reply
  • KUNALAN
    KUNALAN

    “சிறிலங்கா படையினரின் முற்றுகையை உடைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வெளியேறினார்?” என்றும் “பொட்டம்மான் சூசை கபில்அம்மான் ரட்ணம்மாஸ்ரர் ஜெயம் வேலவன் லோரன்ஸ் போன்ற தளபதிகளும் தேசியத் தலைவருடன் சென்று விட்டதாகச் சொல்லப்படுகின்றது. இன்று அதிகாலை நந்திக் கடலில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலை தொடர்ந்து தேசியத் தலைவரும் தளபதிகளும் முற்றுகையை உடைத்திருக்கலாம் என்று சிறிலங்காப் படைத் தரப்பு மட்டத்தில் பேசப்படுகின்றது.” என்றும் புதுக் கதையொன்றை புலிஊடகங்கள் அவிழ்த்து விட்டிருக்கின்றனவே இது என்ன கணக்கு என்றுதான் புரியவில்லை. 7மாதங்களுக்கு முன்பே தலை முல்லையை விட்டு பாய்ந்து விட்டதாகவும் கதை அடிபடுகின்றது.

    குணாளன்

    Reply
  • palli.
    palli.

    //புலிகளிடம் பயிற்சிபெற்ற பல இளைஞர்கள் நாட்டில் துப்பாக்கிகளுடன் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பசி ஏற்படும் போது அவர்களுக்குத் தெரிந்த இலகுவான முறையில் உணவு தேட முயல்வார்கள். இயங்கங்கள் சின்னாபின்னமாகக்கப்பட்டதினால் ஏற்பட்ட விளைவுகளை நாம் கண்டிருக்கிறோம். அரசு வெற்றி கொண்டாடுவது போன்ற முட்டாள் செயல்களை விட்டுவிட்டு சரியான அரசியல் தீர்வை முன்வைப்பதினூடாக மட்டுமே ஒரு நிரந்தர சமாதானத்தை இலங்கை எட்டமுடியும்//

    மிக நிதானமான ஒரு ஊடகவியாளனின் கருத்து. இதை அரசு செய்ய தவறும் பட்ச்சத்தில் புலி எதிரிகள் கூட அந்த குட்டி புலிகளுக்கு அடைக்கலம் கொடுப்பார்கள்.

    Reply
  • KUNALAN
    KUNALAN

    //அரசு வெற்றி கொண்டாடுவது போன்ற முட்டாள் செயல்களை விட்டுவிட்டு சரியான அரசியல் தீர்வை முன்வைப்பதினூடாக மட்டுமே ஒரு நிரந்தர சமாதானத்தை இலங்கை எட்டமுடியும்.//குலன்.

    “அரசு இனி சரியான அரசியல் தீர்வை முன்வைப்பதினூடாக மட்டுமே ஒரு நிரந்தர சமாதானத்தை இலங்கை எட்டமுடியும்” என்று சொல்வது சரி. சரி என்பது மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் இன்றைய தேவையாகவும் இருப்பது தமிழ்மக்களுக்கான நீதியான தீர்வு என்பதுதான் சத்தியமான உண்மை. அதேவேளை அவர்கள் வெற்றியைக் கொண்டாடுவது முட்டாள்த்தனம் என்று குலன் நீங்கள் ஒற்றைவரியில் சொல்லிவிட்டுப் போக முடியாது. குழந்தைகளின் வயிற்றிலும் நெஞ்சிலும் குண்டுகளைக் கட்டி அனுப்பி வைத்துவிட்டு வெடித்துச் சிதறிய கையோடு “ஐயோ சின்னஞ்சிறுசு சிதறி விட்டதே” என்று கலங்குவதை விட்டு வெடி கொழுத்தி கொண்டாடும் ஏபபோக உரிமை எமக்கு மட்டும்தான் இருக்கிறது என்று சொல்வதுபோல் இருக்கிறது உங்கள் தொனி. அரசாங்கம் தனது படைவீரர்களை உற்சாகப்படுத்த வெற்றியைக் கொண்டாடித்தானாக வேண்டும். எடுத்ததற்கெல்லாம் சிங்களவன் முட்டாள் என்பதும்.. எல்லாவற்றிற்கும் ஏகபோக உரிமையாளர் நாமே என்ற மனோபாவத்திலேயே திளைத்திருப்பதும்… தயவுசெய்து இப்படியான மனோபாவத்திலிருந்து இனியாவது விடுபடுவோம் குலன். “தமிழ் மக்களுக்குரிய நீதியான நிரந்தரத் தீர்வை” முன்வைக்கும்படி இலங்கை அரசுக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கொடிகுடை தண்டு தடிகளை விட்டுவிட்டு பல்வேறு வழிகளாலும் அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முயற்சிகளை சிந்திப்போம்.

    குணாளன்

    Reply
  • palli.
    palli.

    குணாளன் அழிந்தது புலி. தமிழ் மக்கள் மட்டுமல்ல ஆயிரகணக்கான ராணுவமும் தான் பலரை விதவையாக்கிய போர் வெற்றியை கொண்டாடும் போது இழந்த அந்த மக்களையும் விதவைகளையும் கவனதில் எடுக்க வேண்டும் என்பதுதான் குயிலன் சொல்லியது. அதுக்காக புலி கொண்டாடியது அதனால் அரசும் அப்படியே செய்கிறது எனில் விரைவிலேயே பிரபாவின் நிலை மகிந்தாவுக்கும் வரலாம். உலகமே உருண்டை எனதானே படித்தோம்.

    Reply
  • balasooriyan2
    balasooriyan2

    குணாளன் அழிந்தது புலி. தமிழ் மக்கள் மட்டுமல்ல ஆயிரகணக்கான ராணுவமும் தான் பலரை விதவையாக்கிய போர் வெற்றியை கொண்டாடும் போது இழந்த அந்த மக்களையும் விதவைகளையும் கவனதில் எடுக்க வேண்டும் என்பதுதான் குயிலன் சொல்லியது. அதுக்காக புலி கொண்டாடியது அதனால் அரசும் அப்படியே செய்கிறது எனில் விரைவிலேயே பிரபாவின் நிலை மகிந்தாவுக்கும் வரலாம். உலகமே உருண்டை எனதானே படித்தோம்–palli

    Well Said

    Reply
  • balasooriyan2
    balasooriyan2

    புலிகளை ஒழித்துக்கட்டிய பிறகு இலங்கையில் தமிழ் ம‌க்களுக்கு அரசியல் தீர்வு வளங்கப்படும் என அறிவித்தவர்கள் இனி என்ன …………………பார்ப்போம்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //7மாதங்களுக்கு முன்பே தலை முல்லையை விட்டு பாய்ந்து விட்டதாகவும் கதை அடிபடுகின்றது.- குணாளன் //

    சிலர் உண்மையை மறைக்க கதை கட்டிவிடத்தான் செய்வார்கள். ஆனால் நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் தலை தான் தப்பிச் சென்றிருந்தால் மகனையும் உடன் அழைத்தல்லவா சென்றிருப்பார். மகணைக் காவு கொடுத்து தன் உயிரைக் காப்பாற்ற நினைப்பவரா தமிழ் மக்களை காப்பாற்றுவார்??

    சில இணையத்தளங்களில் சில ஒளிப்பபதிவுகள் வந்தவிட்டன. முடிந்தால் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்ககள். புலிகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த பணங்களும் கொல்லப்பட்ட (பிரபாகரனின் மகன் உட்பட) போராளிகளின் படங்கள். மற்றும் பிரபாகரன், பொட்டம்மான், சூசை ஆகியோர் பயணம் செய்த வாகனம் எரிந்த நிலையிலுள்ளது. வாகனத்ததிற்கே இந்த நிலைமையென்றால் உள்ளேயிருந்தவர்களின் நிலைமையை யோசிக்க முடியாதா?? அதனால்தத்தான் அரசாங்கம் அவர்களின் உடலங்களைக் காட்ட முடியாதுள்ளது போலும்……

    Reply
  • நண்பன்
    நண்பன்

    நாளை ஓரளவு விழிக்கும்?

    Reply
  • Jaffna Boy
    Jaffna Boy

    Veerarkal porkalathil veerachavai thazhuvikondanar.

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    Last modified on: 5/19/2009 12:33:28 PM Prabhakaran’s body found – Army Chief
    Commander of Sri Lanka Army General Sarath Fonseka has confirmed that the body of V.Prabhakaran, psychopathic leader of world’s most barbaric terrorist outfit Liberation Tigers of Tamil Eelam (LTTE) has been found short while ago (May 19).

    According to the defence sources, the LTTE leader who has ordered thousands of Tamil youth to give up their lives for him has tried to save his life until the last moment.

    Reply
  • ashroffali
    ashroffali

    தற்போதைக்கு (இலங்கை நேரம் பி.ப 1.00 மணி) பிரபாகரனின் சடலத்தை தொலைக்காட்சிகள் அனைத்திலும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இனியும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக யாராவது கதை விட்டுக் கொண்டிருந்தால் அனுதாபப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

    பிரபாகரனின் தலை பலத்த சேதமடைந்த நிலையில் கண்ணோரம் சன்னம் பாய்ந்த நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.

    பிரபாகரனுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பது தவிர இனி வேறொன்றும் இல்லை.

    Reply
  • Ranjan
    Ranjan

    “ஒரு பொல்லாப்பும் இல்லை. எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்” – யோகர் சுவாமிகள்.யாழ்ப்பாணம்.

    Reply
  • JONATHAN STEELE
    JONATHAN STEELE

    A long succession of Colombo governments has failed to address the Tamil minority’s legitimate complaints.

    With the Tigers’ defeat a fresh opportunity emerges. If Rajapaksa treats Tamils as a conquered enemy, who have to be corralled in camps and whose land has to be split up and occupied, he will sow the seeds for militancy in the generation to come.
    —-JONATHAN STEELE, THE GUARDIAN, LONDON

    Reply
  • JONATHAN STEELE
    JONATHAN STEELE

    The grievances of Tamils turned violent and acquired a separatist character only after decades of peaceful struggle failed. This is a moment of reckoning for Sri Lanka. At stake is the idea of a multi-ethnic, multilingual and multi-religious nation that doesn’t discriminate among its citizens.

    Colombo must not shy away from taking the help of the international community, especially India, to reconstruct Tamil homelands and rehabilitate the massive refugee population

    Reply
  • Rohan
    Rohan

    பார்த்திபன் //பிரபாகரன், பொட்டம்மான், சூசை ஆகியோர் பயணம் செய்த வாகனம் எரிந்த நிலையிலுள்ளது. வாகனத்ததிற்கே இந்த நிலைமையென்றால் உள்ளேயிருந்தவர்களின் நிலைமையை யோசிக்க முடியாதா?? அதனால்தத்தான் அரசாங்கம் அவர்களின் உடலங்களைக் காட்ட முடியாதுள்ளது போலும்……//

    தங்கள் செய்தி ஒலிபரப்புக்கு நன்றி.

    பிரபாகரன் உடலில் எரி காயம் ஒன்றுமில்லை. அவரது உடல் நந்திக்கடலில் சன்னம் பாய்ந்தபடி குப்புறக் கிடந்த்தாக அரச இணையத்தளம் சொல்கிறது. கதை கட்டுபவர் யார் என்றும் சற்று சொல்வீர்களா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Rohan, அரச தொலைக்காட்சி பிரபாகரன் பயணம் செய்த வாகனம் தாக்குதலுக்குள்ளானதாக அறிவித்தது. அதன் பின் எரிந்த வாகனத்தின் படத்தையும் ஒளிப்பதிவில் வெளியிட்டடிருந்தது. அதை வைத்துத் தான் “வாகனத்ததிற்கே இந்த நிலைமையென்றால் உள்ளேயிருந்தவர்களின் நிலைமையை யோசிக்க முடியாதா?? அதனால்தத்தான் அரசாங்கம் அவர்களின் உடலங்களைக் காட்ட முடியாதுள்ளது போலும்” என்று எழுதினேன். ஆனால் இன்று இராணுவம் பிரபாகரனின் உடலை நீர் நிலையிலிருந்து எடுத்து வந்திருக்கின்றது. அப்படியாயின் தாக்கதலுக்குள்ளான வாகனத்தில் பிரபாகரன் இருக்கவில்லை எனத் தெரிகின்றது. இன்று பிரபாகரனின் உடலை முழுமையாகக் காட்டுகின்றது. அத்துடன் மரபணுச் சோதனை மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துமுள்ளது. இன்று தான் இராணுவப்பேச்சாளரும் பிரபாகரனின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தப்பட்டதையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துமுள்ளார். நாளை உலக நாடுகளே உடலத்தை உறுதிப்படுத்தினாலும் நீங்கள் நம்பப் போவதில்லை. இதற்குப் பின்னும் நொண்டிச்சாட்டுடகளை கூறி யார் யாரை ஏமாற்றுகின்றார்கள் என்பது உலகிற்குப் புரியும்.

    Reply
  • BC
    BC

    //Ashroffali – இனியும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக யாராவது கதை விட்டுக் கொண்டிருந்தால் அனுதாபப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.//

    Ashroffali, அதோடு இன்னும் கதை கேட்டு கொண்டிருப்போருக்கு அனுதாபம் தெரிவிப்போம்.

    Reply
  • மாயா
    மாயா

    பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பது உண்மை. எப்படிக் கொல்லப்பட்டார் என்பதில் சில விடயங்கள் மர்மமாக இருக்கிறது. தெளிவாக அது புரிகிறது.

    அதாவது சரணடைந்த பின் கொல்லப்பட்டிருக்கலாம்? என்பதே அந்த சந்தேகம். அதற்கான முயற்சிகளில் கேபீ ஈடுபட்டிருந்தமையும் , ஆயுதங்களை வைக்க ஒப்புக் கொண்டதோடு , புலிகள் தோற்று விட்டனர் எனும் அறிக்கையையும் விட்டார். இவைகளை மீறி ஏதோ நடந்துள்ளது. அது வெளிச்சத்துக்கு இன்னும் வரவில்லை.

    Reply
  • Kumaran
    Kumaran

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப்பெரும் தலைவராகவும், தளராத மனங்கொண்டவராகவும், எத்தனையோ சோதனைகளையும், எத்தனையோ மனிதர்களையும் நேருக்கு நேராக சந்தித்தவராகவும், எத்தனையோ களநிலைகளைக் கண்டவராகவும் வாழ்ந்து, நின்று, வீழ்ந்து மரணித்துப் போன திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் இலங்கை நாட்டின் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியிருப்பதை எம்மால் உணர முடிந்துள்ளது. பிரபாகரனின் மரண ஒளிப்பதிவு வீடியோவே இலங்கையின் அனைத்து மக்களும் தவறாது பார்த்த ஒரு காணொளியாக திகழ்வதாக கணிப்புகள் கூறியிருக்கின்றன. 2009.05.19 அன்று (நேற்று) புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானும், கடற்புலித் தளபதி சூசையும் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் தப்பித்து சென்று கொண்டிருந்த வேளையில், படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்டதாகவும் அவரது உடலைக் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கையின் அனைத்து வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்திகளை அனல்பறக்க பரப்பிக் கொண்டிருந்தன.

    இதன் காரணமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளின் வீதிகளிலும், தெருக்களிலும் கோடிக்கணக்கான பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்டும், கூத்தும் கும்மாளங்களும் மேற்கொள்ளப்பட்டும் வெற்றிக் களிப்புக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டதை உணரக்கூடியதாக இருந்தது. அதேபோல் அந்த வெற்றியை பறைசாற்றும் முகமாக ஒருசில இடங்களில் சிங்கக் கொடிகளும், இன்னும் பல இடங்களில் பௌத்தக் கொடிகளும் ஏற்றப்பட்டதையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மை இளைஞர்கள் தெருக்களில் இறங்கி கூத்துக்களும், கும்மாளங்களும் என்று நாகரீகமாகவும், அநாகரீகமாகவும் ஆட்டம் போட்டதையும், சிலவேளைகளில் அவர்களிடமிருந்து இனரீதியான பாகுபாட்டு சந்தோஷங்கள் வெளிப்பட்டதையும் கூட எம்மால் உணர முடியுமாக இருந்தது. ஆக, இத்தனைக்கும் காரணம் ஒரு துப்பாக்கிச் சன்னம் மூலமாக மண்டையோடு சிதறச் செய்யப்பட்டு, விழித்த கண்ணும், ஏங்கிய எண்ணமுமாக மரணித்துப் போன புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உடலம்தான் என்றால் அது திண்ணமே.

    ஒரு ரணகளமான யுத்தக்களத்தில், ரவைகள் துளைக்காத உடம்போடு, தலையில் மட்டும் ஒரு துப்பாக்கி ரவை துளைத்திருக்க, எதிரிகளின் தலைவர் கொல்லப்பட முடியுமா? என்றால், அது நிச்சயமாக இல்லையென்றே பதில்வரும் வினாவாகும். அம்பியுலன்ஸ் வண்டியொன்றில் படுவேகத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்தவர் மீது தலையில் மட்டும் ஒரு துப்பாக்கிவேட்டுடன் கொல்லுதல் இயலுமான காரியமா? அதுவும் நடு நெற்றிப்பொட்டில் வைத்து கொல்லுதல் முடியுமா? முடியும் என்றால் படையினரை நோக்கியா தப்பிச் சென்று கொண்டிருந்தார் பிரபா நெற்றிப் பொட்டில் வைத்துக் கொல்லுவதற்கு!? இப்படியாக, பாதுகாப்புத் தரப்புக் கூறிய பிரபாவின் கொலைச் சம்பவம் எங்கும், எப்படியும் பொருந்துவதாகவே இல்லை. ஆக புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொலை நிகழ்ந்தது எப்படி??!!..

    இனிமேல் போராடுதல் முடியாது என்று உணர்ந்து கொண்ட பிரபாகரனும் அவரது உயர்நிலைத் தளபதிகள் ஐவருமாக மொத்தம் ஆறுபேர் கடந்த சனிக்கிழமை தினத்தன்று ஆயுதங்களைக் கைவிட்டு படையினரிடம் சரணடைந்திருக்கின்றனர். (பிரபாகரனின் சரித்திரம் முடிந்தது என்பதை சனிக்கிழமையே அதிரடிக்கு உறுதியான நம்பகரமான தகவலின் மூலம் தெரிய வந்தது) பிரபாகரனின் சரித்திரம் முடிந்தது என்பதை அன்றையதினம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தினால், அவர்கள் அத்தகவல்களை வெளியிடாது அவர் வரும்வரை காத்திருந்தனர்.

    இத்தருணத்திலேயே நேற்றுமுன்தினம் ஜோர்தான் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பி, இலங்கை மண்ணை முத்தமிட்டு இலங்கையில் காலடி வைத்தார். அதன் பின்னர் தகவல்கள் வெளியிடப்படும் என்று எல்லோரும் காத்திருந்த வேளையிலேயே நேற்று பிரபாகரன் அம்பியுலன்ஸில் தப்பிச் சென்று கொண்டிருந்த வேளையில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறின. ஆனால் உண்மையில் நேற்று போர் நடைபெறவும் இல்லை, பிரபாகரன் தப்பிச் செல்லவுமில்லை, படையினர் தாக்குதல் நடத்திக் கொல்லவுமில்லை. நடந்தது சரணடைந்திருந்த புலிகளின் தலைவரையும், அவரது சகாக்களையும் மண்டைப்பொட்டில் குறி போட்டு கொன்றது ஒன்று தான்.

    கடந்த 16ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியான செய்தியொன்றில் குறிப்பிடப் பட்டிருந்ததாவது, “சமாதான உடன்படிக்கை அமுலிலிருந்த காலப்பகுதியில் புலிகளினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் நான்குபேரும், இராணுவத்தினர் மூன்று பேருமாக ஏழுபேர், மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருந்த படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்பதாகும்.” இந்த அடிப்படையில் புலிகள் தாம் கைது செய்த சாதாரண நிலையிலான படையினரையே கொலை செய்யாது இத்தனை காலமும் தடுத்து வைத்திருந்துள்ள நிலையில், ஒரு இயக்கத்தின் தலைவரை, பல்வேறு வழக்குப் பதிவுகளுடன் தொடர்புடைய ஒருவரை, அதுவும் யுத்தத்தின் போது சரணடைந்த ஒருவரை கொல்வதென்பது ஒரு யுத்தக் குற்றமாக இருந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதும், பிரபாகரன் செய்த குற்றங்களின் காரணமாக அவருக்கெதிராக போடப்பட்டிருக்கின்ற வழக்குகளின் இறுதித்தீர்ப்பும் சாகும்வரை தூக்கில் போடுவதாகவே இருக்க முடியும் என்பதும் இங்கு மறுக்க முடியாத ஒன்றுதான்…

    அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றின் போது, பிரபாகரனிற்கு மன்னிப்பு வழங்குவதென்பது என் அகராதியில் கிடையவே கிடையாது என்றும் அதை வழங்க இலங்கை ஜனாதிபதி ஒருவரினால் மட்டுமே முடியும் என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தார். ஆக இலங்கை ஜனாதிபதி ஜோர்தானில் இருந்து வந்ததும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலாக இந்த மன்னிப்பு குறித்த விவாத, வியூகங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியிலேயே பிரபாகரனின் நடுமண்டையில் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கின்றார் என்பது எமக்கு தெளிவாக புலனாகின்ற அதேவேளையில், சில காலங்களுக்கு முன்பு கோத்தபாய ராஜபக்ஷ மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் மயிரிழையில் சிறு இரத்தக் காயங்களுடன் உயிர் பிழைத்ததும், அதன் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன் சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவை கண்ணீர் மல்க கட்டியணைத்து அழுததும் ஞாபகத்திற்கு வருகின்ற போது, பிரபாகரனின் நடுமண்டையில் குறிவைத்துக் கொண்றதும், இவர்களின் அன்றைய பாசக் கட்டியணைப்பும் ஏதோ ஒரு வகையில் பொருந்துவதாகவே தோன்றுகின்றது..!!!!
    -உண்மைவிளம்பி..-

    Reply
  • pragu
    pragu

    dear sirs
    i tink u dont have work any more boz praba died
    இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த ‘பெருமை

    Reply
  • indiani
    indiani

    அவமதிக்கப்பட்ட உடல்களையும் இறந்த உடல்களில் வீரங்களைக்காட்டும் படங்களையும் இதனூடாக தமிழர்களக்கு மிரட்டும் படங்களையும் இந்த இனவாதிகளின் இனக்குரோத படங்களையும் தேசம் வெளியிடாமைக்கும் இதன் தாற்பரியத்தை விளங்கி செயற்ப்படும் தேசம் ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ஒரு சிறந்த ஊடகம் இறந்த உடல்களை திறந்து காட்டுவதில்லை. அந்த கலாச்சாரத்தையும் மன நோயையும் தமிழரிடம் உருவாக்கியவர்கள் புலிகளே. அவர்கள் தாம் செய்யும் கொலைகளை அல்லது தண்டனைகளைக் கூட மக்கள் மத்தியில் வைத்தே செய்தனர். அதன் மூலம் தம்மிடம் ஒரு அச்சத்தை உருவாக்குவதற்கே அதை பகிரங்கமாக செய்தனர். அதே போல் ராஜீவ் காந்தி முதல் அனைத்து தலைவர்களது தாக்குதல்கள் கொலைகள் ஆகியவற்றையும் படம் பிடித்துக் கொண்டாவது வந்து பார்த்தே மகிழ்ந்தனர். அதை மக்களிடமும் காட்டி தமது வீரத்தை எடுத்தியம்பினர்.

    இப்போது அதுபோலவே பிரபாவது உடலையும் பார்க்க விரும்பியதன் விளைவு ஒரு அண்டவெயாரோடு இருக்கும் படங்களை சில இணையங்கள் வெளியிட்ட புலிகளது பேச்சுகளே இடமளித்தன. அதை கேபீயும் செய்ய வைத்தார். அல்லது அவரும் பிரபா உயிரோடு இருக்கிறாரா என நிச்சயப்படுத்த நினைத்தாரோ யார் அறிவார்? ( இனி சுருட்டடியதெல்லாம் உங்கள் சொத்து)

    ஆனால் எந்தவொரு சிங்கள இணையமும் அப்படி வெளியிடவில்லை. இது புலிகளால் பெரும்பாலான மக்களுக்கு பரவிய நோயாகிவிட்டது. உலகத்தில் சிதைந்த அல்லது பார்க்க முடியாத படங்களை ஊடகங்களில் காட்டுவதில்லை. அந்த ஊடக நியதி மற்றும் ஊடக கலாச்சாரம் கூட அறியாதவர்கள் புலிகளும் புலி வால்களும். அவர்கள் செய்தததை அவர்கள் அறுவடை செய்கிறார்கள்.

    //கடந்த 18ம் திகதி (திங்கட் கிழமை) பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரும் சிலரும் தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளனர். அவர்களை இராணுவம் புலிகளின் ஒரு பகுதியனர் என்றே தாக்கியுள்ளனர். பிரபாகரனோடு அவரது மெய் பாதுகாவலர்களும் வேறு சிலரும் தாக்குதலுக்கு உள்ளாகி நந்திக்கடல் பகுதியில் இறந்துள்ளனர். அவரோடு இறந்தவர்கள் அவரது குடும்பத்தினரா என்பது உறுதி செய்யப்படவில்லை. பிரபாகரன் கழுத்தில் சயனைட் கூட இருக்கவில்லை.//
    (இவை இராணுவ பேச்சாளரது செவ்வியொன்றில் இருந்து….)

    இது குறித்து சவேந்திர சில்வா பிரபாகரன் அடுத்தவர் கழுத்தில் சயனைட்டை தூக்கிவிட்டு சாப்பிடச் சொன்ன பிரபாகரன் தன்னுடன் சயனைட் வைத்திராததிலிருந்து உயிருக்கு பயந்தவர் என்று உடலத்தை பார்த்த பின் சொல்லியிருந்தார். இதே போன்ற கருத்தையே கருணாவும் தயா மாஸ்டரும் ஜோர்ஜ் மாஸ்ட்டரும் சொல்லியிருந்தனர்.

    அடுத்தவருக்கு செய்த உபதேசத்தை கடைப்பிடிக்காமல் ( குப்பி கடிக்காத) தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அநேக தமிழர்களை பலி கொடுத்த ஒருவராகவே பிரபாகரனை இப்போது உலகம் பார்க்கிறது.

    Reply
  • nanpi
    nanpi

    எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த துட்டகைமுணுவுக்குத் தெரிந்த நாகரீகம் அவனது வழித்தோன்றல்கள் என்று தம்மைத் தம்பட்டமடிக்கும் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களுக்குத் தெரியவில்லை. என்னதான் எதிரியாக இருந்தாலும் அவன் இறந்த பின் அவனது உடுப்புகளை அகற்றுவது அநாகரீகம் என்பது இங்கு கதை அளந்துகொண்டிருக்கும் உங்களுக்குமா புரியவில்லை?

    Reply
  • BC
    BC

    நண்பன் சொன்னது மிகவும் சரியே. சிலமாதங்களுக்கு முன்பு கூட அணைககட்டை உடைத்தவுடன் 1500 இராணுவத்தைத்தை பரலோகம் அனுப்பியாச்சு டக்ளஸ்சையும் போட்டாச்சு என்று நடத்திய கொண்டாட்டம் இப்பவும் ஞாபகம் வருகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //என்னதான் எதிரியாக இருந்தாலும் அவன் இறந்த பின் அவனது உடுப்புகளை அகற்றுவது அநாகரீகம் என்பது இங்கு கதை அளந்துகொண்டிருக்கும் உங்களுக்குமா புரியவில்லை?-nanpi //

    இலங்கை இராணுவத்தின் அநாகரீகச் செயல் அவர்களைத் தான் கேவலப்படுத்தும். அந்தச் செயலை எவரும் நியாயப்படுத்தவுமில்லை. இதேபோல் இன்று சிலரின் வீம்பால் பிரபாகரனின் உடலையே பிரபாகரனில்லையென்று வாதாடுவோர். அநாதைப் பிணமாக அவர் இருப்பதையும் பார்த்துச் சகித்துக் கொண்டு தானே உள்ளனர். முன்பு சுருட்டியதைக் காப்பாற்றவும் தொடர்ந்து சுருட்டவும் இவர்களுக்கு பிரபாகரனின் இருப்புத் தேவை. பலரின் இறப்பிற்குப் பின் எத்தனையோ பேர்களுக்கு மாவீரர், மாமனிதர், நாட்டுப்பற்றாளர் என விதம்விதமாய் பட்டங்கள் வழங்கியவர், இன்று அநாதைப் பிணமாக இருப்பது யார் குற்றம்??

    Reply
  • மாயா
    மாயா

    //nanpi on May 20, 2009 11:45 am எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த துட்டகைமுணுவுக்குத் தெரிந்த நாகரீகம் அவனது வழித்தோன்றல்கள் என்று தம்மைத் தம்பட்டமடிக்கும் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களுக்குத் தெரியவில்லை. என்னதான் எதிரியாக இருந்தாலும் அவன் இறந்த பின் அவனது உடுப்புகளை அகற்றுவது அநாகரீகம் என்பது இங்கு கதை அளந்துகொண்டிருக்கும் உங்களுக்குமா புரியவில்லை?//

    இலங்கை சரித்திரத்திலேயே இறந்தவர்களை திறந்து கண்காட்சிக்கு முதன் முதல் வைத்தவர்கள் புலிகள்தான். JVP புரட்சியின் போது இறந்த சிங்கள இளைஞர்களது சடலங்களைக் கூட அரசு கண்காட்சிக்கு வைக்கவில்லை.

    தமிழ் போராளிகளையும் கூட , அதாவது தற்கொலைதாரிகளைக் கூட வரைபடமாகவோ அல்லது மாஸ்க் செய்தோதான் ஊடகங்களுக்கு கொடுத்தது.
    புலிகள்தான் தரையில் இராணுவ சடலங்களை காட்சிக்கு வைத்து மக்களுக்கு காட்டி தமது வீர சாகசங்களுக்காக மகிழ்ந்தவர்கள். அன்மைக் காலம் வரை புலிகளின் இணைய தளங்கள் செத்தவர்களின் குருதியிலயே நனைந்தன. இது இத்தோடு நிற்கட்டும்.அது அனைவரும் அறிந்ததே.

    மக்கள் செத்தால்தான் தமிழீழம் கிடைக்கும் எனும் தலைவனின் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடுகள் இவை.

    அப்போது , தமிழ் இளைஞர்கள் பிடிபட்டு இறந்த போது வாகனங்களில் கட்டி இழுத்தும் சென்றுள்ளனர். ஆனால் அதை ஒருபோதும் ஊடகங்களில் காட்டவில்லை. புலிகளுக்குத்தான் அந்த மனநோய் இருந்தது. அதை எவராலும் மறுக்க முடியாது. ராஜீவ் காந்தி கொலையை படம் பிடித்து பார்க்க வேண்டும் என்ற பிரபாகரனின் ஆசைதான் சிவராஜன் குழுவினரைக் காட்டிக் கொடுத்தது. ஒரே ஒரு புகைப்பட கமராவில் இருந்த பில்ம் ரோல் கைப்பற்றப்பட்டதால் வந்த வினை. இல்லாவிட்டால் அது நிரூபிக்கப்பட்டு இருக்காது.

    அனுராதபுர விமான தளத்தை தாக்கிய போது எடுத்த காட்சி ஒளிநாடா மட்டுமல்ல கட்டுநாயக்கா விமான தள தாக்குதல் ஒளிக் காட்சிகள் கூட பல வெளிநாடுகள் வரை வந்தன. இவை அனைத்தும் புலி கீரோயீசத்தின் பாதிப்பு.

    மக்களுக்கான தண்டனைகள் கூட பகிரங்கமாகவே மக்கள் முன் நடந்தது. அரபு நாடுகளில் கல்லால் அடித்துக் கொல்வதை விமர்சிக்கும் நாங்கள் , நம் முன் நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொல்லும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கியவர்கள் புலிகள்தான்.

    மல்லாவியில் வாழ்ந்த எனது சகோதரியின் பள்ளிச் சிநேகிதி ஒருத்தி இந்திய இராணுவ வீரன் ஒருவனுடன் பேசிய குற்றத்துக்காக அனைத்து பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் துரோகியாக சுட்டுக் கொல்லப்பட்டாள். அவளுக்கு அப்போது வயது 17. இவை எல்லாம் மனநோயாளர்கள் செய்பவை. யாழ்பாணத்தில் சின்ன மென்டிஸ் எனும் புளொட் பொறுப்பாளரை அயன் செய்து கொன்றனர். இப்படி எத்தனை எத்தனை………..?

    பிரபாகரன் உடையின்றி இருக்கும் எந்தவொரு படத்தையும் சிங்கள இணைய தளங்களோ ஊடகங்களோ இதுவரை வெளியிடவில்லை. உண்மையில் பிரபாகரன்

    இராணுவம் தாக்கியழித்த அம்பியுலன்ஸில் கொல்லப்பட்டவர்களில் தலைவரும் இறந்து விட்டார் எனும் புலிகளின் கொமினிக்கேசன் வானோலி தகவல்கள் வழி இராணுவம் பிரபாகரன் இறந்துவிட்டார் என செய்திகளை வெளியிட்டது. ஆனால் அவை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. அதன்பின் கொல்லப்பட்டு அங்கு கண்டெடுத்த, பிரபாகரன் போன்ற உருவ அமைப்புள்ள சிலரது உடலங்கள் கொழும்புக்கு DNA டெஸ்ட்டுக்காக எடுத்து வரப்பட்டது. இதனிடையே பிரபாகரனின் DNAயை இந்தியாவிலிருந்து வரவழைக்க முயற்சிகளும் இடம்பெற்றன. (ராஜீவ் கொலை வழக்கு தொடர்பில் புலிகளின் பல தடயங்கள் அங்கு உள்ளன.மற்றும் டீஎன்ஏக்கள் அங்கு உள்ளன.)

    அச்சமயம் எதிர்பாராமல் நந்திக் கடலின் அருகே ஒரு பற்றைக்குள் மறைந்திருந்த ஒரு குழு மீது இராணுவம் தாக்கிய போதே பிரபாகரன் கொல்லப்பட்டார்.அங்கே பிரபாகரன் இருப்பது உண்மையில் இராணுவத்துக்குத் தெரிந்திருக்கவில்லை. இது எதிர் பாராமலே நடந்தது. அவரோடு பாதுகாவலர்கள் சிலரும் மற்றும் குடும்ப அங்கத்தவர்களாக கருதப்படும் சிலரும் கொல்லப்பட்டனர். அவர்கள் யார் என்பதை இன்னும் இராணுவம் அறிவிக்கவில்லை. மறைந்திருக்கும் புலிகளின் ஒரு பகுதியினர் என்றுதான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கடந்த 18ம் திகதி காலையில் நடந்தது. அதன் பின் முன்னைய உடல்கள் குறித்த விடயத்தை தள்ளிப் போட்டது.

    பிரபாகரன், புலிகளின் ஏனைய தலைவர்களுடன் இருக்காமல் தனியாகவே இருந்திருக்கிறார் அல்லது அவர்களிடம் இருந்து வெளியேறி இருக்கிறார் என்பதில் சரியான நம்பகமான தகவல்கள் இல்லை. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட போது ஏனைவர்களது கூட்டத்தோடு இருக்கவில்லை, தனித்து ஒரு சிறு குழுவாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

    பிரபாகரனின் உடலை மரியாதையின் நிமித்தம் கெளரவமாக ஊடகங்களில் காட்டிய போது அல்லது இறந்து விட்டதை சொன்ன போது ஏகப்பட்டவர்கள் நம்பவில்லை. அது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டன. இதில் கே.பத்மநாதன் சனல் 4க்கு கொடுத்த பேட்டி முதன்மை பெற்றது.

    இதனால் இறந்தவரது உடலை போஸ்மோட்டத்துடன் , எவராவது அடையாளம் காட்ட வேண்டும் எனும் நிலை அரசுக்கு ஏற்பட்டது. அதற்காக கருணா மற்றும் தயா மாஸ்டரை அழைத்துச் சென்று, இறந்துள்ளவர் பிரபாகரன்தான் என அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

    பொதுவாகவே இறந்த ஒருவரை அடையாளம் காட்டும் போது, இறந்தவரது உடலில் உள்ள துணிகளை எடுத்துவிட்டு உறவினர் அல்லது தெரிந்தவரைக் கொண்டு அடையாளம் காண்பது வழக்கம். அப்படித்தான் கருணா மற்றும் தயா மாஸ்ட்டர் முன் இடம்பெற்றது. அது நிர்வாணமாக்கப்பட்டதாகாது. இங்கும் மறைவிடம் மறைக்கப்பட்டுள்ளது. இப்படத்தைக் கூட தமிழ் இணையங்களே வெளியிட்டுள்ளன.இதை சிங்கள ஊடகங்கள் வெளியிடவில்லை.

    இப்படியில்லாமல் இருந்தால் கூட உடம்பைக் காட்டவில்லை. தலையொன்றை மாஸ்க் செய்து பொருத்தியிருப்பார்கள், அப்படி …. இப்படி பேச என பொய்களை கூறி வந்த புலிகள் மீண்டும் பொய் கதைகளை அவிழ்த்திருப்பார்கள். இன்னும் நம்பாதவர்கள் அநேகம். அதை வைத்து சிலர் தொடர்ந்து சிறிது காலம் பிழைப்பு நடத்தலாம். பாவம் அவர்கள்.

    இங்கு மிக முக்கியமானது?

    பிரபாகரன் உயிரோடு இருக்கிறா? இல்லையா? என உறுதியாக தெரிந்து கொள்ள பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என கேபீ ஒரு அறிக்கை ஒன்றை விட்டு , பிரபாகரன் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டார் என சிலர் கூறுகின்றனர். அது அப்பபடியும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். சுருட்டியவர்களுக்கு சுருட்டிவை புதையல். கொடுத்தவர்களுக்கு கொடுத்தது சுனாமி அனர்த்தம். அத்தோடு அவர்கள் தொல்லை முடிந்தது என நிம்தியாக பெருமூச்சு விட முடியாது?

    அடுத்து இலங்கை அரசு வெளிநாட்டு தொடர்புகளை தேடுவதில் இப்போது அக்கறை கொண்டுள்ளது?

    Reply
  • X and Y
    X and Y

    If you do not mind

    I can tell you that Mr. K. P is the main person who killed whole LTTE including Mr. Prabaharan and his family. The government of Sri Lanka is always sensitive about Diaspora Tamils because the Diaspora Tamils have got enormous ability that Sri Lanka never ever seen. The mistake Mr. K. P did was his latest comment via channel 4 to Diaspora Tamils.

    Now the LTTE structure is totally demolished. In the future the supporters of LTTE could not do any think in Sri Lankan internal politics, so the Diaspora Tamils should realize themselves whether they want to live in Sri Lanka with harmony or they want to live as slaves in western countries?

    Reply
  • ashroffali
    ashroffali

    அஜீவன்…
    //ashroffali இன்றைய நிலையில், அதாவது விடுதலைப் புலிகளின் தலைவரும் சக தளபதிகளும் போராளிகளும் சாவடைந்துள்ள நிலையில், அவர்களுக்கான மரியாதையை அரசு செய்ய வேண்டும் என்பதையும் இ இலங்கை முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் அச்சமின்றி இருக்கும் நிலைக்கு அரசாங்கம் முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வழி மக்களுக்கு தெரிவிக்க முயற்சி செய்யுங்கள்.

    1983 கறுப்பு ஜுலை போன்ற நிகழ்வுகள் இடம் பெறலாகாது என்பதே இந்த வேண்டுதலின் நோக்கம். தமிழ் மக்கள் சற்று அச்சத்துடனே இருப்பதை தொலைபேசி வழி பேசும் போது உணர முடிகிறது. அதை இல்லாமல் ஆக்கும் பொறுப்பு அரசு சார்ந்தது//

    உங்கள் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை கேட்டிருப்பீர்கள். வேலைப்பளு காரணமாக பின்னூட்டம் விடமுடியவில்லை. மன்னிக்கவும்.

    புலிகள் அமைப்பு இல்லாத போதிலும் எதிர்வரும் காலங்களிலும் தேசம் நெற்றின் ஆரோக்கியமான ஊடகப் பங்களிப்பும் அதன் மூலமான கருத்துப் பரிமாறல்களும் அத்தியாவசியமானவை. அவை அப்படியே தொடர வேண்டும் என்பதே எனது எதிர்பார்பார்ப்பாகும். இதுவரை காலமும் கருத்துக்களம் பகுதியில் நான் யாருடனாவது முரண்பட்டிருந்தால் அது ஒரு பொதுநோக்காக இருந்ததே தவிர தனிப்பட்ட கோபதாபங்கள் கொண்டதாக இல்லை. அந்த வகையில் தேசம் நெற் மூலமாக என்னுடன் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தவர்கள் மற்றும் எனக்கெதிராக தீவிரமான கருத்துக்களை வெளிப்படுத்தியவர்கள் என அனைவரும் எனது நண்பர்கள் தான். அந்த நட்புணர்வு எனக்குள் என்றும் இருக்கும்.

    இனி வரும் காலங்களில் வடககின் மீள் குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளில் நான் எனது பங்களிப்பை வழங்கச் சென்றுவிடுவேன். அதன் காரணமாக முன் போன்று அடிக்கடி தேசம் நெற் பக்கம் வருவது தடைப்படலாம். ஆயினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் தேசம் நெற்றின் கருத்துக்களத்தில் பதிவுகளை இடத் தவறமாட்டேன்.

    அடுத்ததாக இது வரையான காலமும் வன்னி மக்கள் தொடர்பாக புலம்பெயர் மக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் உண்மையாக இருந்தால் அந்த மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுக்கவும் அவர்களுக்கான நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்கவும் உங்களாலான பங்களிப்பை நல்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை உங்கள் முன் பணிவாக வைக்க விரும்புகின்றேன். அந்த மக்கள் எங்கள் சகோதரர்கள் உறவுகள் என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கு உதவ வேண்டியது எமது தார்மீக கடமையாகும்.

    நாளைய தினம் வெள்ளிக்கிழமை நான் வவுனியா நலன்புரி நிலையங்களுக்கான பயணமொன்றை மேற்கொள்ள இருக்கிறேன். தனிப்பட்ட நோக்கம் மற்றும் தகவல் திரட்டல் என்பன எனது பயணத்தின் நோக்கங்களாகும். அத்துடன் நிவாரண நடவடிக்கையொன்றையும் மேற்கொள்ளவுள்ளோம். அது பற்றிய விபரங்களை சனிக்கிழமையளவில் நான் தேசம் நெற் ஊடாக பின்னூட்டமாக தருவதற்கு எதிர்பார்க்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.

    தமிழர் சிங்களவர் முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக சகோரத்துவ உணர்வுகளைப் பரிமாறியபடி நேசங்களுடனும் நட்புடனும் வாழக்கூடிய சூழல் நிலவும் எதிர்கால இலங்கையில் புதியதொரு இலங்கையில் உங்கள் அனைவரையும் தாய்நாட்டுக்கு வரவேற்று உபசரிக்க இந்த அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்கான ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன். நமக்கிடையிலான கடந்த கால முரண்பாடுகளுக்குப் பதிலாக ஆரோக்கியமான புரிந்துணர்வொன்றைக் கட்டியெழுப்புவோம். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று உங்கள் அனைவருக்கும் நான் சகோதர நட்புடன் அழைப்பு விடுக்கின்றேன்.

    உங்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலம் கிட்டுவதாக. அனைத்து மக்களும் நிம்மதி சந்தோசமான சூழலில் இணைந்து வாழத்தக்க சமாதான சூழல் நம் தாய்நாட்டில் மலரட்டும் என்ற மனமார்ந்த பிரார்த்தனைகளுடன் இந்தப் பின்னூட்டத்திற்கு முற்றுப் புள்ளி இடுகின்றேன். நன்றி. வாழ்த்துக்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சரணடைய மாட்டோம்: விடுதலைப் புலிகள்
    First Published : 24 May 2009 05:03:11 PM IST.”DINAMANI.COM”
    COMENTS:”கலைஞ்சர் கருணாநிதியின்” அமைச்சரவை(மத்திய) பதவி ஏற்பதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர்?,மலேசியாவிலுள்ள “கே.பி.” காத்துக் கொண்டிருக்கிறார்.பிறகு அதிகார பூர்வமாக,”பிரபாகரனின் மறைவை” அறிவிப்பார்கள்.உடனே “கலைஞ்சர் கருணாநிதி”,ஒரு “கிதாஞ்ச்சலி ஒப்பாரி” வைப்பார்(அண்ணா சாவு), பிறகு அழகனின் திட்டம் நிறைவேறும்.இவர்ககளின் சொத்துக்களை பாதுகாக்க இது தேவை படுகிறது.இதற்கு வே.பிரபாகரன் தடையாக இருந்தார் போட்டு தள்ளி விட்டார்கள்.
    By kali yuga 5/24/2009 5:17:00 PM

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலித்தலைவர் உயிரோடிருக்கின்றார். இது 1000 மடங்கு நம்பகமான செய்தி எனப் புலுடா விட்டவர்கள் எனி என்ன சொல்லப் போகின்றார்கள். கே.பி இன்று உத்தியோகபூர்வமாக பிரபாகரன் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

    Reply
  • விக்கி
    விக்கி

    தலைவரின் கொலை பத்மநாதனின் சதி….!!!

    விடுதலைப்புலிகளின் சர்வதேச சொத்துக்கள் அனைத்தையும் தன்வசம் ஆக்கிக்கொண்ட பத்மநாதன் இன்று தலைவர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளார். இந்த பத்மநாதன் “மகிந்தவின் ஏஜன்ட்” என நம்பகரமாக தெரியவந்துள்ளது. எம் தமிழ் உறவுகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. எமது விடுதலைப்போராளிகளின் உன்னத தியாகங்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது ஜனநாயக வழி நின்று போராடுவோம் என்ற அறிவிப்பு.

    விக்கி

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விக்கி
    கே.பி தலைவர் சாகவில்லை உயிரோடிருக்கின்றார் என்று அறிவித்த போது இனித்தது. இப்போ அதே கே.பி உண்மையை ஒத்தக் கொண்டதும் புளிக்கின்றதோ. உண்மையில் கே.பி உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைப்பாட்டிற்கு வந்ததற்கான காரணமே புலம் பெயர்ந்து வழும் வல்வெட்டித்துறை மக்களே. பிரபாகரன் இறந்ததை புலத்துபுலிகள் உத்தியோகபூர்வமாக ஒத்துக் கொள்ளாததால், அம்மக்களால் பிரபாகரனுக்கு உளப்பூர்வமான அஞ்சலியைக் கூட நிகழ்த்த முடியாமல் கொதித்துப் போனார்கள். அதனால் அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால்த் தான் இன்று பகிரங்கமாக அறிக்கை விட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    Reply
  • thevi
    thevi

    மாயா இந்த விபரங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? நீங்கள் சொல்வதில் சாத்தியங்கள் இல்லாமல் இல்லை. என்க்குள் எழும் ஒரு கேள்வி- ஏன் மகிந்த அவசரமாய் நாடு திரும்பினார்.

    இன்று கே.பி, பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார். புலிகளின் இணையத்தளங்கள் அதை ஏற்கவில்லை. மேலும் குழப்பங்கள் அதிகரிக்கின்றன. பிரபாகரனை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒன்று மட்டும் உறுதி- பிரபாகரனின் மரணத்தை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களுக்கு அதன் மூலம் கொளுத்த லாபங்கள் கிடைக்க இருக்கிறது.

    Reply
  • thevi
    thevi

    இந்த பத்மநாதன் “மகிந்தவின் ஏஜன்ட்” என நம்பகரமாக தெரியவந்துள்ளது.”

    விக்கி என்ன கதை பேசுகிறீர்கள்? உங்கள் தலைவரால் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டவர்தானே பத்மநாதன்? தலைவர் தான் உளவு விடயங்களில் கரைகண்டவராச்சே. தவறான ஆளை தேர்ந்தெடுத்து விட்டாரா?

    Reply
  • thevi
    thevi

    “புலிகள் இயக்கத்தை நாம் ஒருபோதும் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல என்று கூட்டமைப்பின் யாழ் பா.உ சுரேஸ் பிரேமசந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
    புலிகளின் தலைவர் இறந்த செய்தி கேட்டவுடனேயே தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ள சுரேஸ் பிரேமசந்திரன் தற்போது தமிழ்மக்கள் முன்னிலையில் இரண்டாம்தரம் குத்துக்கரணம் அடித்துள்ளார்.

    ஏற்கனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபாவை புலிகள் சுட்டு கொன்றபின்பும் பதவிக்காக பத்மநாபாவை முதுகில் குத்திவிட்டு பலமாக இருந்த புலிகளின் பின்னால் ஒழிந்திருந்தவர். கோள்கைாக்காக அவரவர் பாதையில் பத்மநாபாவோ பிரபாகரனோ கொல்லப்பட நேர்ந்தபோதிலும் வருவாய்க்கும் வசதிக்கும் வால்பிடித்து வாழ்ந்த ஈழத்தமிழினத்தின் ஈனப்பிறவி பிரேமசந்திரன் என்பதை நெருப்பு முன்பும் ஒரு தடைவ சுட்டிக்காட்டியிருந்தது.”

    சுபத்திரனை காட்டிக் கொடுத்த சுரேஸ் பிரேமச்சந்திரனை வரலாறு குப்பைத் தொட்டியில் வீசும் காலம் வந்து விட்டது!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்த நிலையிலும் கே.பியின் பீடிகை குறையவில்லை.“எனது தலைவன் தனது இரு வெற்றிப் புதல்வர்களை போர்முனைக்கு அனுப்பினார். வெற்றிப் புதல்வர்கள் என் தலைவனின் மடியில் வந்து வீழ்ந்தார்கள்“ என்று கூறும் கே.பி அடுத்த வரியிலேயே “அவருடைய மனைவி இறுதி மகன் பாலா இவர்கள் பற்றிய செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை“ என்கின்றார். இது யாரை ஏமாற்ற. தற்போது பிரபாகரன் 17 ம் திகதி இறந்ததாகச் சொல்வதும் அவர் போராடி இறந்தார் என்று காட்டவே. அவர் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஒத்துக் கொண்டால் பிரபாகரனுக்கு அவமானம் என்பதை அறியாதவரா கே.பி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்னமும் நெடுமாறன் கே.பியின் அறிக்கையை நம்பத் தயாரில்லையாம். கே.பி யாராம் பிரபாகரன் இறந்து விட்டாரென்று சொல்ல?? கே.பியின் அறிக்கையை எவரும் நம்ம வேண்டாமாம். பிரபாகரன் உயிரோடு மிகவும் நலமாக இருக்கின்றார் என்று நெடுமாறன் அறிக்கை விட்டிருக்கின்றார். அதுசரி நெடுமாறன் யார் இப்படியெல்லாம் அறிக்கை விட?? என்று யாராவது அவரிடம் கேட்க மாட்டார்களா??

    Reply
  • rohan
    rohan

    பார்த்திபன்,
    துவாரகா மாலதி படை அணியில் சேர்ந்து இயங்கியது விடயம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அவ்வப்போது கொஞ்சம் சிந்திபதும் பயன்படும்.

    Reply
  • kulan
    kulan

    எந்த ஒரு மனிதனது இறப்பும் மகிழ்ச்சிக்குரியது அல்ல கொண்டாப்படக்கூடியதும் அல்ல. ஒரு சில தனிமனிதர்களின் கையில் ஒரு இனத்தின் தலைவி பறிபோனதே என்பது தான் வேதனை. பிரபாவின் கடசி மாவீரர் உரையில் தளர்வுகளைக்காணலாம். முக்கியமாக புலிகளின் பின்னடைவும் கே பி முக்கியமானவர் என்பதை நின்று நிதானித்தால் புரியும். தாயிலாந்தில் தூள்கடத்தல் மன்னன் கே பி பிடிபட்டார் சிலநாள்களில் விடுவிக்கவும் பட்டார். எப்படி? இன்ரப்போலால் தேடப்படுவர் எப்படி இலகுவாக வெளியேறினார். இதன்பின் புலிகளின் போராட்டம் தோல்விகளையே தொடர்ந்து சந்தித்தது. கே பிஐ ரோ அல்லது இலங்கை அரசு வாங்கிவிட்டது என்பது தான் உண்மை. தூள்கடத்தலுடன் ஆயுதக்கடத்தல் செய்தவர் கே.பி ரெலோவில் இருந்த புலிகளுடன் சேர்ந்து நீர்வேலி வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய மயிலிட்டியைச் சேர்ந்தவர் இவர். கே.பி எனும் இனத்துரோகியின் கையில் புலிகளும்; பிரபாகரனும் பின் பிரபாகனின் கைகளில் தமிழ்மக்களின் தலைவிதியும் கெளரவமும் சூறையாடப்பட்டது. இன்று எனகேள்வி இதுதான்? எம்மக்களின் எதிர்காலம் என்ன. அரசு சரியான அரசியல் தீர்வை வைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. காரணம் தமிழ் மக்களின் மரணமும் அவலநிலையும் தெற்கில் மகிழ்சியாகக் கொண்டாடப்பட்டது எனும் பொழுது இனத்துவம்சம் மேலோங்கி நிற்கிறது. இப்போரில் எத்தனை அப்பாவி சிங்கள இராணுவச்சிப்பாய்கள் உயிர் துறந்திருப்பார்கள். இவர்களின் மரணம் கூடக் கணக்கெடுக்கப்படாது கொண்டாடியது தெற்கு. அச்சிப்பாய்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்

    Reply
  • palli
    palli

    புலி தலமைகள் இருந்தால் என்ன அழிந்தால் என்ன என்னும் நிலைக்கு புலிகள் கொண்டுவந்து விட்டனர். ஆகவே அவர்கள் இளப்பு அவர்களை வைத்து வியாபார கும்பலுக்கு பெரிய இடிதான். ஆனால் அவர்கள் எப்படியாவது பிழைத்து கொள்வார்கள். ஆனால் கே பி என்பவர் யார்? இவர் உன்மையில் புலியா? இவர் புலியிடம் எப்படி சரனடைந்தார். இவர் புலிக்கு ஆற்றிய தொண்டுதான் என்ன? இப்படி பல கேள்வி இவர் மீது இருந்தாலும் இன்று இவர்தான் புலி தலையென புலி வியாபாரிகள் கருதுவதாலும் வேறு புலி எதுவும் நடமாட்டம் தெரியாததாலும். கிழக்குக்கு முதல்வர் பிள்ளையான் போல் இவர் தற்போது யாரோ சிலரால் புலி தலையாகி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி கொடுப்பதை முன்னுக்கு பின் முரனாக தமிழில் வாசிக்கிறார். என்ன பிரபா வருடம் ஒருமுறை வாசித்ததை இவர் அடிக்கடி வாசிக்கிறார். இதுவரை இந்த வியாபாரி புலி. புலி தலை. தலை குடும்பம் என்பதைதான் திரும்ப திரும்ப ஒப்பாரியாய் கத்துகிராரே ஒழிய தமிழர் பற்றி ஏதுவும் பேசவில்லை. ஆக இந்த புறம்போக்கு எதை சொன்னால் நமக்கென்ன.

    Reply
  • kulan
    kulan

    இக்கட்டுரைக்கு உறுதிசேர்க்கும் முகமான ஒரு சிறு தகவல். பிரபாவின் உடல் என்று இராணுவம் காட்டும் படம் பி.பி.சி யின் வலைப்பின்னலில் பார்க்கலாம். பிரபாவின் உடலில் தலையில் உள்ள காயத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. இது சண்டையில் நடந்ததாகக் கருத முடியாது. இது பிடிபட்ட பின்போ அன்றி சரணடைத்த பின்போ தலைக்கு நேரே குறிபார்த்தே சுடப்பட்டுள்ளது என்பது உறுதி
    http://news.bbc.co.uk/2/hi/south_asia/8066129.stm

    Reply
  • அம்மன் பக்தர்
    அம்மன் பக்தர்

    kulan// கே.பி ரெலோவில் இருந்த புலிகளுடன் சேர்ந்து நீர்வேலி வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய மயிலிட்டியைச் சேர்ந்தவர் இவர். கே.பி எனும் இனத்துரோகியின் கையில் புலிகளும்//

    குலன் அவர்களே நீர் என்ன தலைவருடைய கொலைக்கும் ரெலோவிற்கும் முடிச்சுப்போடுரீர்? உங்கட எல்லாத்தவறுகளுக்கும் நீங்கள் வைத்திருக்கும் கெட்டித்தனமான ஆயுதம் மாற்று இயக்கங்களே. இந்த கேபி 30 வரடமாக பிரபாவின் கையாளாக செயற்படுபவரை இன்று ரெலோ ஆக்குவதன் நோக்கம் என்ன? இந்த கேபி ரெலோவின் காசையையும் சொத்துக்களையும் களவாடியவர் என்றெல்லாம் கதைகள் உண்டு இந்த கேபி பிரபாவுடன் ரெலோவின் ஒரு சந்தர்ப்பத்தில் ஈடபட்டார். பின்னர் பிரபாவுடன் ரெலோவை விட்டு போய்விட்டார். கேபி மட்டுமல்ல பிரபாவும் ரெலோவின் உறுப்பினர்தானே.

    தெல்லிப்பழை அம்மனின் தாலிக்கொடியை புலிகள் கிட்டு தலைமையில் களவு எடுக்கும் பொதே எமக்குதெரியும் தெய்வம் தனது சொத்துக்களை களவு எடுத்தவர்களை நின்று கொல்லும் என்று.

    குலன் புலிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு மாற்று இயக்கத்தின் மீது பழிபோடாதீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    rohan
    எனது சிந்தனை என்றும் தெளிவாகவேயுள்ளது. அதனால்த் தான் தவறைச் சுட்டிக் காட்டினேன். ஆனால் தங்களுக்கு புதல்வர்கள் என்றால் அது ஆண் பிள்ளைகளை மட்டுமே குறிக்கும் என்பது புரியவில்லை என்பது தெளிவாகவே தெரிகின்றது. துவாரகா மாலதி படையணியில் பொழுது போக்க சென்று வந்திருக்கலாம். அவர் ஒரு போராளியாக பயிற்சி எடுத்திருந்தால் இப்படி நடிகை போல் காட்சியளிக்க முடியாது!!

    Reply
  • மாயா
    மாயா

    thevi
    புலிகளை சுற்றி வளைத்த போது , உடனடியாக ஜோர்தானில் இருந்த ஜனாதிபதிக்கும் சீனாவில் இருந்த சரத் பொண்சேகாவுக்கும் தகவல் சென்றது. சரணடைவதற்கான பேச்சு வார்த்தைகள் குறித்து சர்வதேசம் வழி பேச்சு வார்த்தை நடந்தது. பேரங்கள் பேசப்பட்டன. இத்தருவாயில்தான் ஜனாதிபதியும் இராணுவ தளபதியும் நாடு திரும்பினர்.

    தப்புவதற்கான வியூகமா? சரணடைவதற்கான எத்தனிப்பா? ஏற்கனவே மக்களை கேடயமாக முன் நகர்த்தி ஒரு தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

    இறுதியில் இராணுவ தளபதியைத் தவிர அனைவரும் விமானத்தாக்குதல் மூலம் அனைவரையும் அழித்துவிடலாம் எனும் முடிவுக்கு வந்தனர். இராணுவ தளபதி சரத் பொண்சேகா ” இல்லை. எனக்கு பிரபாகரனை கைது செய்ய வேண்டும் அல்லது உடலையாவது பார்க்க வேண்டும். எத்தனை படையினர் இறந்தாலும் பரவாயில்லை. விமானத் தாக்குதல் வேண்டாம்.” என்றார்.

    படையினர் நடேசன் மற்றும் சிலர் இருந்த பகுதியைத்தான் சுற்றி வளைத்திருந்தார்களே தவிர பிரபாகரன் மற்றும் சிலரும் 100 பேர் அடங்கிய பிரபாகரனின் பாதுகாப்பு அணியும் சற்று அப்பால் ஒளிந்திருந்த முதலில் கடலணையை கவனிக்கவில்லை. முதலில் நடேசன் மற்றும் பலர் இருந்த பகுதியில் தாக்குதல் நடந்து ஓய்ந்தது. அல்லது இவர்கள் சரணடைந்ததோடு துப்பாக்கிகள் மெளனமாகின.

    இந்த காலப்பகுதியில்தான் பிரபாகரன் கேபீயை தொடர்பு கொண்டு, தான் பத்திரமாக இருப்பதாக அறிவித்திருக்க வேண்டும். இதனால் கேபீ ஊடகங்களுக்கு தலைவர் பத்திரமாக இருப்பதாக தகவல் வழங்கியும் இருக்கலாம், தலைவர் உயிரோடு இருப்பதாக அறிவித்தும் இருக்கலாம்?

    எப்படியோ பின்னர் கடலணைப் பகுதியிலிருந்து ரேடியோ சமிக்கைகள் செல்வதை கண்காணித்த படையில் ஒரு தொகுதியினர் தாக்கிய போதே பிரபாகரன் தலையில் சுடப்பட்டு இறந்தார்.

    ஆனால் அடுத்த நாள் காலையில்தான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அன்று கேபீ சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள். இன்று கேபீ சொல்வதை மறுக்கிறார்கள்.

    எந்தவகையிலும் பணம்தான் இங்கே விளையாடுகிறது.

    Reply
  • வெள்ளைவாகனன்
    வெள்ளைவாகனன்

    தர்மம் தலை காக்கும்
    உண்மை சுடும்
    பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும்
    கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்
    கெடு குடி சொற்கேளாது
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
    தனவினை தன்னை சுடும்
    வினை விதைத்தவன் வினை அளப்பான்

    வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்

    Reply
  • palli
    palli

    //வெள்ளைவாகனன் //அது சரிதான் இத்தனை
    தத்துவங்களையும் சொன்ன பெரியோர்தான்
    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என சொல்லியுள்ளனர்
    அழிவது தமிழர் (மக்கள் ; புலிகள்)
    அழிப்பதும் தமிழர்(புலம் பெயர் புண்ணாக்குகள்)
    ஆதரவும் தமிழர் (புலியல்லா தமிழர்)

    Reply