இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளதாக இன்றைய சிங்கள பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது மலேசியாவில் இருப்பதாக கருதப்படும் கே.பி.யுடன் தொடர்பு கொள்வதற்காக வேண்டி நம்பியார் தேர்ந்தெடுத்த இடம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடமென்றும் இப்பத்திரிகை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுத கடத்தல்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் சர்வதேச இரகசிய பொலிஸாரினால் (இன்டர்போல்ட்) தேடப்பட்டு வரும் கே.பி. தாய்லாந்திலிருந்து திருட்டுத்தனமாக மலேசியாவினுள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு நபருடனேயே ஐ.நா.வின் பிரதிநிதி இரகசியமாக தொடர்புகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இச்செய்தி இலங்கையிலிருந்து வெளிவரும் முக்கிய தினசரிகளில் ஒன்றான திவயினவில் முதல் பக்க செய்தியாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
kamal
30 வருஷ வீரம் செறிந்த? போராட்டத் தலைவன் தேசியத் தலைவன் தமிழர் விடிவுக்கு? என்றே பிறந்த விடிவெள்ளியின் தலைஎழுத்து மலசலகூடத்தில் இருந்து தீர்மானிக்க வேண்டியதாச்சு….. காலம்தான்
palli.
உங்களுக்கும் இருக்கு தண்டனை. அதனால் எனிமேல் தமிழரை வைத்து பிழைப்பு நடத்துவதை விட்டு சர்வதேசகோட்டில் சரன் அடையுங்கள். அப்படியே தங்களிடம் இருக்கும் (சேர்த்ததுதான் மக்களிடம்) நிதியை ஒரு சமூகசேவை அமைப்பிடம் கொடுத்து விடவும். அப்படியே பலரது
சொத்துக்கள் கூட விற்று அந்தநிதியும் அந்த மக்களிடம் போக வேண்டும். இதே தேசத்தில் வன்னிமக்களையும் புலியையும் சொல்லி பணம்
சேர்த்து பரவசமாய் வாழும் பலர் விமர்சிக்கபடலாம் என நினைக்கிறேன்.
chandran.raja
சரண் அடையவது பற்றிய உபதேசங்களை ஜி.ரிவி யும் தீபம் தொலைக்காட்சியும் அதீதஅக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும். ஐ.பி.சி உட்பட. இல்லையேல் தமிழ்மக்கள் தமது அமைதியான வாழ்விற்காக அதை ஜனநாயகரீதியில் இல்லாது ஒழிக்க நடவடிக்கை எடுப்பார்கள். இவர்கள் தமது இனத்தின் பிணத்தை காட்டி புலன்பெயர்நாடுகளில் பிழைப்பு நடத்தியவர்கள் என்பதை சொல்லித்தான் புரியவேண்டியது அல்ல. ஏனென்றால் தமிழ்மக்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கோ பயங்கரவாதத் தன்மைக்கோ! தம்மை பதிவு செய்து கொண்டவர்கள் இல்லை.