இலங்கை அரசு பரப்பும் பொய்ச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தமிழக தலைவர்கள் கூட்டறிக்கை

tamilnadu.jpgஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா. ம. க. நிறுவனர் மரு. இராமதாசு, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:

ஈழத்தில் போர்ப் பகுதியில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாரனின் உடலைக் கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை அரசும் இந்தியாவில் உள்ள ஊடகங்களும் திட்டமிட்டப் பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்னவெனில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போர்ப் பகுதியில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திட்டத்துடன் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமுற்றுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட காயம் பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி தெருக்களில் கிடக்கின்றனர்.

மக்களை காப்பாற்ற இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் அனைத்து முன்னணி தளபதிகளும் விடுதலைப் புலிகளும் களத்தில் நின்று தீரத்துடன் போராடி வருகின்றனர். இந்த போர்ச் செய்தியையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையையும் மறைக்கவே இலங்கை அரசு பல பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது.

சாவின் விளிம்பில் நிற்கும் மக்களை காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது UN உலக சமுதாயமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • msri
    msri

    தமிழக மக்கள்>இவர்களை அரசியலில் இருந்த அப்புறப்படுத்த> இப்போது வன்னியின் உளவுத்துறை அதிகாரிகளாக மாறியுள்ளார்கள்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஆமா.. ஆமா… மற்றவர்கள் சொல்வதை நம்ப வேணடாம். இவங்க கூட்டாக கட்டிவிடும் கதைகளையும், கிராபிக் செய்து கிளப்பிவிடும் புரளிகளை மட்டும் நம்புங்கள். இதைத் தான் இவர்கள் எதிர் பார்த்தார்கள். ஆனால் தமிழக மக்கள் தெளிவாக ஆப்பு வைத்து விட்டார்கள்.

    Reply
  • accu
    accu

    தலைவர்களே உங்களை உங்கள் மக்கள் புறக்கணித்த பின்பும் இன்னும் திருந்திற நோக்கம் இல்லையா? இன்று எம் மக்களுக்கு நடந்த இந்தப் பேரவலத்துக்கு நீங்களும் உங்களை நம்பிய புலம்பெயர் புண்ணாக்குகளுமே பெரும் பங்கினை ஏற்க்க வேண்டும். உங்கள் அரசியல் லாபங்களுக்காக வாயில் வந்தபடி நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதிகளை வழங்கி அதை நம்பி எங்கள் புலன்பெயர்ததுகளும் சந்திக்குசந்தி நின்று சதிராடி ஏதோ புலிக்கொடியை தூக்கியதே பெரிய வெற்றிபோல் கொண்டாடி இப்ப ஒப்பாரி வைக்கிறர்கள். உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறோம் தயவுசெய்து உந்த உழுத்தல் கதைகளை விட்டு இனியாவது எம் மக்களை வாழவிடுங்கள். நீங்கள் ஏதோ கிழிக்கப்போவதாக நம்பித்தான் புலிகளும் இவ்வளவு நாட்களும் போரட்டத்தை பேரழிவுக்கு மத்தியிலும் இழுத்தார்கள். அல்லது எப்பவோ அவர்கள் போரட்டத்தை நிறுத்தியிருப்பார்கள். பல அப்பாவி உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

    Reply
  • ramesh
    ramesh

    இவர்களின் வார்த்தைகளை தமிழ்நாட்டு மக்களே நம்பவில்லையென நடந்து முடிந்த தேர்தல் கட்டியம் கூறுகின்றது. இந்த லட்சணத்தில் இவர்களின் அறிக்கைகளை யார்தான் நம்பப்போகின்றார்கள்?? எல்லாம் வெறும் வெட்டிப்பேச்சுத்தான்… வெற்று டப்பாக்கள்.

    Reply
  • Rohan
    Rohan

    இவர்கள் கூற்றை நம்புகிறீர்களா என்பது ஒரு விடயம் அல்ல. தமிழக மக்கள் இவர்களை என்ன செய்தார்கள் என்பது ஒரு பிரச்சனை அல்ல. புலிகள் இன்னமும் இருக்கின்ற இடத்தில் கணிசமான அளவு மக்கள் உள்ளனர் என்பதே கவனத்துக்கு உரிய விடயம்.

    புலிகளின் குரல்களும் அரச அலுவலர்களும் (அரச அதிபர்கள், மருத்துவர்கள் என) திரும்பத் திரும்ப கிட்டத் தட்ட 300,000 மக்கள் புலிகளின் பகுதிகளில் உள்ளனர் என்ற் சொன்ன போதிலும் அரசு ஒரே பிடியாக 68,000 பேர் தான் உள்லனர் என்று சொன்னது. அவர்களுக்கு (68,000) பேர் ஏதோ அனுப்புகிறோம் என்று சொல்லிக்க் கொண்டு பூச் சுத்திய அரசு, கெரில்லாக்களால் கட்டுப் படுத்தப்படும் பகுதிக்கு உணவு அனுப்பும் ஒரே அரசு தான் தான் என்று பீற்றிக் கொண்டது. அப்போது பூம் பூம் மாடு போல் தலை ஆட்டவும் மற்று கருத்துநண்பர்கள் தயாராக இருந்தனர்.

    ஆனால், இப்போது கிட்டத் தட்ட 250,00 மக்களைப் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்து விட்டதாகவும் இதே அரசு பெருமைப் பட்டுக் கொள்கிறது.அரசு இப்போது புலிகளின் பிடியிலிருந்து எல்லா மக்களையும் மீட்டு விட்டாதாகச் சொல்கிறது. அக் கருத்து உணமை அல்ல என்று இவர்கள் சொல்கிறார்கள். இவர்கள் யார் என்பது முக்கியம் அல்ல. இவர்கள் கூட்டாகக் கட்டி விடும் கதை என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

    உணமைச் செய்தி என்ன என்று நீங்கள் சொல்லுங்கள். சில ஆயிரம் பேராவது புலிகளின் பகுதியில் இன்னமும் உள்ளனர் என்று எனக்குத் தெரியும். அரசு இரகசியமாகப் பிடித்து கொண்டு போனாலன்றி அந்த மக்கள் வெளியே வந்து இம் மாதிரி பொறுப்பற்றுக் கருத்துரைப்போருக்கு கரி பூசுவர்.ஆனால் வெட்கப் படவும் ஒரு பக்குவம் வேண்டுமே!

    Reply
  • kosompo
    kosompo

    தேர்தல் முடிவுகள் என்னத்தைக் காட்டுகிறது? இந்திய மக்கள் தம்தனிநலனில் மிக மிக அக்கறையாக இருக்கிறார்கள் என்பதையே. இனிமேலாவது ஈழத்தமிழரைக்காட்டி நீங்கள் செய்த அநியாயங்களையும் பொய்பித்தலாடங்களையும் மறைக்க முயலாதீர்கள்

    Reply