26 வருட உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுதலைப்புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியிருக்கிறார்.
ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர், விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள், இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
kosompo
புலிகள் சொல்கிறார்கள் இனித்தான் போராட்டமே தொங்கப்போகிறதாம். இரண்டு பக்கமும் ஏதாவது ஒப்பந்தம் போலை கிடக்கு. இதுவும் ஒருவகை விளையாட்டோ? அதன் பெயர்தான் பிணச்சதுரங்கமா?
Thirumalaivasan
ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர், விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார்.– சரிதான். இனி இவரது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் ஓகோவென்று கரைபுரண்டோடும். மகிந்த சகோதரயோ வின் ராஜ தர்பார் நீண்ட நாட்களுக்கில்லை. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும்வரை இவர்கள் நிம்மதியாகத் து}ங்கமுடியுமா என்பது சந்தேகமே. அது சரி.. ராமநாதனுக்கு கொழும்பு ஹார்பரிலிருந்து தேர் கட்டி இழுத்தமாதிரி டக்கிளசும் அம்மானும் பிள்ளைபிடிகார பிள்ளையானும் ஏதாவது நல்ல பிளான் போட்டு அசத்தலாமே.
Thirumalaivasan
30 years of peaceful agitations brought nothing on the contrary State Terrorism was used against us. But 30 years of arm struggle by our Freedom Fighters who martyred for our rights has achieved something as the International community has come to understand the problem of the Tamils in spite of India’s Aryan clans’ obstruction.
thurai
விடுதலைப்புலிகள் என்று பிரபாகரன் தலமையிலுள்ள ஓர் அமைப்பை அழைப்பதே தவறு. இன்னமும் யாராவது விடுதலைப்புலிகள் என் அழைப்பதும், அவ்ர்களை புத்துயிர் கொடுத்து வளர்க்க விரும்பபுவதும் மிகுதி தமிழரையும் இலங்கையில் அழிப்பதற்காகவே அமையும்.
துரை