விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன், வன்னிப்பகுதியில் பாதுகாப்பு வலையம் மீது இன்று இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்திவருவது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது படையினர் இன்று வெள்ளிக்கிழமை ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
உயிரிழந்த மக்களின் உடல்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை.
மருத்துவமனைகள் இல்லாத நிலையிலும் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர்.
ஆனால் எந்த வசதியும் இல்லாத நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இங்குள்ள ஒரு லட்சத்து 65 பேரை காப்பாற்ற வேண்டுமானால் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்
பாதுகாப்பு வலையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!
விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து, கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பாதுகாப்பு வலையப் பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இன்னும் 48 மணி நேரத்தி்ல விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவார்கள் புலிகள் வசம் உள்ள அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்பட்டு விடுவார்கள் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு வளையப் பகுதி முழுவதிலும் இருந்து கரும்புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. மிகக் குறுகிய கடற்பரப்பான பாதுகாப்பு வளையப் பகுதியை அழிக்கும் வகையில் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் இந்தப் பகுதியை கைப்பற்றும் முடிவில் ராணுவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
murugan
வங்காலை மார்டின் குடும்பம், கனகம் புளியடி வதனன் பெற்றோர் ,லீலாவதி இயக்கங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எல்லோரின் கண்ணீரையும் மரண ஓலத்தையும் நினைத்துப் பார்த்து தயாராக இருங்கள். நாம் அவர்களை மறவோம்.
நாட்டுப்பற்றாளன்
கவலைபடாதே சகோதரா உங்கம்மான் பொட்டம்மான் அடிப்பான்
நந்திக்கடலிலே சிங்கள சிப்பாய்களை மிதக்க விடுவான்
ஏரம்பு வாத்தி
கவுத்திட்டான்யா………… கவுத்திட்டான்யா………!
பங்கர் தலயையே……. கவுத்திட்டான்யா……!
padamman
எமது கடைசி வேண்டுகோள் ஆயுதங்களை கைவிட்டு சரன்டையுங்கள் முதலில் மக்களை வெளியேற அனுமதியுங்கள்.
ramesh
“எமது கடைசி வேண்டுகோள்”- அன்பார்ந்த விடுதலைப்புலிகளே, விடுதலைப்போராட்டம் தோற்றுப்போய் விட்டது. பாவம் எஞ்சியுள்ள அப்பாவி மக்களையாவது வன்னியை விட்டு உயிருடன் வெளியேறி நிம்மதியாக வாழ வழிசெய்வதே சிறந்ததாகும்.சிந்திக்க நேரமில்லை. உடனே செயல்படுங்கள். கடவுள் உங்களைக் காப்பற்றுவாராக.
நண்பன்
வெளியே இருந்து என்ன சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. இப்போது வெளியே இருப்போருக்கு சொல்வதையும் யாரும் கேட்கவில்லை.
இதுதான் இன்றைய நிலை.
தலைக்கு மேல் வெள்ளம். மக்களை சுதந்திரமாக வெளியேற விடுங்கள். இது மட்டுமே நீங்கள் வாழ்கையிலேயே செய்யும் நல்ல காரியமாக இருக்கும். அடுத்து கைகளை தூக்குங்கள் அல்லது கழுத்தில் இருப்பதை கடித்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் அடுத்த மாவீரர் தினத்தில், உங்கள் பழைய ஒளிநாடாக்களை வெட்டி ஒட்டி போட்டுக் காட்டி, மெழுவர்த்தி கொழுத்துவோம். ஒரு நிமிட அஞ்சலி. எமது அப்பாவி மக்களுக்காக……….அதே நேரம் இனி ஒரு அழிவு வேண்டாம் என்று பிராத்திப்போம்.
பார்த்திபன்
உங்களுக்கும் எமது கடைசி வேண்டுகோள் என்னவெனில் அரசாங்கம் பாதுகாப்பு வலையம் என்று ஒதுக்கியது பொது மக்களுக்காக. எனவே அந்த பாதுகாப்பு வலையத்தினுளிருந்து நீங்கள் வெளியேறினாலே அந்த மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். இல்லையேல் மக்களை வெளியேற விட்டு நீங்கள் நேரடியாக இராணுவத்துடன் போரை நடத்துங்கள். “அது வீரம்”.
rohan
இதுவரை வரையப் பட்டுள்ள கருத்துகளில் பிண வாடை அடிக்கிறது. புலி வசைக்கு உதவும் எனும் நம்பிக்கையுடன் பிணம் எண்ணத் தயாராக இருப்பவர்கள் தான் இப்படி எழுதுவார்கள் என்பது எனக்குத் தெரிகிறது.
இவர்களில் ஒருவர் கூட எவ்வகையிலாவது மக்களைக் காக்கும் வகையில் ஒரு ஆக்க பூர்வமான் நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.
நண்பன்
நீங்களும், உங்களோடு இருப்போரும் அடுத்தவரை மடையர் என்று நினைப்பது தெரியும். அதனால் மடையருக்கு படம் காட்டும் போது கவனமா காட்டுங்கோ? ஏனென்றால் உங்களோட இருக்கிற மடையர்கள் ஒரிஜினலையும் மறந்து இணைச்சிடினம்? நீங்கள் இதுவரை காட்டிய படங்களில் இது முக்கியமான ஒரு படம்.
The real drama of Pro LTTE media
http://www.lankaenews.com/English/news.php?id=7678
http://www.defence.lk/new.asp?fname=20090515_13
murugan
தங்களால் பிணங்கள் விழக் கூடாது என சூடு சொரணை இழந்து, புலியிடம் அவமானப்பட்டு (போராடப் போன குற்றத்திற்காய்) ஓடி வந்தவர்களின் மனக்காயங்களை புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கலாம். பொது மக்களை விடுவி என கத்தி கத்தி குரல் ஓய்ந்து விட்டது. யார் காதிலும் அது ஏறவில்லை. அது தலைவர் இருக்கும் வரை ஏறாது. ஒரு மனிதனின் மரணத்தை இன்னொரு மனிதன் கனவிலும் வரவேற்க காத்திருக்கமாட்டான். ஆனால் பிரபாகரனின் செய்திக்காக உலகமே காத்திருக்கிறது. அது மனிதர்களின் தவறா? பிரபாகரனின் அரசியல் தந்த முடிவு.
Thambiah Sabarutnam
சட்டலைட் தொலைபேசியூடாக பிணகணக்கு சொன்ன டாக்டர் ஷன்முகராஜா 58 ஆம் டிவிசன் இடம் சரண் அடைந்தது விட்டதாகவும்
பிரபாகரன் கதை முடிந்ததாகவும் இங்கே சொல்கிறார்கள்.
இரண்டு கேணல்களும் பிராந்திய தளபதிகளும் அரசபடைகளால் பிடிக்கப்பட்டதோடு புலிகளின் கப்பல்களின் உரிமையாளர், பாடகர் சாந்தன் உட்பட பலர் இராணுவத்திடம் பிடிபட்டதாகவும் பிரபாகரனின் கதையை ராஜபக்சே ஜோடானில் இருந்து திரும்பியவுடன் மக்களுக்கு அறிவிக்க இருப்பதாகவும் இங்குள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
Tamil
நீங்களோ வேண்டுகோள் விடுக்கிறீர்கள் ஆனால் உங்களது ஆயுதக் கொள்முதர் இவ்வாறு எச்சரிக்கை விடுகிறார் (கடைசி வரியைக்க கவனிக்கவும்)
“பல தாசாப்த காலப் பிரச்சினையை ஒரு மனிதப் படுகொலையின் மூலமாகவோ அல்லது பொதுமக்களின் இரத்தக்களரி மூலமாகவோ 48 மணித்தியாலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியாது” என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
“மாறாக இது பிரச்சினையை மேலும் தீவிரமான நிலைக்கு இட்டுச் செல்வதற்கே உதவுவதாக அமையும்” எனவும் தெரிவித்திருக்கும் அவர் “சிங்கள மக்கள் இதனைத் தங்களுடைய நலன்களுக்காக தடுத்து நிறுத்த வேண்டும் தமிழர்களுக்காக அல்ல” எனவும் தெரிவித்திருக்கின்றார். – புதினம் 16/5/2009″
rohan
//இங்குள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்//
எஙகுள்ள?
நண்பன்
// “சிங்கள மக்கள் இதனைத் தங்களுடைய நலன்களுக்காக தடுத்து நிறுத்த வேண்டும் தமிழர்களுக்காக அல்ல” – செ.பத்மநாதன் //
இதுநாள் வரை புலிகள், சிங்களவர்களுக்கு முழு நாட்டையும் கொடுக்கத்தான் போராடிக் கொண்டிருத்திருக்கிறாங்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. இப்ப வன்னியை மட்டுமே இராணுவம் கிளீன் பண்ணியருக்குது. யாழ்பாணம், திருகோணமலை , …………… ஏனைய மக்களையும் கிளீன் பண்ண ஏதாவது செய்யுங்கோ? புலத்து மந்தைகள் காசு கொட்ட ரெடியாக இருக்கினம்?
இதற்கு மகிந்த கொடுத்த 700 கோடி ரூபா போதுமா?
Thambiah Sabarutnam
நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் மரணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.
இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன. பங்கருக்குள் …………… மரணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.
மாயா
புலிகளின் முக்கிய தளபதிகளான சுவர்ணம் மற்றும் சசி மாஸ்டர் கொல்லப்பட்டதை இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
பார்த்திபன்
//இங்குள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்// எஙகுள்ள? – rohan //
கவலைப்படாதையுங்கோ. இன்னும் சில மணி நேரங்களில் தாங்கள் கேள்விகளே கேட்கத் தேவையில்லாத அளவிற்கு பதில்கள் கிடைக்கும். இந்தியத் தேர்தல் மூலம் கிடைத்த பதில்கள் கூட உங்களுக்கு மாற்றத்தைத் தரவில்லை. சாமானியர்கள் தரும் பதில்கள் மூலமா திருப்தியடையப் போகின்றீர்கள்??
palli.
தமிழனை வீரனாக்கிய தமிழன் என பலரது பல பெயர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அதில் உன்மை எது பொய் எது என பல்லிக்கு தெரியவில்லை. ஆனால் தமிழனே கோழை மட்டுமல்ல புத்தியற்றவன் என்னும் போக்கை சமீபகாலமாக புலி தலமை செய்து வருகிறது. வாழ்வா சாவா என போராட வேண்டிய நேரத்தில் அங்கு(வன்னியில்) நடக்கும் நிகழ்வுகளை சர்வதேசத்துக்கு எடுத்து செல்லும் ஊடகமாகவே செயல்படுகிறது.
மன்னாரில் ராணுவம் அடிக்க தொடங்கியவுடன் தமது பலத்தை அறிந்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். அல்லது அவர்களையே சுயபாதுகாப்பு தேடும்படி சொல்லியிருக்க வேண்டும். இத்தனை இழப்புகளுக்கு பின்னும் புலியை பாதுகாக்கதான் KP அமெரிக்காவுடன் என்ன வேண்டுமானாலும் செய்கிறோம் எனகிறார். இருப்பினும் எந்த உயிரும் அழிவதை பல்லி ஏற்று கொள்வதில்லை. அதனால் அரசு புலியை விட அராசகமாக நடவாமல் புலிகளின் தோல்வியை தமக்கு சாதகமாக்கி தமிழர் மீது தாக்குதலை தொடருமானால் கண்டிப்பாக இலங்கை சர்வதேசத்தால் தண்டிக்கபடும். புலிகள் ஆயுதமே சர்வதேசத்துக்கு இலங்கை அரசு மீது நடவெடிக்கை எடுக்க தடங்கலாய் இருந்தது.
kosompo
வன்னியில் ஒருவரும் இல்லையாம். சூசையின் மனைவி என்று காட்டியது வேறுயாரையோவாம். கனடாவில் வாழும் உறவினர்கள் சொன்னார்களாம். அரசாங்கம் விலாசம் காட்டுகிறது. உண்மை பொய் ஆண்டவனுக்கே வெளிச்சம்
பார்த்திபன்
kosompo இராணுவம் வெளியிட்ட பிரபாகரனின் மகளின் படத்தையே பொய் என்று வாதிட்டவர்கள், இப்படி எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தோல்வியில் துவண்டு போனவர்களால் இப்படிக் கதை புனைவதை விட, வேறு என்ன செய்ய முடியும்??
நண்பன்
இளந்திரையனை கொன்று உயிர்ப்பித்து மீண்டும் கொன்றவர்கள் இவர்கள். எல்லாம் ஒருநாள் வெளிவரும்.
palli.
எதோ எல்லாம் நடக்கிறது. அது தமிழருக்கு சாதகமா அல்லது பாதகமா பல்லிக்கு புரியவில்லை. இருப்பினும் என் மனம் கனக்கிறது ஏனோ தெரியவில்லை. தமிழன் என்பதாலோ அதுவும் புரியவில்லை.
murugan
பல்லிக்கு பழைய சகவாச நினைப்பால் மனம் கனக்கிறது. பிரபாகரனால் உருவாக்கப்பட்ட அநாதைகளையும் அங்கவீனர்களையும் உயிரை பறி கொடுத்தவர்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக இன்று மக்களை நிர்கதிக்கு ஆளாக்கி விட்டு தமது குடும்பங்களை காப்பாற்றிக் கொண்ட தலைவர்களையும் நினைத்து பாருங்கள். பிரபாகரன் தெரிந்தே ஆயுதமும் பணமும் தந்த ஆணவத்தினால் செயற்பட்டார். மனிதனாக வாழ்ந்திருந்தால் கவலைப்படலாம். மிருக குணங்கொண்டலைந்தவர்களுக்காக ஏன் கவலைப்பட வேண்டும்.
kosompo
பல்லியண்ணா! சர்வதேசம் தண்டிக்கும் என்றால் எப்பவோ இதைச் செய்திருக்க வேண்டும் தட்டிக் கொடுத்தவர்களும் இவர்கள் எப்படித் தட்டிக் கேட்பார்கள்?
நண்பன்
Army spokesman Brigadier Udaya Nanayakkara said that 50,000 civilians have come to the Army-controlled areas since last Thursday and 36,000 came yesterday alone. A group of civilians came today as well, he said.
There were two Army personnel and four Navy personnel LTTE held as prisoners, Army says.
Unconfirmed reports say that a Tamil National Alliance MP and the Additional District Secretary Partheepan were also among the civilians.
Reportedly, Army foiled a bid of the remaining LTTE leaders to infiltrate into Mullaithivu jungle across Nanthikadal lagoon launching a massive attack against the Army. Army sources say that six LTTE boats and the bodies of 70 LTTE cadres were recovered following the fight. A large number of weapons were also recovered.
Still fighting is underway with the remaining LTTE cadres-lankaenews.com/English/news.php?id=7693
நண்பன்
நேற்று இறுதியாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளியேறியவர்கள் தொகை 36000 அளவு என உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவர்களோடு புலிகளின் சிறைகளில் இருந்த 2 படையினரும் 4 கடற்படையினரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களோடு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரும், உதவி அரசாங்க அதிபர் பார்த்தீபனும் உள்ளதாக மேலும் தெரியவருகிறது.
மிகுதியாக காடுகளில் எஞ்சியுள்ள புலிகளை படையினர் தேடி வருகின்றனர். முக்கிய புலி தலைவர்கள் குறித்த விபரங்களை அரசு இதுவரை வெளியிடவில்லை. நாட்டில் கலவரங்கள் ஏற்படாவண்ணம் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டு மகிந்த ராஜபக்ஸவால் இன்று மாலை அல்லது நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என தெரிகிறது.