யாழ் மாவட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயாந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மொத்தமாக உள்ள 12 நலன்புரி நிலையங்களில் 8 நலன்புரி நிலையங்களுக்கு சிடிஎம்ஏ தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மற்றும் வங்கிச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 11 ஆயிரத்தி 79 பேர் இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்