இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலைவரம் குறித்து அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை கலந்துரையாடியிருந்த நிலையிலேயிலேயே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூனின் இலங்கை விஜயம் உட்பட, அனைத்து மட்டத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் முனைப்புக்கள் அவசியமெனவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.