காலஞ் சென்ற சப்ரகமுவ மாகாண ஆளுநர் மொஹான் சாலிய எல்லாவெலயின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 16ஆம் திகதி பலாங்கொடை நகரில் நடைபெறவுள்ளதாக ஆளுநரின் உதவிச் செயலாளர் விஜேவர்தன தெரிவித்தார்.61 வயதான மொஹான் சாலிய எல்லாவெல சுகயீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பகல் காலமானார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இரு பிள்ளைகளின் தந்தையான மொஹான் சாலிய எல்லாவெல 1991ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலாங்கொடை அமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.