பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடக்கும் மக்கள் இடப்பெயர்வு 15 ஆண்டுகளுக்கு முந்தைய ருவாண்டா நெருக்கடிக்கு பின்னர் மிகப் பெரும் இடப்பெயர்வு என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடைபெறும் சண்டைகளை தொடர்ந்து இதுவரை 3,60,000 பாகிஸ்தானியர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக பதிவாகியிருப்பதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான பணிகளுக்குக்கான ஒருங்கிணைப்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர்களை தங்க வைப்பதற்க்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், நீண்ட காலத்துக்கு தாக்கு பிடிக்க மாட்டாது என்றும் அவர் மேலும் கூறினார்.