மக்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு

vanni-0001.jpgவடகிழக்கு பகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கவும், அங்கிருக்கும் காயமடைந்த மற்றும் நோய்வாய் பட்டவர்களை வெறியேற்ற முடியாத நிலையும் உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

தற்போது அங்கிருக்கும் களநிலைமைகள் இதற்கு ஏதுவாக இல்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கிறது. அங்கு மனித நேயப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக ஒரு கப்பல் வடகிழக்கு கடற்கரை பகுதியில் காத்திருப்பதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் மீதான தமது இறுதி தாக்குதலை தொடங்கியிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Hg
    Hg

    வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக அனுப்பப்படுகின்ற நிவாரணப் பொருட்கள் எதுவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் போய்ச் சேருவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
    இது தொடர்பான முறைப்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்ட அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு கொழும்பில் இருந்து தனியார் மற்றும் தொண்டு அமைப்புக்கள் பலவற்றினால் நிவாரணப் பொருட்கள் பொதி செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.

    ஆனால், அதிகாரிகள் அவற்றை பெற்று நிகழ்வு ரீதியாக சில குடும்பங்களுக்கு வழங்குகின்றனர். அதன் பின்னர் ஏனைய நிவாரணப் பொருட்கள் அனைத்தும் வவுனியாவில் உள்ள ஈ.பி.டி.பி, புளொட் ஆகிய ஆயுதக் குழுக்களினால் பெறப்படுவதாக முறையிடப்படுகின்றது.

    இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் வவுனியா செயலக அதிகாரிகள் சிலர் முறையிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வவுனியா நலன்புரி முகாமில் தற்காலிகமாக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள பலசரக்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மக்களுக்காக பலராலும் அன்பளிப்பு செய்யப்பட்ட நிவாரணப் பொருட்கள் என்றும் அதிகபட்ச விலைகளுக்கு அந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் நேரில் கண்ட மக்கள் சிலர் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

    இதேவேளையில் இந்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு வழங்கியதாக சந்தேகிக்கப்பட்ட வவுனியா செயலக அதிகாரிகள் சிலர் குறித்த சில ஆயுதக்குழுக்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இச்சம்பவங்கள் குறித்து வவுனியா காவல்துறை நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Hg நீங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடக்கும் பகற்கொள்ளையை, அப்படியே அகதி முகாம்களில் நடப்பதாக மாற்றி உங்கள் புலி விசுவாசத்தை காட்டுகின்றீர்கள் போலும்.

    Reply
  • palli.
    palli.

    HG உங்கள் கருத்துக்கு பல்லி பலன் சொல்லவில்லை. ஆனால் தாங்கள் கூட உங்களால் முடிந்ததை உங்கள் உறவு மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ நேரடியாக செய்யகூடிய சூழ்நிலை வவுனியாவில் இருப்பதாக வன்னி செய்தி உறுதி செய்கிறது. அப்படி பார்த்தால் இற்றைக்கு 24 வருடங்கள் யாருமே மிருகத்தை மீறி தமிழர்க்கு உதவும் சூழல் இருக்கவில்லை என்பதை மறுக்க முடியுமா? அதுக்கு சுனாமி நிகழ்வுதான் அனுமதிக்குமா???

    ஆக மக்கள் புலியின் காலுக்குள் மிரிபட்டதை விட அரசின் கையில் உரசுபடுவதை தாங்குவார்கள் என்பது பல்லியின் கருத்து (ஆனால் அதுவும்
    தவறு என்பதில் பல்லி தெளிவாக உள்ளது)

    Reply
  • santhanam
    santhanam

    புலியின் காலுக்குள் மிரிபட்டதை விட அரசின் கையில் உரசுபடுவதை// இது நியமான கதை அம்பளவன் பொக்கனையை சேர்ந்த நண்பன் சொன்னது புலி செய்தகொடுமையை விட வவுனியாவில் ஆமியுடன் இருப்பது 100வீதம் மேலானது.

    Reply
  • மாயா
    மாயா

    // nthanam on May 12, 2009 10:20 pm புலியின் காலுக்குள் மிரிபட்டதை விட அரசின் கையில் உரசுபடுவதை தாங்குவார்கள்// இது நியமான கதை அம்பளவன் பொக்கனையை சேர்ந்த நண்பன் சொன்னது புலி செய்தகொடுமையை விட வவுனியாவில் ஆமியுடன் இருப்பது 100வீதம் மேலானது.//

    சனம் பொயின்டை புடிச்சிட்டு.

    Reply