ரயில் சேவையின் மேம்பாட்டுக்காக மேலும் புதிய ரயில் என்ஜின்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இந்த வருட இறுதிக்குள் 20 பவர்செட் ரயில்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
இவற்றின் முதலாவது ரயில் தொகுதி 4 மாதங்களுக்குள் இலங்கை வந்தடையும் என் எதிர்பார்க்கப்படுகிறது. மலசலகூடவசதி, சொகுசு ஆசன வசதி என்பன இவற்றில் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவை இரண்டு கட்டங்களாக கப்பல் மூலம் கொழும்பை வந்தடைய உள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளதாகவும் தூர இடங்களில் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய பவர்வெட் ரயில்களையே இம்முறை தருவிக்க உள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.
மேற்படி ரயில்கள் கரையோரப் பாதை மற்றும் களனிவெளிப் பாதை என்பவற்றில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்திய உதவியுடன் தென்பகுதிக்கான ரயில் சேவையை மேம்படுத்தும் திட்டத்துடன் இணைந்ததாகவே மேற்படி ரயில் என்ஜின்கள் தருவிக்கப்படுகின்றன. புதிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் ரயில் சேவையிலுள்ள தாமதம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kullan
இந்தியா இலங்கையை வைத்து நன்றாகச் சீவிக்கும். ரயில் கொடுப்பில் இருந்து உயிர் எடுப்புவரை