சர்வதேச நாடுகள் சில பலவீனமுற்ற நாடு என்ற முத்திரையை எம்மீது குத்த முயன்ற போதும் நாம் பலமுள்ள நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பியுள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொருளாதாரம், சுகாதாரம் என பல்துறைகளையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பியதுடன் துண்டாட முனைந்த நாட்டையும் மீட்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் மட்டுமன்றி எம்மவர் சிலரும் இலங்கையை பலவீனமான நாடாக உலகுக்குக் காட்ட முனைந்தனர். அதற்கு ஒருபோதும் நாம் இடமளியோம். அத்துடன் சர்வதேச நிதியம் உட்பட நிதி வழங்கும் நாடுகளிடம் எமது நாட்டை அடிமைப்படுத்தவும் இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்