நளினியை பிரியங்கா சந்தித்த பிறகே இலங்கையில் போர் தீவிரமடைந்தது – ஜெயலலிதா

j-j-j.jpgவேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நேற்று மாலை பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,

ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்தன் மர்மம் என்ன?. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது?. இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?. பிரியங்கா-நளினி சந்திப்பிற்கு பிறகு தான் இலங்கை தமிழர்கள் மீதான அந்த நாட்டின் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. எனவே, பிரியங்கா-நளினி சந்திப்பின் போது நடந்தவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும். இதை முதல்வர் கருணாநிதிதான் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்சினையை முதல்வர் கருணாநிதி சரியாக கையாளவில்லை. தேர்தலை மனதில் கொண்டுதான் அவர் செயல்படுகிறார். திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்றால் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • indian
    indian

    why you didnot talk about this on that time??

    Reply
  • Kullan
    Kullan

    நளினிக்கு சிலவேளை புலிகள் அவரை மீட்பதற்கு முயலவில்லை என்ற காரணத்தால் போட்டுக் கொடுத்திருக்கலாம். இது புலிகளின் வளமையான ஒன்று தானே. புலிகள் என்று தம்மைத்தவிர மற்றவர்களைக் காப்பாற்றினார்கள்? ஒரு உதாரணம் சொல்ல முடியுமா? இதுவரை வாய்திறக்காத அம்மையார் ஏன் இப்போ வாய்திறந்தார்? இவருக்கு எந்தப்போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது? இல்லை தேர்தல் துரும்பாகப் பாவிக்க இதைப் பாதுகாத்து வைத்திருந்தாரா? அரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பதால் குடும்ப சிநேகமுள்ள ராஜீவ் காந்தி குடும்பமாவது கடசிநேரத்தில் கூட்டமைப்பு கேட்டு வராலாம் என்று வாய்திறக்காது இருந்தாரா? எல்லாம் தேர்தல் கடவுளின் வேலைதான்

    Reply
  • msri
    msri

    பிரியங்கா நளினியை சந்தித்ததால்தான் இலங்கையில் போர் தீவிரம் அடைந்ததாம! இது செல்வியின் பெரியதொரு துப்பறியும் ராணுவக் கண்டுபிடிப்பு!

    Reply