மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று வெசாக் பௌர்ணமி தினமன்று புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பிரதேசம் தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள 23- 2 ஆவது இராணுவ கட்டளைத் தலைமையக வளாகத்திற்குள்ளேயே இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் கடமையாற்றும் இராணவ சிப்பாய்கள் மத வழிபாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யபடப்டுள்ளதாக இது தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றது
Kullan
நாம் எது பண்டைய மதத்தை பிரதிஸ்டை செய்கிறோமா? வாழ்க தமிழ் பெளத்தர்கள். எங்கடை புத்தரை மட்டுமல்ல எமது புத்தரின் பல்லையும் கூட சிங்களவன் களவெடுத்து விட்டானே. சரி இப்பவாவது திருப்பித் தருவானாக்கும்.
Nackeera
தமிழர்கள் நாகர் வழிவந்தவார்கள் என்பது சரித்திரங்கள் கூறும் சான்றாகும். இந்த நாகர்கள் நாகங்களை வழிபட்டு வந்தார்கள் என்பது சான்று. இன்றும் பல அரசமரங்களின் கீழும் சின்னச் சின்ன கோவில்களாக நாகதம்பிரான் கோவில்களை இன்றும் காணலாம். மதவாச்சக்கு மேல் உள்ள நிலப்பரப்பு நாகதீபம் என்று அழைக்கப்பட்டது. நயினை அம்மனே காவல்தெய்வமாக இருந்தாள் என்பது சரித்திரம். இந்த நாகவணக்கம் பர்மா> இந்தோனேசியா> மலேசியா> தாயிலாந்து> கம்போசியா போன்ற நாடுகளிலும் பரவியிருந்தது. அங்குள்ள புத்தர் சிலைகளைப் பார்த்தீர்களானால் புத்தர் சயனிப்பது பாம்பணையில் என்பது தெழிவாகம். முக்கியமாக நாகம் என்பதை அறியலாம். இதற்கு என்னுமொரு காரணத்தை கற்பிக்கலாம் விஸ்ணுவினது சயனமும் பாம்புதான். புத்தர் விஸ்ணுவின் ஒரு மீள்பிறப்பு என்று பலர் அன்று நம்பினர். இதுவும் பத்தரின் அரவசயனத்துக்கு ஒரு காரணமாகலாம். பிற்குறிப்பு: யாழ்பாணத்தை ஆண்ட இரண்டு நாகரின அரசர்களான உறவினர்களுக்கிடையில் ஏறப்பட்ட சண்டையை புத்தர் தீர்த்து வைத்தார். அதனால் நாகர் இனமே பெளத்தமதத்தைத் தழுபியது. இதனால் வடபகுதிதான் முதன் முதலில் பெளத்த மதத்தைத் தழுவித என்பதற்குப் போதிய சான்றுகள் உண்டு.
msri
தொப்பிக்கலையில் ராணுவம கும்பிட புத்தர்சிலை திறப்பு! இறக்குவானையில் மக்கள் வழிபடும் முத்துமாரி அம்மனுக்கு வருடாந்த உற்சவம் நடாத்த தேரோக்கள் மறுப்பு.
mukilvannan
its very funny, why they having budda in their camp, they not even buddist at all. first they have to be buddist then they can have budda mai. their god is hilter mai, not a budda?