உள்ளூராட்ச்சித் தேர்தல் சட்டங்களை மீறியோர் மீது கடும் நடவடிக்கை !

உள்ளூராட்ச்சித் தேர்தல் சட்டங்களை மீறியோர் மீது கடும் நடவடிக்கை !

உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 106 அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டவிதிகளை மீறி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 26 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 237 முறைப்பாடுகளும் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 170 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *