அயல்வீட்டு ஆச்சியை அடித்துக் கொன்று திருட்டு !
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஏப்ரல் 20 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இரண்டு வயோதிப பெண்கள் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களின் ஒருவர் ஈஸ்டர் ஆராதனைக்காக காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என்ற எண்ணத்தில் 20 வயதான, அயல்வீட்டு இளைஞன் திருடுவதற்தாக அங்கு சென்றுள்ளார். வயோதிப பெண் இளைஞனை கண்டவேளை கொட்டன் ஒன்றினால் மூதாட்டியை தாக்கி கொலை செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டிற்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.