முல்லைத்தீவு, வெள்ளிமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி வள்ளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்படை வட்டாரங்கள் தகவல் தருகையில்,
இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில், கடற்படையினரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த வந்து கொண்டிருந்த நான்கு வள்ளங்கள் மீது கடற்படையினர் பலத்த தாக்குதலை மேற்கொண்டனர். இதன் காரணமாக இரு வள்ளங்கள் முற்றாக நிர்மூலமானதுடன் மேலும் இரு வள்ளங்களைக் கடற்படையினர் கைப்பற்றினர். 14 கடற்புலிகள் இந்ததச் சம்பவத்தில் கொல்லப்பட்டனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.