பா உ அர்ச்சனா கையில்: ஆசிரியை கல்யாணியின் மோசடிக் குற்றச்சாட்டை மறுக்கின்றார் வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் !

பா உ அர்ச்சனா கையில்: ஆசிரியை கல்யாணியின் மோசடிக் குற்றச்சாட்டை மறுக்கின்றார் வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் !

ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசு பா உ அர்ச்சுனாவோடு தன்னுடைய ஓய்வூதியத்தை மோசடி செய்துவிட்டார் என்று முன்வைத்த குற்றச்சாட்டை வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் மறுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே திரு இளங்கோவன் இந்த மறுப்பினை வெளியிட்டார். வடமாகாணசபை மீதும் தன்மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண ஆளநரின் அனுமதியோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து தன்மீது தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மறுப்புத் தெரிவிப்பதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“என்னுடைய பென்சன் 27 இலட்சத்தை பிரதம செயலாளர் இளங்கோவன் கள்ளக்கையெழுத்திட்டு சூறையாடிவிட்டார் “ ஆசிரியை கல்யாணி நேரடியாகத் தன்னுடைய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

பா உ இராமநாதன் அர்ச்சுனாவின் முன்நிலையில் இக்குற்றச்சாட்டு யூரியூப்பர்ஸினால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தேசம்நெற் உம் அக்காணொலியை வெளிட்டதுடன் பிரதம செயலாளர் இது தொடர்பபில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இது தொடர்பிலேயே பிரதம செயலாளர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் விளக்கமளித்த பிரதம செயலாளர் இளங்கோவன் திருநாவுக்கரசு கல்யாணி அவர்களை தாங்கள் நன்கு அறிவோம் என்றும் அவருடைய கோரிக்கைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும் குறிப்பிட்டு தங்களுடைய ஆவணங்களின் படி அவருடைய நிதி நிலுவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளித்த பிரதம செயலாளர் இளங்கோவன் திருநாவுக்கரசு கல்யாணி அவர்களை தாங்கள் நன்கு அறிவோம் எனக்குறிப்பிட்டார். அவருடைய கோரிக்கைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும் குறிப்பிட்டு தங்களுடைய ஆவணங்களின் படி அவருடைய நிதி நிலுவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் இளங்கோவன் சுட்டிக்காட்டினார். இதற்கு தான் தன்னுடைய வெளிப்படையான பதிலை ஓய்வு பெற்ற பின்னரேயே தெரிவிக்க முடியும் என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசுவின் குற்றச்சாட்டை ஆராய 18 ஆண்டுகள் கடந்த நிலையில் மேலுமொரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா உ இராமநாதன் அர்ச்சுனா இது தொடர்பில் தான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றும் உறுதி அளித்து இருந்தார். அரச சேவைகளில் முடிவெடுப்பதில் உள்ள தாமதங்களைக் கருத்தில் கொண்டு இவ்வாறான சிக்கலான விடயங்களை சில மாதங்களுக்கு உள்ளாகத் தீர்தது வைக்க அரசு முயற்சிக்க வேண்டும் 18 ஆண்டுகள் என்பது மிக அநியாயமான நீண்ட காலம்

ஆசிரியை கல்யாணி திருநாவுக்கரசுடைய இப்பிரச்சினை நேரடியான விடயமல்ல. அதில் நிறையச் சிக்கல்கல் உள்ளது. அதனால் நிர்வாகத் தடைகளும் அதிகம் உள்ளது. ஆனாலும் இதனை ஆராய்ந்து ஆசிரியை கல்யாணி குறிப்பிடுகின்ற விடயங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை விரைவில் பெற்று அவருடைய கோரிக்கையை மனிதாபிமானத்தோடு நோக்க வேண்டும். அதேசமயம் பிழையான முன்ணுதாரணங்களை ஏற்படுத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இக் காணொலியில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகள் ஸ்ரிற் ஒப் ஈழம் என்ற காணெலித் தளத்தில் இருந்து பெறப்பட்டது. அவர்களுக்கு நன்றி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *