வடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் வகையில் அவுஸ்திரேலியா 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் நேற்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஐ.நா. முகவர்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார். நீர் சுகாதார இருப்பிடம் உணவு மற்றும் ஆரோக்கிய செயற்பாடுகளுக்கு இந்நிதி பயன்படுத்தப் படும் என அவர் கூறினார். கடந்த டிசம்பர் தொடக்கம் அவுஸ்திரேலிய அரசு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென 23.5 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.