கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தலா 5,000 ஏக்கர் வீதம் மேச்சல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கால்நடைப் பண்ணையாளர்கள் பல வருட காலமாக மேச்சல் நிலமற்ற நிலையில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியதுடன் அவர்களது நாளாந்த வருமானமும் மிகக் குறைந்த நிலையிலே மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், பால் உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இப் பண்ணையாளர்கள் மேச்சல் நிலம் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து அவர் அபிவிருத்தியமைச்சர் சி.பி. ரத்னாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பாற்பண்ணையாளர்களின் பிரச்சினை தீர்வு காணப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் கூடிய பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு கால்நடை பண்ணையாளர்களுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர மற்றும் பிரதேச செயலாளர், கால்நடை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மாயா
ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யுங்கோ. அது போதும்.