மற்றவர்களைப் படிக்காதவர்கள் கை நாட்டு என்று மட்டம் தட்டும் அர்ச்சுனாவுக்கு வேட்புமனு படிவம் நிரப்பத் தெரியவில்லை !
பா உ அர்ச்சுனா மற்றவர்களை அறிவற்றவர்களாக ஏளனம் பண்ணுபவர். அமைச்சர் ராமலிங்கத்தையும் பல தடவைகள் அவருடைய மலையகப் பின்னணியை வைத்து அவமானப்படுத்துபவர். அவர் அமைச்சர் சந்திரசேகரனைமட்டுமல்ல மலையக சமூகத்தையே கீழ்த்தரமாக பேசிவருபவர். தனக்கு மூன்று பட்டங்கள் இருக்கின்றது, மூன்று பல்கலைக்கழகங்களில் படித்தவர், என்றெல்லாம் பெருமை பேசிவந்தவர். கௌசல்யா நரேனையும் சிறந்த சட்டத்தரணியாக பெருமை பேசுபவர். ஆனால் இறுதியில் வேட்புமனுவையே நிரப்பத் தெரியவில்லை என்றதும் படிவங்களில் கையெழுத்துப் போடாமல் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்ததும் இவர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது.
இது தொடர்பில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பா உ அர்ச்சுனா தமிழ் பெண்களை அவமானப்படுத்தி வருவதை கண்டித்ததுடன், தன்னைப் பற்றியும் பொய்களைப் பரப்பி வருவதையும் சுட்டிகாட்டினார்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பல பகுதிகளில் யாழ்ப்பாணத்தின் முன்னணி கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இது ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதி எனவும் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் எனவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது, வடக்கு கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டை தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம் என்றார்.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பல தமிழ்தேசிய கட்சிகளும் என்.பி.பியை குற்றஞ்சாட்டிவரும் நிலையில், யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களுக்குள் நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்தது போல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது.
இந்த வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்ற முறைமைகள் சாதாரணமாக (A/L) கா.பொ.த. உயர் தரம் படிக்கின்ற ஒரு மாணவரிடம் கேட்டால் கூட இது தான் இப்படிதான் என தெளிவாக சொல்லுகிற போது இவர்களுக்கு தெரியாமல் இருப்பதென்பது இவர்களிடத்தே அக்கறையில்லை என்பதை காட்டுகிறது. ஆகையினால், தங்களது இயலாமையை மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியை பயன்படுத்த வேண்டாம் என்றார்.
மேலும் பட்டாலந்தா சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணையைப் போலவே, யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று என்.பி.பியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.