வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “போதையற்ற வாழ்வு’ என்னும் தலைப்பிலான ஓவியப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டி பிரதேச செயலக மட்டம், மாவட்ட மட்டம், மாகாணமட்டம் ஆகிய மட்டங்களில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் பத்து ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டப் போட்டி இடம்பெறும். மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து 15 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டப் போட்டி இடம்பெறும்.
மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்படும் முதலாவது ஓவியத்துக்கு 15 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 10 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 7,500 ரூபாவும் மேலும் ஐந்து சிறந்த ஓவியங்களுக்கு தலா ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் மாவட்ட மட்டத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. போட்டி சம்பந்தமான விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளுமாறு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.