புறக்கோட்டை நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த வியாபார நிலையங்கள் அகற்றப்படுமுன்னர் அந்த வர்த்தகர்களுக்காக மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததாக அரசாங்கத்தின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சட்டவிரேதமாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதைக் கடைகள் அகற்றப்படு முன்னர் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு எவருக்கும் கடைகள் அமைக்க இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார்.