நான் என்ன பேசவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் – என்.பி.பி பெண் எம்பி நிலாந்தி

நான் என்ன பேசவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன் : அதனை டில்வின் சில்வாவோ ஜனாதிபதியோ தீர்மானிக்க முடியாது என்கிறார் என்.பி.பி பெண் எம்பி நிலாந்தி !

ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவோ அல்லது கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்கவோ ஊடகங்களுடன் பேசுவதை நிறுத்துமாறு தன்னை வற்புறுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், ஊடகங்களுடன் பேசுவதா இல்லையா என்பது தனது முடிவு என்று தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

என்.பி.பி பா.உ நிலந்தி கோட்டஹச்சியை ஊடகங்களிடம் வாய் திறக்க வேண்டாம் என என்.பி.பி தலைமை கட்டுப்படுத்துவதாக அண்மையில் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கட்சி தனக்கு அறிவுறுத்தவில்லை என்று நேற்றைய தினம் பாராளுமன்றத்திலும் பா.உ நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்துள்ளார்.

நிலந்தி கோட்டஹாச்சி பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசிய போது, தனது கட்சியால் ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறியதாக’ கூறும் ஒரு கட்டுரையை அந்த ஊடகம் அதன் ஆங்கில மற்றும் சிங்கள ஊடக தளங்களில் வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் இந்தச் செய்தி பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது, அது தவறானது. இதுபோன்ற அடிப்படையற்ற, உறுதிப்படுத்தப்படாத மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுவதன் மூலம் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தை விரிவான விசாரணைக்காகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகள் குழுவிடம் பரிந்துரைக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *