தனியார்மயமக்கலுக்கு தடை: தனியார் மருத்துவ கல்லூரி வைத்தியர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி மறுப்பு !
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவப் பயிற்சிக்காக சில அரச வைத்தியசாலைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச்செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிலாபம் ஆதார வைத்தியசாலை, சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனியார் மயமாக்கல் தங்களுடைய முதல் தெரிவு இல்லை என்பதையும் நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களையும் அதன் முகாமைத்துவம் மற்றும் விடயங்களை ஆராய்ந்து அவற்றை இலாபகரமாக இயங்க வைக்க முடியாமா என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே இரண்டாவது கட்டமாக தனியாரிடம் ஒப்படைப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. தற்போது கைவிடப்பட்ட தொழிற்சாலைகளைக் கூட பொதுச்சேவைகள் – தனியார் இணைந்த முதலீடுகளுடாகவே மீளக்கட்டி எழுப்புவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது.