தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

pr-tam-deli.jpgதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (05) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. அதேநேரம் இச்சந்திப்பில் த.தே.கூட்டமைப்பினரும் கலந்துகொள்ள இருந்ததாகவும் அவர்கள் அத்தீர்மானத்தை கடைசி நேரத்தில் ரத்துச்செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

pr-tam-deli.jpg

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • padamman
    padamman

    போனால் வெடிவிழும் என்று கடைசி நேரத்தில் உத்தரவு வந்ததால் போகவிருப்பம் இருந்தும் போகவில்லை இதை இப்போது சொல்லமாட்டர்கள் பிரபாகரன் மண்டையை போட்டபின்பு புலிகள் எங்களை எப்படி படுத்தினார்கள் போட்டி போட்டுகொன்டு கதை கதையாக சொல்லுவர்கள் இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    எந்தப் பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம் என்று உலகம் நினைக்கிறது. பேசாமல் அல்லது பகிஸ்கரித்து பிரச்சனை தீர்க்கலாம் என புலிகளும் TNA யும் நினைக்கிறது. TNA யை மக்கள் தேர்வு செய்வதை விட கழுதைகளை தேர்வு செய்திருக்கலாம்.

    இப்படியான தலைமைகள்தான் தமிழர் பிரச்சனையை ரப்பர் போல் இழுத்து அப்பாவிகளின் சாவுகளுக்கு காரணமாகினர்.

    ஜனாதிபதியை சந்திக்க வா என்றால், போகாமல் கடிதம் அனுப்பிறதுக்கா TNA யை மக்கள் பாராளுமன்றம் அனுப்பினாங்கள். இலங்கையில் பேச வேண்டிய விடயத்தை இந்தியாவில் போய் பேசுகிறார்கள்? வெளிநாட்டு அமைச்சர்கள் இலங்கை பிரச்சனை பற்றி பேச இலங்கைக்கு வாறாங்கள். இது பகிடியாக இல்லை?

    விசயம் தெரிந்தவர்கள் பேசாமல் ,
    விசயம் தெரியாதவர்கள் பேசி ஏதாவது நடக்குமா?
    என்ன கொடுமை இது?
    நீங்கள் எப்பதான் போய் பேசப் போறீங்க?
    வேலையில்லாதவர்கள் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியதுதானே?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கூத்தமைப்பினர் புலிக்கு தலையை அடகு வைத்துவிட்டு, மக்களுக்கு வாலை காட்டுபவர்கள். அப்புறம் இவர்கள் எப்படி அந்த மக்களுக்காக கதைப்பார்கள். என்று அடவு வைத்த தலையை மீட்கின்றார்களோ அன்று தான் இவர்களுக்கு ஞானம் பிறக்கும். ஆனால் அதற்குள் இவர்கள் பதவியும் போய்விடும்.

    Reply
  • msri
    msri

    மகிந்தாவை;சந்திப்பதும் சந்திக்காமல் விடுவதும் ஓன்றுதான்! சர்வதேசம் மிகக் கருணையோடு சொல்வதை>உதவ முன்வருவதை கணக்கில் எடுக்காது வெளியே போவென்பவருக்கு> பாதபூசை செய்வோர்களின் வேண்டுகோள்கள எம்மாத்திரம்!

    Reply
  • Rohan
    Rohan

    சரி சரி, எங்கள் தமிழ் தலைவர்கள் அதி உத்தம ஜனாதிபதியுடன் பேசியாயிற்று. இனி வன்னி தடுப்பு முகாம்களில் பாலும் தேனும் ஓடும் – அள்ளிப் பருகுங்கள். எங்கள் தமிழ் தலைவர்களுக்கு நன்றி சொல்லவும் மறக்க வேண்டாம்.

    Reply
  • palli
    palli

    றொகன் உங்கள் ஏப்பம் சரிதான். ஆனால் நாம் இன்று வேண்டுவது பாலும் தேனுமல்ல. ரத்தாறு ஓடாமல் இருக்க வேண்டும். அங்கம் இழந்த மனிதர் இனிமேலாவது உருவாகாமல் இருக்க வேண்டும். எல்லாத்துக்கும் மேலாக நாளை நான் உயிருடன் இருப்பேன் என்னும் நம்பிக்கை வன்னி வாழ் தமிழருக்கு (புலிஉட்பட) வர வேண்டும். அதுக்காக தாங்கள் சொன்னவர்களின் பேச்சு உதவாகாமல் போகலாம் ஆனால் எமக்காக சில தமிழர் பேசுகிறார்கள் என்னும் நம்பிக்கை அந்த தமிழருக்கு வருமா இல்லையா?? முடியாத புத்திசாலியை விட முடிந்த முட்டாள் எவ்வளவோ மேல்.

    Reply
  • Rohan
    Rohan

    பல்லி – இந்த பேச்சு எல்லாம் எங்கு தீர்வைக் கொண்டு வந்தது? களுத்துறைக் கைதிகளைப் பார்க்காக தலவர்களா? அவர்கள் கேட்காத உறுதி மொழிகளா? தலை ஆட்ட மட்டும் தெரிந்தால் போதுமா?

    Reply