கொழும்பு – மருதானை காவல் நிலையத்தின் சிறைக்கூடத்தில் உயிரிழந்த வடக்கைச் சேர்ந்த தமிழ் பெண், தவறான முடிவெடுத்து உயிரிழக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பா. உ சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பெண் எவ்வாறு காவல் நிலையத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முடியும் என்றும் அவர் மேலும் கேள்வியையும் பா.உ சிறிதரன் எழுப்பியிருந்தார்.
பா.உ சிறிதரனின் கேள்விக்கு பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வவுனியாவை சேர்ந்த குறித்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக இருந்து பிடியாணையில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை துரதிஸ்டமான சம்பவம் நடந்துள்ளது. பிரேத பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என்றார்.