ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்

j-j-j.jpgமுன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் நேற்று மாலை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இன்று (நேற்று) பகல் 12.30 மணி அளவில் “இன்-லேன்ட்” கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை அனுப்பியவர் பெயரோ, முகவரியோ இல்லை.

கடிதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரை கொலை செய்து விடுவோம் என்று கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு முன்னாள் முதல்-அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. கடிதத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-

நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. எனவே உங்களை மே 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதிக்குள் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கலாம். தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள். தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பும் போது உங்கள் வீட்டு வாசலில் குண்டு வெடிக்கலாம். நீங்கள் கொலை செய்யப்படும் தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படும். எச்சரிக்கையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் வாசகங்கள் உள்ளன. கடித வாசகங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குண்டு வைத்துக் கொல்லப் போவதாக கொலைமிரட்டல். ஆச்சரியம் தான். நடக்கும் ஆனால் நடக்காது……

    Reply
  • palli
    palli

    அம்மா இதுவரை நீங்கள் ஆடியது செஸ். ஆனால் இப்போ அவதும் ஆட நினைப்பதும் கபடி. முன்னதுக்கு மூளை வேண்டும். பின்னதுக்கு பலம் வேண்டும். ஆனால் கொடுமையென்னவெனில் இரண்டுமே உங்களுக்கும் உடன் பிறவா சகோதரிக்கும் கம்மி கம்மி.

    Reply
  • BC
    BC

    தமிழ் தேசிய தலைவி ஜெயலலிதாவிக்கு மிரட்டல் விட்டால் அழிவு தான் என்று சங்கே முழங்கு.

    Reply
  • msri
    msri

    செல்விக்கு நேற்றுடன் கண்டம் கடந்து விட்டது! இனி நித்திய ஆயள்தான்! உஙகள் பலனின்படி 13-ந் திகதிக்குப் பிறகு பெரிய பதவியே காத்திருக்கு!

    Reply
  • சாண்டோ
    சாண்டோ

    கலைஞர் கருணாநிதியாலும், செல்வி ஜெயலலிதாவாலும் அல்லது தமிழகத்து ஜாதிக் கட்சிகளாளும் இலங்கை விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாது என்று “இலங்கைத் தமிழருக்கு தெரிந்தும், அடிபட நினைப்பது – ஒரு நல்ல நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்ட “கிருமிகளுக்கு” பரவ “கேப்” கொடுத்தால், பரவும்தானே!. விடுதலைப் புலிகளை ஆபத்தானவர்கள் என்ற பல்லியின் கருத்துக்கு, தமிழக மக்கள் உடன்பாடானவர்கள் அல்ல. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, பிரபாகரன், கருணா, டக்கஸ், …என்ற தனிக் குழுக்களோ, மனிதர்க்ளோ முண்டா தட்டும் சுலபமான களமல்ல நாம் விளையாடுவது. மேற்குலகம் கணித்திருப்பது போல தமிழினம் என்பது ஒன்றுதான், அதை ஒன்றிணைப்பது என்பது போல “முட்டாள்தனமான அரசியல்” ஒன்றில்லை – அதைதான் இலங்கைத் தமிழர்கள் செய்கிறார்கள். இப்போது தேவை “ஃகுவோரன்டீண்”, பிடித்திருப்பது “சமுதாய நோய்”, அதை முதலில் பரவ விடாமல் தடுக்க வேண்டும்.

    Reply