மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இம்மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு,கப்பம் கோரப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இம்மாணவியின் சடலம் கடத்தப்பட்டு 5 நாட்களின் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இந்நபர்களைக் கைது செய்திருந்தனர் .
மாணவியின் பாடசாலை புத்தகப்பை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டித் தருவதாகக் கூறி இன்று அதிகாலை பாரதிபுரத்திலுள்ள முஸ்லிம் மையவாடிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றதாகவும், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களால் அவர்கள் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட போது, பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாவும் சம்பவம் தொடர்பான பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
illangayan
என்னதான் நடக்கிறது? திருகோணமலையிலும் சந்தேக நபாகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்ப மட்டக்களப்பிலும் அதே கதைதான் என்றால்…. உதிலை எதோ இருக்குப் பாருங்கோ.
msri
இது கருணாவின் ஏற்பாடுதானோ?
பார்த்திபன்
ஒவ்வொரு முறையும் சந்தேகநபர்கள் சுட்டுக் கொல்லப்படுவது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. இப்படியான நிகழ்வுகள் யாரையோ காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளாகவே தெரிகின்றது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றது கிழக்கு மாகாண அரசு??
நண்பன்
பிள்ளையானை கவிழ்க நடக்கும் சதியாகவே தெரிகிறது. சாகும் இரு தரப்பும் அப்பாவிகளாக இருக்கலாம்.
Raj
ஹலோ நண்பர்களே எதற்கெடுத்தாலும் கருணா பிள்ளையான் என்று துள்ளிக்குதிக்காமல் உண்மைகள் அடிப்படைகளைத்தேடுங்கள்.நானும் சமுக மட்டத்தில் மக்களோடு சேவையாற்றிய வகையில் போராட்டத்தின் கோரவடுக்களை பதிவுகளாக்கி சுமந்துகொண்டுள்ள வகையில் ஒரு கருத்து-கருணாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை கிழக்கின் இளம் குருத்துகளின் தேவையற்ற ஓர் அழிவிலிருந்து காப்பாற்ற கருணாவை ஓர் கருவியாகவே தெய்வம் பயன்படுத்தியுள்ளது என்பதனை வன்னி அழிவுகள் காட்டிநிற்கின்றன. இல்லையேல் இதுவரை 10000 கிழக்கின் முளைகள் முள்ளிவாய்க்காலில் சாரன் கட்டுடன் ஆற்றங்கரையோரம் கிடத்தப்பட்டடிருக்கும் என்ற உண்மையில் மட்டும் என்னுடன் உடன்படுவீர்களா?
palli
பல்லி எப்போதும் கொலைகளை ஆதரிப்பதில்லை. அதில் உடன்பாடும் கிடையாது. ஆனால் இந்த செய்தி சரியாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு பல்லியின் பாராட்டுக்கள். பார்த்திபன் சொன்னது போல் அடிக்கடி சந்தேக நபர்களை பொலிஸார் போட்டு தள்ளுவதை விட்டு. ஒரேயடியாக செயல்பாட்டாளர்களை (அவர்களைதான்) சந்தேகத்தின் பேரில் ஏதாவது செய்து விட்டால் அடிக்கடி சிலரை கொல்ல வேண்டி வராதே. பார்த்திபன் நீங்க நினைத்ததை பல்லி எழுதி விட்டது அப்படிதானே.
palli
ராஜ் எதோ கெட்ட வார்த்தையில் திட்டுவது புரிகிறது ஆனால் என்ன என்பதுதான் புரியவில்லை. வெக்கபடாமல் சொல்ல வந்ததை மனம் விட்டு சொல்லவும்.
X and Y
I think there have been some high and low ranging personalities including police and security officers involved in these crimes, otherwise why the investigators (police) killed the suspects and raze the evidences. I heard from some east rural people that this kind of kidnappings and killings are their normal day of life in the past. The causes for these incidents were the former LTTE carders who left the LTTE with Karuna and they would like to have a luxury life by crimes as they have had in past before they left the LTTE.
நண்பன்
இங்கே குற்றவாளிகளை மறைக்க கருவிகளாகப் பயன்படுத்தப் பட்டோர் கொல்லப்படுவதாகவே கருத முடிகிறது. இதில் யாரை காப்பாற்ற முயல்கிறார்கள் என்பது அந்த காவல் துறைக்கு நிச்சயம் தெரியும். அவை மறைக்கப்பட இதில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்கள் கொல்லப்படுகிறார்கள். இவர்களை விசாரித்திருந்தால் அதன் உண்மைகளை காவல் துறை வெளியிட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் கூடிய விரைவில் அவை வெளிவரும்.
இங்கே கருணா – மகிந்த அரசு – பிள்ளையான் ஆகியோரில் யாரோ ஒருவருக்கு இந்தக் கொலைகளில் சம்பந்தம் இருப்பதாகவே தெரிகிறது. இவை அரசியல் சம்பந்தப்பட்ட உள் நோக்கம் கொண்ட கடத்தல்களே? இதன் சூத்திரதாரி யார் என்பதை யாராவது தெரிந்தால் சமூகத்துக்கு கொண்டு வரவேண்டும். அதன் பின் இப்படியான கொலைகள் நிற்கும். அதுவரை அது தொடரவே செய்யும்?