கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்று நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ நிகழ்வும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர்களும் கனடியத் தமிழர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது:
பல தரப்பினரது அவசர வேண்டுகோள்களுக்கு இணங்க ரொறன்ரோவின் நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (05.05.09) நடைபெறவிருந்த ‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக பின்போடப்படுகின்றது. எமது தாயக அவலம் தீர்க்கும் வரை என்றும் அடங்காது எமது ‘அடங்காப்பற்று’.
‘அடங்காப்பற்று’ மற்றும் மனிதச்சங்கிலி – 3 ஆகிய நிகழ்வுகளின் மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தரப்படும். உறுதியும், ஓர்மமும் கொண்ட ஒற்றுமைப்பட்ட சமூகமாக எமது தாயக அவலம் தீரும்வரை தொடர்ந்தும் முன்னெறுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது
மாயா
அடக்கி வாசியுங்கோ. இருந்த இடம் இல்லாமல் போயிட்டுது. வந்த இடமும் இல்லாமல் போயிடும். கவனம்.
thurai
தன்மானத் தமிழன்,தலைவணங்காத் தமிழன், அடங்காப்பற்று எல்லாம் உயிருக்குப் பயந்து ஓடிவந்து, உலகமெல்லாம் அகதிகளாகிய, உலகத்தை ஏமாற்றும் தமிழரிடமே உள்ளது.
துரை
பார்த்திபன்
சிலவேளை எனி “அடங்கும்பற்று” என நிகழ்ச்சி நடாத்தி, தமது கடந்தகாலத் தவறுகளுக்கு பரிகாரம் தேடப் போகினமோ??
palli
இப்படியான குரங்குதனமான பேச்சுதான் ஒரு ……….செய்ய முடியாமல் இருக்கு.
அடங்கா பற்று. அடங்கிய சொத்து. அறுந்த சங்கிலி. ஆராவது பிள்ளைகள். பட்டிணி சாவு. வணங்காத கப்பல். வளைந்த விமானம். அனைத்துமே இறுதி நிதி சேகரிக்க உதவுமே தவிர தமிழர்க்கு எந்த வகையிலும் உதவாது என்பது இந்த உதவா கரைகளுக்கு தெரியாதா என்ன??