![]()
நாடெங்கிலுமுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களையும் இறைச்சி கடைகள் மற்றும் மிருகங்களை அறுக்கும் நிலையங்களையும்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 8ம், 9ம் திகதிகளில் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் இத்தினங்களில் உல்லாச ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்வதையும், சுப்பர் மார்கெட்களில் இறைச்சி வகைகள் விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இத்தினங்களில் குதிரைப் பந்தய நிலையங்கள், கெஸினோ கிளப்கள், இரவு களியாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடிவிடுவதற்கும் அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.