![]()
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பெவர்லி ஜே ஒடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, மஹிந்த சமரசிங்க, ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளிதரன், புத்ரசிகாமணி, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலளார் கலாநிதி பாலித கொஹன மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அன்ஜெலா பொக்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
palli
இதெல்லாம் ஜயர் பிடித்த பிள்ளையாருகு மேல் அறுகம்புல் குத்துவது போலான சம்பிரதாய நிகழ்வுகள்தான் அதை பெரிதுபடுத்தி ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ளலாமா??
நண்பன்
மகிந்தவை மடக்கிறன் என்று வீராப்போட போறவை, பின்னர் மகிந்தவுக்கு மிலியன் கணக்கில செக் எழுதிக் கொடுத்துப் போட்டு வரிகினம். புலம் பெயர் புலி வால்களின்டயும் பொடிகள்டயும் புண்ணியத்தில சிறீலங்காவுக்கு போற வெள்ளைகள் எல்லாம் உபத்திரவம் கொடுக்கிறதுக்கு பதிலா , உதவியில்லே குடத்துட்டு வரிகினம்?
முன்ன மகிந்த நாடு நாடா போய் கதைச்சவர். இப்ப அவங்கலெல்லாம் மகிந்த வீட்டுக்கு (மாளிகைக்கு) வந்து கதைக்கினம். கொஸ்பிடாலிட்டி.
கூட்டிக் கழிச்சிப் பாத்தா மகிந்தவுக்கு சுக்கிர திசைதான் வேலை செய்யுது.