பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடுகிறது.இன்றைய சபை அமர்வின்போது அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரனையை முன்வைக்கவுள்ளார்.
மேல் மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதன்; பின்னர் இன்று மீண்டும் கூடுகிறது.