மலேசியாவில் ‘உலகத் தமிழ் சாதனையாளர் 2024’ விருது பிரித்தானியத் தமிழருக்கு!

மலேசியாவில் ‘உலகத் தமிழ் சாதனையாளர் 2024’ விருது பிரித்தானியத் தமிழருக்கு!

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற, பாரதியாரின் 142வது பிறந்ததினத்தையொட்டி நடந்த நிகழ்விலேயே இவ்விருது வழங்கப்பட்டது. உலகத் தமிழ், சங்கம், சென்னைத் தமிழ் சங்கம், மலேசியத் தமிழ்ச் சங்கம் இணைந்து மலேசியாவின் 5 மாநிலங்களில் இந்நிகழ்வைக் கொண்டாடியிருந்தன. டிசம்பர் 10ல் நடைபெற்ற இந்நிகழ்விலேயே பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கரப்பிள்ளை முருகையாவுக்கு உலகத் தமிழ் சாதனையாளர் 2024 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் லண்டன் தமிழ் கல்வியகத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் ஆற்றிவரும் கல்வி, சமூக பண்பாட்டு, கலாச்சார வளர்ச்சிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தேசம் சஞ்சிகையாக வெளியான காலங்களில் அதன் கட்டுரையாளராகவும் சங்கரபப்பிள்ளை முருகையா இருந்துள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *