தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா மற்றும் அனைத்துலகத்தின் தாயக தமிழர்களுக்கு எதிரான மௌனத்தை கண்டித்தும் அவுஸ்திரேலியாவில் சுதாகரன் தனபாலசிங்கம் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார்.
palli
வருத்தமாக இருக்கிறது. உன்னாவிரத போராட்டம் கூட இப்போது விளம்பர யுத்திபோலும் எம்மவரின் ரெலிகாட் கடை போலும் யாரும் எப்போதும் நடத்தலாம் என்னும் நிலைக்கு கேவலமாகி விட்டது.
காந்தி இருந்தால் கூட இதை பார்த்து தற்க்கொலை செய்து கொள்வார். பல்லி இருப்பவர்களை கிண்டல் செய்யவில்லை. இயக்குபவர்களை இனம் காட்டுகிறேன். தவறாயின் மன்னிக்கவும்.
thurai
ஈழத்துக்காந்தி செல்வா சத்தியாக்கிரகம் செய்து சிங்களவரிடம் அடிவாங்கியதை பழித்து விட்டு ஆயுதமெடுத்தவர்கள், இன்று உண்ணா விரததத்தை உலகரங்கில் காட்டுகிறார்கள். இவர்கள் உலகிற்கு கூறுவதென்ன? ஆயுதத்தால்முடியாது அகிம்ஸ்சையில் இற்ங்கிவிட்டோம் என்றா. அல்லது
அகிம்ஸ்சையில் இப்போ இற்ங்கிவிட்டடோம் இனி ஆயுதமும் தூக்குவோம் என்றா?
துரை
sangu
லண்டனில் பரமெஸ்வரன் தன்னுடைய அரசியல்த் தஞசக் கோரிக்கைக்கு கேஸ் ஸ்ரோங் ஆயிட்டுதாம் இப்ப அவுஸ்திரேலியாவிலும் என்ன கேஸ் பிரச்சினையோ – புலம் பெயர் மக்கள் இப்ப கெட்டிக்காரர்கள் கண்டியளோ. ம் ம் நடக்கட்டும் தமழீழப் போரட்டம்