மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அடங்கலான மேல் மாகாண அமைச்சர்கள் இன்று (04) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். அலரி மாளிகையில் நடைபெறும் இந்த வைபவத்தில் அமைச்சர்கள் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளனர்.
மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி அமோக வெற்றியீட்டியது. மேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை முதலமைச்சராக நியமிக்க ஐ. ம. சு. முன்னணி தீர்மானித்துள்ளதோடு நான்கு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களி லிருந்து தலா ஒருவரும் கொழும்பு மாவட்டத்திலி ருந்து இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் புதியவர்களே அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறின.