குண்டு வெடிப்புக் காட்சிகள், அகோர மரணங்கள், அழுது புலம்பும் பெண்கள், கால்நடைகள் போன்று நீண்ட தூரம் காணப்படும் அகதிகள் என்பனவற்றின் பின்னணியிலான பாடல் அடங்கிய சி.டி.யானது இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இனி என்ன செய்யப்போகிறோம்’ என்பது பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சி.டி.யின் தலையங்கமாகும். இப்போது இச் சி.டி. பரந்தளவுக்கு சுற்றோட்டத்திற்கு விடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிஸுக்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டுகோளும் இந்த சி.டி.யில் விடுக்கப்பட்டுள்ளது.
16 நிமிடங்கள் அடங்கிய இச் சி.டி.யானது பார்ப்பவர்களின் அபிப்பிராயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக நியூஇன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
palli
இவை மகிந்தாவின் வரவேற்பறையை அழகு படுத்தட்டும். அப்போதாவது அவருக்கு தான் செய்யும் தவறு தெரியுதா தெரியவில்லை.
நண்பன்
palli ,
அன்று மகிந்தவை புலிகள் மடையன் என்று நினைத்தனர்.
இன்று மகிந்த புலிகளை மடையர் என்று நினைக்கிறார்.
இப்ப தவறு யாரிடத்தில்?
palli
நண்பா மக்களிடத்தில் தான் தவறு. காரனம் இருவரையும் மனிதபிறவிகளாக நம்பியது நம்புவது.
பார்த்திபன்
இவர்கள் உண்மையாக நடந்தவையை வெளியிட்டால் பாராட்டலாம். ஆனால் நான் அறிந்தவரையில் சில உண்மைகளான காட்சிகளுடன் பல கிராபிக் செய்யப்பட்ட புரளிகளும் இணைக்கப்பட்டே இந்த சிடியை வெளியிட்டிருக்கின்றார்கள். இதற்கு நல்ல உதாரணம் நடிகர் வடிவேலு தான் பார்த்த சிடியில் இராணுவம் பெண்களை கொண்டு போய் அவர்களது மார்பகங்களை கத்தியால் அறுப்பதை தான் பார்த்ததாக தெரிவித்தார். இப்படி எங்கே நடந்தது என்பதை பல்லி தான் விளக்க வேண்டும்.