யாழ் மாவட்டத்தை தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய இராமலிங்கம் சந்திரசேகர்,
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பாரிய ஆதரவு இல்லை என பலரும் குற்றஞ்சாட்டினார்கள். நான்காவது ஸ்தானத்தில் தான் அறுவை யாழ் மக்கள் வைத்திருக்கிறார்கள் என கூறினார்கள். அப்போது நாங்கள் கூறினோம் இலங்கையின் மொத்தமான மாவட்ட ரீதியாக கடந்தகால தேர்தலுடன் ஒப்பிடும் போது முதலாவது ஸ்தானத்தில் இருக்க கூடிய மாற்றம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது என்று. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எங்களை முழுமையாக நம்பி எங்களை முதல் ஸ்தானத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. நாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தமிழர் மீதும் முஸ்லீம்கள் மீதும் இனக்கலவரம் வெடிக்கும், மீள ஒரு இருண்ட யுகம் உருவாகும், டொலர் 400 ரூபாயாக போகிறது, என்றெல்லாம் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இவற்றை தாண்டி மக்கள் எங்களை நம்பினார்கள். அந்த நம்பிக்கையை நாம் ஏற்படுத்தினோம். இந்த மக்களின் நம்பிக்கையை இந்த அரசு காப்பாற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.