பன்றிக் காய்ச்சலால், உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை மெக்ஸிகோ அரசாங்கம், 176 இல் இருந்து 101 ஆக குறைத்துள்ளது.
மெக்ஸிகோவில் ஆரம்பித்ததாக நம்பப்படும் இந்த வைரஸ் முன்னர் அஞ்சப்பட்ட அளவுக்கு ஆபத்தானது அல்ல என்பதற்கான அறிகுறிகள் வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.
இதேவேளை, உலகெங்கிலும், சுமார் 15 வெவ்வேறான நாடுகளில், மொத்தமாக இந்த நோயினால், 600 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.