ஈழத்தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி மானியம்: ஜெ. உறுதி

j-j-j.jpgஇடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து கீழவீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியா அமைதிப்பூங்காவாக மாறி பொருளாதார வளர்ச்சி பெறும்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வழி செய்யப்படும். தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு ரூ. 10 ஆயிரம் கோடி மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • msri
    msri

    மே 13வரை உங்களால் பிகடனப்படுத்தபபட்ட “தனிஈழத்திற்கு” எல்லாம் சொல்லியாச்சு> அடுத்து ஐனாதிபதி- பிரதமர்- பாதுகாப்பு -நிதி அமைச்சர்கள் யாரென்பதையும் சொல்லலாமே! சொன்னால் 40தொகுதிகளும் உங்களுக்கே! இதற்கு தெசம்நெற் வாசகர்களும் பெயர் சொல்லலாம்!

    Reply
  • Rohan
    Rohan

    ஆனால்,குருட்டுத் தனமாக நாம் பார்க்க மறுக்கும் ஒரு தொக்கி நிற்கும் செய்தி ஒன்று இருக்கிறது.

    தமிழக அரசியல்வாதிகள் குருடர்கள் அல்லர். அவர்களுக்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அல்லலுறும் இலங்கைத் தமிழ் மக்கள் பற்றி தமிழக மக்கள் எவ்வளவு துடித்துப் போயிருக்கிறார்கள் என்பதை ஏதோ வகையில் தமிழக அரசியல்வாதிகள் கண்டு கொண்டுள்ளார்கள். எல்லாப் பிரதான கட்சிகளுமே இலங்கைத் தமிழ் மக்கள் தான் தமிழக முடிவுகளை நிர்ணயிக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.

    எங்களுக்குப் புலி எதிர்ப்பு தான் முக்கியம். முதிர்ச்சி குறைந்த நையாண்டிகளை எழுதியே நாம் காலம் கழித்து விடலாம்.

    Reply