ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்போம்: வைகோ

vaiko00001.jpgதேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு ஆதரவாக பேசிய வைகோ,

இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு காரணம் இந்திய அரசு தான். உலகமே போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி வரும் வேளையில், சோனியாவும், மன்மோகன் சிங்கும் மௌனம் காக்கின்றனர். மேலும், முதல்வர் கருணாநிதியோ அண்ணா சமாதியில் படுத்துக்கொண்டு உண்ணாவிரத நாடகமாடுகிறார்.

அடுத்த மாதம் மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா சொன்னது போல் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • சங்கு
    சங்கு

    இந்திய தேர்தலுக்கு பிறகு தமிழீழம் கேட்டவைகளை எங்கை தேடிப்பிடிக்க போறியள்.

    Reply
  • s.s.ganendran
    s.s.ganendran

    கிழிந்தது கிருஸ்னகிரி. புலியின் தமிழீழக் கனவு கலைந்த்தாலும் ஜெயயலலிதாவும் வை கோவும் தொடர்ந்து கனவு கண்டவண்ணம்தான் இருக்கிண்றனர்.
    தனது மக்களுக்கு என்ன செய்வேன் எனக்கூறமுடியாத இந்த்தக் கூத்தாடிகள் இலங்கைத் தமிழர்களை தமது தேர்தல் வெற்றிக்காக வியாபாரமாக்குகிண்றார்கள்

    Reply
  • msri
    msri

    அடுத்து வரும் புதிய ஆட்சியில் வை.கோ.வே>பாதுகாப்பு வெளிநாட்டு அமைச்சராக இருப்பார்! அவரது மேற்பார்வையில்> “தனிஈழம்” அமைக்க இலங்கைக்கு இந்தியப்படை விரையும்! அப்போ தம்பி பிரபா இல்லாத தங்கையின்(செல்வி) தனிஈழத்திற்கு வை;கோ;ஓ;கே;> அடுத்த இரண்டு மாதங்களில் மகிந்தா-கோத்தபாயா-உட்பட முக்கிய அமைச்சர்கள் கைதாகி இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படுவர்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தேர்தல்காலத்து “சடுகுடு” விளையாட்டு.இன்னும் கால்பணத்திற்கு இரண்டு அடைக்கலாம் குருவியும் கொடுப்பார்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    வைகோ கூறுவது சரி!, இதிலிருந்து, விடுதலைப்புலிகளை, தமிழர்களின் பாதுகாவலனாக, இராணுவமாக வைகோ அங்கீகரிக்கவில்லை என்று தெரிகிறது. புலிகளை, தங்கள் தரப்பு நியாயங்களை கூறும் பிரதிவாதியாகத்தான் இன்னும் வைகோ வைத்திருக்கிறார்- புலிகளுக்கு சார்பாக இன்னும், அவரைப் பொறுத்தவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. தமிழர் ஒரு “இனம்” என்பதன் அடிப்படையில், அவர்களை காப்பாற்ற வேண்டிய முதல் கடமை, இலங்கை இராணுவத்தையும், இந்திய இராணுவத்தையும் சேர்ந்ததாகும். “சட்ட ரீதியாக” இவர்கள் இருவரும் தம் கடமைகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைய, அவர்கள் தரப்பு வாதங்களை, அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு அமைய, இலங்கை, இந்திய நீதி மன்றங்களில், விளக்கங்களை “தீர்ப்பாக” “தமிழர்கள்” தரப்பு பெற்றதாக நான் அறிந்தவரையில் இல்லை.

    “இனப்படுகொலை” என்பதன் அடிப்படையில், “சர்வதேச நீதிமன்றத்திற்கோ”, “சர்வதேச சமூகத்திடமோ” செல்வதற்கு முன்,இத்தகைய ஒரு “விளக்கம்” அவசியம். இனம் என்ற அடிப்படையில், ஜனநாயக ரீதியாக, இலங்கைத் தமிழர், தமிழகத் தமிழரை ஒப்பிடும் போது, ஒரு சிறு பகுதியினரே. அறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி, “திராவிடநாட்டு கோரிக்கையைதான் கைவிட்டோம், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்பது, தமிழினத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்தக் கருத்தை நான் வெளியிட்ட போது “தமிழ் தேசிய புலிவால்களால்” ஏளனம் செய்யப்பட்டேன் – அவர்கள் நோக்கம், இந்தியாவை எதிர்ப்பதாக பூச்சண்டி காட்டி, அரசியல் வாதிகளிடம் மருத்துவ கல்லூரி சீட் போன்ற சலுகைகளை பெறுவதாககவே உள்ளது. இலங்கை,இந்திய நீதிமன்றங்களில் பெறப்படும் விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லையென்றால், இவ்விருவரும் “இனப்படுகொலையில்” ஈடுபடுகின்றனர் என்று “இலங்கைத் தமிழர்கள்” தற்போது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை, “ஆதாரப் பூர்வமாக”, “சர்வதேச சமூகத்திடம்” எடுத்துச் செல்லலாம். அவ்வாறில்லாமல், தாந்தோன்றித்தனமாக, கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பில்லாமல், உணர்ச்சிகளைக் கிளப்பிக் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடுவது, சட்ட ரீதியான அணுகுமுறையாகாது.

    இந்திய இராணுவமும், இலங்கை இராணுவமும், “காலனித்துவ ஆதரவாளர்கள்”, ” தந்திரத்திற்காக அஹிம்சை மற்றும் ஆயுத வழியில் போராடியவர்கள்”, “தத்துவ வாதிகள்” ஆகியோரைக் கொண்டே அமைந்திருக்கிறது. சர்வதேச சமுகம் யாரைக் காப்பாற்றும் கடமைப்பாடுடையது, இலங்கை-இந்திய இராணுவங்கள் யாரைக் காப்பாற்றும் கடமை பாடுடையவர்கள் என்பது, சட்ட ரீதியாக வெளிப்படுதப்படுதல் வேண்டும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    மங்கள சமரவீர மகிந்தவும் கோட்டபாயாவும் படங்களில் வரும் கிங்கொங் மாதிரி மார் தட்டிக் கொள்வதாக கேலி செய்கிறார். ஜெயாவும் வைகோவும் கூட அப்படித்தான் போல……….இரு பக்கமும் இரண்டு கோஸ்டியையும் நினைத்துப் பார்த்தால்………( சிரிப்புதான்)

    Reply