கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிகாவை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்மாணவி கடத்தப்பட்டுள்ள சம்பவத்தை தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.