யுத்தம் ஏற்படுத்திய இனவாதம் புலத்திலும் எதிரொலிக்கிறது!

Protest_Michiganவட அமெரிக்காவின் மிசிகன்  மாநிலத்தின் தலைநகர் லான்சிங்கில், அமெரிக்க வாழ் சிங்கள மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் அதே இடத்தில் இடம்பெற்றது

அமெரிக்க செனட்சபையின் மிச்சிகன் மாநில உறுப்பினர்களும், சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக, நன்றி தெரிவிக்கப்படும் வகையில் சிங்கள மக்களால் லான்சிங்கின் தலைமை அலுவலக முன்றலில் வெற்றிவிழா ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருக்கின்ற போதும் சிகாகோ, டொறொன்றோ மாநிலங்களில் இருந்து பல மணித்தியாலங்கள் பயணம் மேற்கொண்டு மிசிகன் மாநிலத்துக்கு வந்த தமிழ் மக்கள் காலை 8 மணி முதல் ஒன்று கூடி, லான்சிங் தலைமை அலுவலக கட்டிடத்தின் முன் குவிந்து சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளை கண்டித்து தமது ஆர்ப்பாட்டத்தினை நடாத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Protest_Michigan‘Sinhala Terror Government,’
‘Rajapakse a war criminal,’
‘President Obama, help the Tamils,’
‘UN, save the Tamils,’
‘LTTE, our freedom fighters,’
‘Prabhakaran, our national Leader,’
‘Media break the silence’

ஆகியவாறு சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான தமது கோபத்தினை வெளிப்படுத்தும் முகமாக உரக்க கோஷங்களை எழுப்பியபடி இவ் ஆர்ப்பாட்டத்தினை தமிழ் மக்கள் நடத்தினர்.

இதே போன்றதொரு முரண்பாடு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றது. உலகில் ஏனைய பாகங்களில் போன்று யுத்தமும் அது உந்திவிட்டுள்ள தேசியவாத அலை தற்போது இனவாதமாகப் பரவுகிறது. இதனை தற்போது புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணரக் கூடியதாக உள்ளது. லண்டனில் விகாரைக்கு வைக்கப்பட்ட தீ தமிழ் அரச ஆதரவு (பெரும்பாலும் சிங்கள மக்களின்) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் புலி ஆதரவு (பெரும்பாலும் தமிழ் மக்களின்) ஆர்ப்பாட்டக் காரர்களுக்குமிடையேயான மோதல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.

வன்னியில் மனித அவலத்தில் இருந்து மீண்டுள்ள மக்களை நோக்கி இனவேறுபாடற்ற உதவிகளை அனைத்து மக்களும் முன்னெடுக்க புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த மக்களின் பெயரால் தேசியவாதமும் இனவாதமும் தலைக்கேறி மோதல்கள் தலைதுக்குகின்றன.

ஒரு பக்கத்தில் மனிதம் அழிந்து கொண்டிருக்க அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு வெற்றி – தோல்விக்காக பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் அந்தத் தளத்தில் உள்ள மக்கள் யதார்த்தத்தைப் புரிந்த கொண்டு எதனைச் செய்ய வேண்டுமோ அதனை முன்னெடுக்கிறார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

  • Thambiah Sabarutnam
    Thambiah Sabarutnam

    உலகத்தை ஏமாத்தி அரசியல் அடைக்கலம் பெற்றவரே புலன் பெயர்ந்த தமிழ் பேசும் இலங்கையர் . புலன் பெயர்ந்த தமிழ் பேசும் இலங்கையரை ஏமாத்தி தம்மை வளர்த்த்தவரே …………. பிரபாகரன். பிரபாகரனை ஏமாற்றி தம்மை வளர்பவ்ர்கள் புலிக்கு வெளி நாட்டில் காசு சேர்ப்பவர்கள் . இந்தக் கொடியவர்களின் வலையில் சிக்கித்தவிப்பவரே மக்கள்

    Reply
  • thurai
    thurai

    புலத்தில் சம உருமைகழுடன் வாழ்ந்துகொண்டு உல்லாசமாக வாழ்பவர்களே பலர். இவர்களில் இனங்களிற்கிடையான சமாதானத்தைப் பற்ரி சிந்திப்போர் சிலரே.

    இன்வாதத்தை வளர்க்கும் தமிழர்களால் இலங்கைத்த்மிழினம் உலகில் கண்ணால் பார்ர்கக்கூட உதவாத இனமாக மாறிவிடும். வாழ்க் தமிழீழ மோகம்.

    துரை

    Reply
  • kullan
    kullan

    இனத்துவேசம் என்பது ஒரு வியாதி. இது மனிதமூளைகளில் பரபும் ஒரு மூளைக்காச்சல் போன்றது. தொற்றினால் இலகுவில் விட்டுப்போகாது. மூக்குள்ள வரையும் சளிபோல் இனத்துவேசம் முன்னிற்கும். இந்த இனச்துவேசம் வெளிநாடுகளுக்குத் தொற்றும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இனி சரி எமது புதிய வெளிநாட்டுப்பரம்பரைகள். ஐரோப்பிய வெளிநாட்டுத் தெருக்களங்களில் தேசியப்போர். வாழ்க தேசியம். இந்த இனத்துவேசம் எனும் மூளைக்காச்சலை அழிக்க அறிவெனும் மருந்தைக் கண்டுபிடியுங்கள். இந்தமருந்து இலங்கையில் மட்டும்தான் உண்டு. இல்லையேல் தொற்றை எதிர்நோக்கி இருப்பவர்கள் எம்குழந்தைகள் என்பதை மறந்து விடாதீர்கள்

    Reply
  • மாயா
    மாயா

    அன்று,
    கோர யுத்தம் நடந்த தேசங்களுக்கு மனிதத்தை போதிக்க ஆசியாவிலிருந்து புத்தனும் காந்தியும் ஏசுவும் கிடைத்தார்கள்.
    இன்று,
    அமைதியாக இருந்த தேசங்களுக்கு கொலை வெறியை போதிக்க பின்லாடனும் பிரபாகரனும் …………. கிடைத்துள்ளார்கள்

    Reply
  • நண்பன்
    நண்பன்

    கனடா டொரோன்டொ போலீசாரால் புலி ஆதரவாளர்கள் கைது
    http://www.youtube.com/watch?v=CR6XRbaj0O8

    Reply
  • மாயா
    மாயா

    பிரான்சு இளையோர்களே பாடசாலைக்கு போவதை வருகிற புதன்கிழமைவரை பகிஸ்கரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள.
    இதன் நோக்கம் பாடசாலையைப் புறக்கணிப்பதன் மூலமாக பிரான்சு அரசாங்கத்தின் கவனத்தை பெரிதளவில் ஈர்க்கமுடியும் பெற்றோர்களே முன்வாருங்கள் மாணவர்களே புறக்கணியுங்கள் பாடசாலையினை இலண்டனில் இவ்வாறு செய்து பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவினை தெரிவித்தார்கள். பிரான்சில் இருக்கும் இளைஞர்களைக் காப்பாற்றிட முன்வாருங்கள் நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பொன்னானது.

    இத் தகவலை பார்த்தவுடன் தங்களது உறவினர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு வேண்டப்படுகிறார்கள். எஸ் எம் எஸ் -தொலைபேசி மூலமாகவோ ஈ மெயில் மூலமாகவோ தொடர்பு கொண்டு பிரான்சிலுள்ளவர்களும் பிரான்சு தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளோர்களும் தங்கள் உறவுகளுக்க தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தமிழன்ரிவி
    தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

    Reply
  • மாயா
    மாயா

    முட்டாள்களை உருவாக்கினால்தான், இந்த முட்டாள்களால் வாழமுடியும்.
    2 நாள் பள்ளிக்கு கட் அடித்தால், அதன் பிறகு குழந்தைகள் அந்த இனிய சுகத்தில் பள்ளியை மறந்திடும். தமக்காக குழந்தைகள் மனதை கெடுப்பதற்காக தமிழ் கல்வி என்ற பெயரில் பள்ளிகள். நாட்டிய – இசை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தி மக்களை ஏமாற்றியவர்கள், வன்னிக் குழந்தைகளை கெட வைத்தது போதாதென்று இங்கும் துவங்குகிறார்கள். பெற்றோர்களே கவனம்.

    கனடாவில் இளம் வயதினரை உசுப்பேத்திய நிகழ்வில் கனடா போலீசாரால் இளவயதினர் கைதாவதை. இதை நடத்துவோர் பின்னாலிருந்து நடத்திவிட்டு மறைந்து விடுகின்றனர். அப்பாவிகள் வாழ்வை அஸ்தமனமாக்கிக் கொள்கின்றனர். இவர்களது கபட நாடகங்களுக்கு பலியாக உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம். வன்னி குழந்தைகள் நடுத் தெருவில் நடைப் பிணமாகியதை புலத்திலும் தொடர்வதே புலிகளின் நோக்கம்.

    Reply
  • kalahthar
    kalahthar

    கருனா அம்மான் சிங்களவனோட சேந்தபோது, ஏன் அப்படி செய்தார் என்று யோசித்து யோசித்து தலை விறைத்துப்போனது், எத்தனை வருடமானாலும் கானுமிடத்தில் அடித்துக் கொல்லவதுதான் சரி என்றும் நினைத்தேன், ஆனால் இப்போது தான் ஏன் அப்படி செய்தார் என்று தெரிகிறது.

    Reply
  • மாயா
    மாயா

    //kalahthar on May 3, 2009 5:27 pm கருனா அம்மான் சிங்களவனோட சேந்தபோது, ஏன் அப்படி செய்தார் என்று யோசித்து யோசித்து தலை விறைத்துப்போனது், எத்தனை வருடமானாலும் கானுமிடத்தில் அடித்துக் கொல்லவதுதான் சரி என்றும் நினைத்தேன், ஆனால் இப்போது தான் ஏன் அப்படி செய்தார் என்று தெரிகிறது.//

    அதற்கான ஆட்கள் இப்போது குண்டுகளோடு குண்டாக நிற்கிறார்கள்.kalahthar இராணுவம் அதைப் பார்த்துக் கொள்ளும். நீங்கள் கொலையாளி ஆக மாட்டீர்கள்? புத்தியுள்ள எவராலும் இவனுகளோடு நிற்கேலாது. புத்தி சுவாதீனமான ஆட்கள் மட்டுமே நிற்கலாம்.

    Reply
  • john
    john

    //பிரான்சு இளையோர்களே பாடசாலைக்கு போவதை வருகிற புதன்கிழமைவரை பகிஸ்கரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள.//
    இவர்கள் சொல்வதை கேட்டு எமது பிள்ளைகளை பாடசாலை அனுப்பாமல் விடுவதற்கு நாம் மரமண்டைகள் அல்ல.
    இவர்களின் சொற்படி நடந்து மக்கள் மரணம் தொடர்வதற்கு நாம் மனிதாபிமானம் அற்றவர்களும் அல்ல.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    லண்டனில பள்ளிக்குள்ளயும் படம் காட்டத் தொடங்கிட்டாங்க. ஜனநாயகம் பிழைக்கும்…………

    Reply
  • நண்பன்
    நண்பன்

    லண்டன் பள்ளிக்கூடங்களுக்குள் பிணம் தின்னிகள் நுழைந்து படம் காட்டத் தொடங்கிட்டினம். அது உலகம் முழுவதும் பரவும் அபாயம் உண்டு. வன்னியில இப்படித்தான் புள்ளை புடிகாரங்கள் நுழைந்தவை. பின்னர் புலிகளில் குழழந்தைகள் இணைந்தன.

    அல்கய்தாவின் நிலமைக்கு தமிழ் குழந்தைகளை கொண்டு போகும் முயற்சி இது.
    பெற்றோர்களே, பாடசாலை நிர்வாகங்களுக்கு நடக்கப் போவதை ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தி இவற்றை முளையிலேயே நிறுத்துங்கள்.

    இல்லையென்றால், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் செய்யும் பயங்கரவாதங்கள் போல், எம் தமிழ் குழந்தைகளும் ஈடுபடும் அபாயம் உண்டு. அதன்பின் உங்கள் குழந்தைகளை சிறைகளில்தான் சந்திக்க வேண்டிவரும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து அதே தினத்தில் சிங்களள மக்கள் போராட்டம் என்றும் நடத்தியதில்லை. ஆனால் சிங்கள மக்கள் எப்போது போராட்டம் நடாத்தினாலும், அதை எதிர்த்து அதே தினத்தில் போராட்டம் நடத்த உந்தப் புலன் பெயர்ந்ததுகள் தவறியதில்லை. உவை எல்லாவற்றையும் பார்த்து விட்டுத்தான் சில வெள்ளைகள் நேரடியாகவே நம்ம புலன் பெயர்ந்ததுகளுக்குச் சொன்னார்கள் “நீங்கள் வந்த இடத்திலேயே இவ்வளவு அட்டகாசம் பண்ணுகின்றீர்கள் என்றால் சொந்த நாட்டில் சும்மா இருந்திருப்பீர்களா” என்று.

    Reply
  • VIVEKA
    VIVEKA

    யாழ்ப்பாணத்தாருக்கு யார் எதிரி? சிங்களவனா? இஸ்லாமியரா? மட்டக்களப்பானா? இன்னுமா நாம் புரிந்துகொள்ளவில்லை? நம்மோடு கூடப்பிறந்திருக்கும் பேராசையும் பொறாமையும்தான் நமக்கு எதிரி. வாழு வாழ விடு. நாம் வாழவும்மாட்டோம் வாழவிடவும்மாட்டோம். நன்றி மறப்பது நம்மில் பலரது வாடிக்கை.

    Reply
  • Raj
    Raj

    விவேகா நல்ல துணிச்சலான சிந்தனையும் கருத்தும் என்ற வகையில் பாராட்டுக்கள்.இந்த நிலையில் தமிழனாகிய நம் ஒவ்வொருவரினதும் மனத்திலே கேள்வியாக இவை எழுந்து பரிகாரம் தேட தலைப்பட்டாலே போதும் எம்மக்கள் வாழ்வு வளம்பெறும்.அதுவே இன்றைய தேவையுமாகும்.

    Reply
  • மாயா
    மாயா

    //பார்த்திபன் on May 6, 2009 1:48 am தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து அதே தினத்தில் சிங்களள மக்கள் போராட்டம் என்றும் நடத்தியதில்லை. ஆனால் சிங்கள மக்கள் எப்போது போராட்டம் நடாத்தினாலும், அதை எதிர்த்து அதே தினத்தில் போராட்டம் நடத்த உந்தப் புலன் பெயர்ந்ததுகள் தவறியதில்லை. உவை எல்லாவற்றையும் பார்த்து விட்டுத்தான் சில வெள்ளைகள் நேரடியாகவே நம்ம புலன் பெயர்ந்ததுகளுக்குச் சொன்னார்கள் “நீங்கள் வந்த இடத்திலேயே இவ்வளவு அட்டகாசம் பண்ணுகின்றீர்கள் என்றால் சொந்த நாட்டில் சும்மா இருந்திருப்பீர்களா” என்று.//

    புலத்துப் புலிகள் வேறு எவரையும் எந்தவொரு விழாவையோ அல்லது மக்கள் மனங்களை வெல்லும் ஊடகமொன்றையோ அல்லது உழைக்கும் தொழிலையோ செய்ய விட்டதே இல்லை.

    ஒரு விழா நடக்கும் என்றால் அதற்கு யாரையும் போகவிடாமல் தடுக்க அதே நாளில் அவர்கள் ஒரு விழாவை செய்வார்கள்.
    ஒரு வானோலி /பத்திரிகை / தொலைக்காட்சி எது செய்தாலும் அதை பாழடிக்க இன்னொன்றை கொண்டு வருவார்கள். அல்லது அதை தாங்களே எடுத்துக் கொள்வார்கள். வியாபாரங்களைக் கூட விட்டதில்லை…… எதுவானால்ம் தம்மால் அதைவிட செய்ய முடியும் என்று செய்வோர் இவர்கள்.

    அதையே சிங்களவர் செய்த போராட்டத்தை மழுங்கடிக்க அவுஸ்திரேலியாவில் அதே போல் ஒரு நிகழ்வை செய்யப் போனது மட்டுமல்லாமல் , அவர்களுக்கு முன்னால் படங்காட்டப் போய் அடி வாங்கி நாத்திக் கொண்டார்கள்.

    அங்கே சிங்களவருக்கு சார்பான ஊடகவியாளர்கள் சிங்கள எதிர்ப்பு போராட்டத்துக்கு வந்திருந்தமையால் , அன்று புலிகளது நடத்திய முட்டாள் தனத்தை வைத்து புலிகளை வெறுத்தும் போகும்படி எழுதி நாத்தியே விட்டனர்.

    இவர்களது தொடர் போராட்டங்கள் உலகெங்கும் நாறிப் போனதற்கு ஏதாவது உணர்ச்சி வசமான கட்டுப்பாடற்ற தன்மைகளே காரணமாயின. அதனால் கைதுகளும் நடந்தே உள்ளது.

    Reply